TASMAC: வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் குடிமகன்கள் டாஸ்மாக் கடைகளுக்கு சென்று மதுபான வகைகளை விட அதிகளவில் கூலிங் பீரையே வாங்குகின்றனர்.
தமிழகம் முழுவதும் 38 மாவட்டங்களில் 4829 டாஸ்மாக் கடைகள் மற்றும் பார்கள் செயல்பட்டு வருகின்றன. நாள் ஒன்றுக்கு சுமார் 100 கோடி அளவுக்கு மது விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதுவும் வார விடுமுறை நாட்களான சனி, ஞாயிறு கூலி வேலை செய்பவர்களின் சம்பள நாள் என்பதால் விற்பனை இரட்டிப்பாகும். குறிப்பாக பொங்கல், தீபாவளி, புத்தாண்டு போன்ற பண்டிகை நாட்களில் இலக்கு நிர்யணம் செய்யப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது. இதில் வரும் வருமானத்தை வைத்து தான் அரசு திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது.
25
சுட்டெரிக்கும் வெயில்
இந்நிலையில் தற்போது பிப்ரவரி மாதத்திலேயே எதிர்பாராத வகையில் வெயில் சுட்டெரித்து வருகிறது. பல்வேறு இடங்களில் மார்ச் மாதத்திலேயே 100 டிகிரியை தாண்டி வெயில் கொளுத்தி வருகிறது. அதாவது வேலூர், ஈரோடு, கரூர், ஈரோடு, பரமத்திவேலூர் உள்ளிட்ட இடங்களில் 100 டிகிரிக்கு மேல் வெயில் வாட்டி வதைத்து வருகிறது.
35
அதிகளவில் விற்பனையாகும் கூலிங் பீர்
சென்னை, திருச்சி, சேலம் போன்ற இடங்களில் 100 டிகிரிக்கு குறைவாக பதிவாகி வருகிறது. தமிழகம் முழுவதும் வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் வெயிலை தாங்க முடியாமல் குடிமகன்கள் டாஸ்மாக் கடைகளுக்கு சென்று மதுபான வகைகளை விட அதிகளவில் கூலிங் பீரையே விரும்பி வாங்குகின்றனர். இதனால் பீர் விற்பனை அதிகரித்துள்ளது.
இதுகுறித்து டாஸ்மாக் ஊழியர்கள் கூறுகையில்: ஆண்டுதோறும் அக்டோபர், நவம்பர், டிசம்பர், ஜனவரி மாதங்களில் பீர் வகைகளைவிட சரக்கு வகைகளின் விற்பனை அதிகரிக்கும். அதே நேரத்தில் மார்ச், ஏப்ரல், மே மாதங்களில் சரக்கு வகைகளைவிட பீர் வகைகளின் விற்பனை அதிகமாக இருக்கும். நடப்பாண்டு பிப்ரவரி மாத இறுதியிலேயே வெயில் வாட்டி வதைக்க தொடங்கியதால் விஸ்கி, பிராந்தி வகைகளை விட மதுப்பிரியர்கள் பீர் போன்ற மதுவகைகளை அதிகளவில் வாங்கி செல்கின்றனர். குறிப்பாக இரவு 7 மணி முதல் 9 மணி வரை பீர் விற்பனை அதிகமாக உள்ளது.
55
கடை ஊழியர்களிடம் வாக்குவாதமும்
டாஸ்மாக் கடைகளில் உள்ள ஃபிரிட்ஜ்கள் பழையதாகவும், பல ஃபிரிட்ஜ்கள் பழுதானதாகவும் இருந்ததால் கூலிங் பீர் கொடுக்க முடியாத நிலைக்கு டாஸ்மாக் கடை ஊழியர்கள் தள்ளப்பட்டனர். இதனால், குடிமகன்களுக்கும், கடை ஊழியர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு வருகிறது. எனவே, பழைய ஃபிரிட்ஜ்களை ஓரங்கட்டிவிட்டு புதிய ஃபிரிட்ஜ்களை கொடுக்க வேண்டும் என ஊழியர்கள் தரப்பில் இருந்து நிர்வாகத்திற்கு கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. இதனால் விரைவில் அனைத்து டாஸ்மாக் கடைகளிலும்‘கூலிங் பீர்’ கிடைப்பதால் குடிமகன்கள் மகிழ்ச்சியடைத்துள்ளனர்.