நட்சத்திர விடுதி- அடையார் கேட் மூடல்
சென்னையில் உள்ள மிகவும் பிரபலமான, பழமையான நட்சத்திர விடுதிகளில் அடையார் கேட் என அழைக்கப்படும் கிரவுன் பிளாசாவும் ஒன்று. நகரின் முக்கியமான இடமான ஆழ்வார்பேட்டை சேமியர்ஸ் சாலையில் சுமார் ஒன்றரை ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. தொழிலதிபரான T.T.வாசு அடையார் கேட் எனும் பெயரில் முதன் முதலில் ஹோட்டல் தொடங்கினார்.
அதன் பின்னர் கோயல் குழுமத்திற்கு விற்கப்பட்டது. அதன் பின்னர், இதை வாங்கிய பிரபல ஐடிசி நிறுவனம், பார்க் ஷெரட்டன் எனவும், பின்னர் கிரவுன் பிளாசா எனவும் பெயரை மாற்றியது. எத்தனை பெயர்கள் மாறினாலும், காலங்கள் மாறினாலும், இன்றளவும் நட்சத்திர விடுதி அமைந்துள்ள பகுதியை அடையார் கேட் என்றே அழைக்கப்படுகிறது.