இந்த ஆண்டு தொடக்கத்தில் தனது தமிழக வெற்றி கழகம் கட்சியின் அறிவிப்பை அவர் வெளியிட்ட பிறகு கடந்த ஆகஸ்ட் மாதம் 15 ஆம் தேதி அக்கட்சியின் கொடி தமிழக மக்களுக்கு அறிமுகம் செய்து வைக்கப்பட்டது கட்சியின் பாடலும் வெகுவாக பலர் கவனத்தை ஈர்த்தது தொடர்ச்சியாக தமிழ் திரையுலகில் சேர்ந்த பலரும் விஜய்க்கு தங்களுடைய ஆதரவுகளை தெரிவித்து வருகின்றனர் குறிப்பாக தளபதி விஜய் ஓட ஒரு சில திரைப்படங்களில் நடித்து பிரபலமான நடிகர் தாடி பாலாஜி அக்கட்சியின் துணை பொதுச்செயலாளர் புசி ஆனந்த் தலைமையில் தமிழக வெற்றிக்கழகம் கட்சியின் இணைந்தார் தற்பொழுது அக்கட்சியின் மாநில மாநாட்டிற்கான பணிகளில் அவர் தீவிரமாக ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது.