தமிழகத்தில் 9 மாவட்டங்களில் 16 மற்றும் 17ம் தேதிகளில் கனமழை பெய்ய வாய்ப்பு - வானிலை மையம் எச்சரிக்கை

First Published Dec 13, 2023, 2:30 PM IST


தமிழகத்தில் ராமநாதபுரம், திருநெல்வேலி, புதுக்கோட்டை உள்ளிட்ட 9 மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் அரபிக்கடல் பகுதியில் நாளை முதல் வருகிற 16 ஆம் தேதி வரை மீன் பிடிக்க செல்ல வேண்டாம் எனவும் மீனவர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. 

Chennai rain

தமிழகத்தில் மழை வாய்ப்பு

தமிழகத்தில் வரும் நாட்களில் எந்த எந்த மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.  இது தொடர்பாக வெளியிடப்பட்ட அறிக்கையில், கிழக்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, இன்று மற்றும் நாளை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். வருகிற 15.12.2023: தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடிமின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

Heavy Rain

9 மாவட்டங்களில் கன மழை

மேலும் 16.12.2023 மற்றும் 17.12.2023: தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, இராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.

Latest Videos


Tamilnadu Rains

சென்னை வானிலை முன்னறிவிப்பு:

அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 30 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 23 டிகிரி செல்சியஸாகவும் இருக்கக்கூடும்.
 

kerala rain alerts

மீனவர்களுக்கான எச்சரிக்கை: 
அரபிக்கடல் பகுதிகள்:

14.12.2023 முதல் 16.12.2023 வரை: குமரி கடல் மற்றும் அதனை ஒட்டிய மாலத்தீவு பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். மேற்குறிப்பிட்ட நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்தப்படுவதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. 

click me!