ஸ்டாலினை எவனாவது ஏற்றுக் கொள்வானா..? மு.க.அழகிரி எடுத்த ஷாக் முடிவு... இன்ப அதிர்ச்சியில் அதிமுக..!

Published : Feb 17, 2026, 04:26 PM IST

இன்றைக்கு கலைஞர் இல்லாமல் அவர்கள் கட்சி நடத்துகிறார்கள். கலைஞரையே மறந்து விட்டார்கள். நாம் அவர்களுக்கு கலைஞரை நினைவு படுத்த வேண்டும். இப்போது வருவேனா? இப்போ எப்போது அறிவிப்பேன்? என்றெல்லாம் சொல்ல முடியாது.

PREV
15
கதவை சாத்திய திமுக

திண்டுக்கல், தேனி, மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் என தென் மாவட்டங்களில் மு.க.அழகிரிக்கு மிகப்பெரும் ஆதரவாளர் வட்டம் இருந்தது. இதற்கிடையே கருணாநிதிக்கு பிறகு ஸ்டாலின் தான் அரசியல் வாரிசு என்பதை உணர்ந்த பல திமுக புள்ளிகள் ஸ்டாலின் பக்கம் சாய்ந்து விட்டனர். இடையில் நாளேடு ஒன்றின் கருத்துக்கணிப்பு திமுகவில் மிகப்பெரிய புகைச்சலை ஏற்படுத்தியது. அதற்குப் பிறகு நடந்த சம்பவங்கள் தமிழக அரசியலில் மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதனால் 2014ம் ஆண்டு திமுகவில் இருந்து நீக்கப்பட்டார் மு.க.அழகிரி.

மு.க.அழகிரி, ஆதரவாளர்களும் திமுகவில் இருந்து 2014-ல் அவருடன் சேர்த்து நீக்கப்பட்டனர். அவர்களில் சிலர் தற்போது திமுகவில் மீண்டும் இணைய முயற்சி செய்தனர், ஆனால் ஸ்டாலின் தரப்பில் தெளிவான பதில் இல்லாததால் சிலர் மாற்று பாதையைத் தேடுகின்றனர்.

25
தென் மாவட்டங்களில் தாக்கம்

மு.க.அழகிரியின் மிக நெருங்கிய ஆதரவாளரும், வலதுகரம், நிழல் என்று அழைக்கப்பட்டவருமான பி.எம்.மன்னன் தனது ஆதரவாளர்களுடன் அதிமுகவில் இணைந்துள்ளார். இது மதுரை அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஏனெனில், அழகிரி ஆதரவாளர்கள் திமுகவின் எதிர்க்கட்சியான அதிமுகவில் சேர்வது அரிதான திருப்பமாகப் பார்க்கப்படுகிறது. ஸ்டாலின் தரப்பில் வாய்ப்புகள் மறுக்கப்பட்டதால் அதிமுகவைத் தேர்ந்தெடுத்ததாக மன்னன் தரப்பில் கூறப்படுகிறது. 2026 சட்டமன்றத் தேர்தலுக்கு முன் தென் மாவட்டங்களில் இது தாக்கத்தை ஏற்படுத்தலாம்.

35
கண்டு கொள்ளப்படாத மு.க.அழகிரி விசுவாசிகள்

இது குறித்து மு.க.அழகிரி ஆதரவாளர்கள் கூறுகையில், ‘‘சில மாதங்களுக்கு முன், அழகிரி வீட்டுக்கு வந்த துணை முதல்வர் உதயநிதி, முதல்வர் ஸ்டாலின் ஆகியோரிடம், 'என் ஆதரவாளர்களை மீண்டும் கட்சியில் சேர்க்க வேண்டும் என வலியுறுத்தினார். ஆனால், கட்சியில் சேர்க்காததால், இனியும் திமுகவை நம்பியிருந்தால் அரசியல் எதிர்காலம் இல்லை என முடிவுக்கு வந்த அழகிரியின் ஆதரவாளர்கள், தொழிலதிபர் ஒருவர் வாயிலாக அதிமுக பொதுச்செயலர் பழனிசாமி தரப்பில் பேச்சு நடத்தினர். அவரும் கிரீன் சிக்னல் கொடுத்ததால் பலரும் அதிமுகவில் இணைய முடிவெடுத்துள்ளனர்

அழகிரியின் பழைய ஆதரவாளர்களான இசக்கி முத்து, முபாரக் மந்திரி, திருப்பரங்குன்றம் கார்த்திகேயன் போன்றோர் நீக்கப்பட்டவர்கள். அதில் கார்த்திகேயன் தவெகவில் இணைந்து விட்டார். ஆனால், அதிமுகவில் இணைந்த முக்கிய எடுத்துக்காட்டு தற்போது பி.எம்.மன்னன் மட்டுமே. வேறு கட்சிகளுக்கு சென்ற

யாரையெல்லாமோ, முதல்வர் ஸ்டாலின் மீண்டும் திமுகவில் சேர்க்கிறார். மதிமுக பொதுச்செயலர் வைகோ பேசியதை மறந்து, அக்கட்சியுடன் கூட்டணி வைத்துள்ளார். ஆனால், 12 ஆண்டுகளாக மாற்றுக் கட்சிக்கு செல்லாமல், திமுக விசுவாசிகளாக தொடரும் எங்களை கண்டுகொள்ளவில்லை.

45
மு.க.அழகிரியின் முக்கிய முடிவு

மதுரை திமுக முன்னாள் அவைத்தலைவர் இசக்கிமுத்து, சில நாட்களுக்கு முன் சென்னையில் முதல்வர் ஸ்டாலினை சந்தித்தார். அப்போது, அமைப்பு செயலர் பாரதியை அழைத்த ஸ்டாலின், 'கட்சியில் மீண்டும் சேர்ப்பது குறித்து மாவட்டச் செயலர் தளபதியிடம் பேசுங்கள் என கூறினார். அண்மையில் மதுரை வந்த ஸ்டாலினை, மதுரை முன்னாள் துணை மேயர் மன்னன் நேரில் சந்தித்து மன்னிப்பு கடிதம் அளித்தார். ஆனாலும், மீண்டும் சேர்ப்பதற்கான அறிகுறி இல்லை. தற்போது அதிமுகவில் சேர்ந்து வருகிறோம்’’ என்கின்றனர்.

இந்த அதிமுக இணைப்பு மு.க.அழகிரி சம்மதத்துடன் நடந்துள்ளதாகக் கூறப்படுகிறது. சட்டசபை தேர்தலுக்குள் சில முக்கிய முடிவு மு.க.அழகிரி தரப்பு எடுக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் அவரது ஆதரவாளர்கள் மு.க.அழகிரி பேசிய வீடியோ ஒன்றையும் வெளியிட்டுள்ளனர்.

55
மு.க.அழகிரி மனவேதனை

அதில், ‘‘கட்சிக்காரர்களுக்கு எத்தனையோ நன்மை செய்திருக்கிறேன். எத்தனையோ பேரை அமைச்சர்கள் ஆக்கியிருக்கிறேன். எவனுக்கும் நன்றி கிடையாது. எல்லாம் கோடிஸ்வரன் ஆகிவிட்டான். இன்னைக்கு நீங்கள் எல்லாம் எப்படி வந்திருக்கிறீர்கள்? நான் காசு கொடுத்தேனா? குவாட்டருக்கும், பிரியாணிக்கும் நான் ரூபாய் கொடுத்தேனா? அசிங்கமாக இருக்கிறது. திமுகவில் 15 நாட்களுக்கு முன்பாக மாவட்டக் கழக செயலாளர்கள் கூட்டத்தில் ஒருத்தர் பேசுகிறார், ‘‘ஸ்டாலின், கலைஞரை மிஞ்சிவிட்டார் என்கிறார்.

இதை எவனாவது ஏற்றுக் கொள்வானா? கலைஞருக்கு இருக்கக்கூடிய அறிவு எவனுக்கு இந்த நாட்டில் இருக்கு, உலகத்தில் இருக்கு. கலைஞருடைய எழுத்து, கலைஞருடைய பேச்சு, கலைஞருடைய கலை, கலைஞருடைய இலக்கியம் இதெல்லாம் யாரிடம் இருக்கிறது? நாடகத்திலும் சரி, பேச்சிலும் சரி, ராஜா தந்திரத்திலும் சரி அவரை போல வருவதற்கு ஒருத்தன் பிறக்க வேண்டும். இனி ஒருத்தன் பிறக்க முடியாது. 

இன்றைக்கு கலைஞர் இல்லாமல் அவர்கள் கட்சி நடத்துகிறார்கள். கலைஞரையே மறந்து விட்டார்கள். நாம் அவர்களுக்கு கலைஞரை நினைவு படுத்த வேண்டும். இப்போது வருவேனா? இப்போ எப்போது அறிவிப்பேன்? என்றெல்லாம் சொல்ல முடியாது. காலதாமதம் ஆகும். ஆரம்பிப்பேனா? ஆரம்பிக்க மாட்டேனா? என்பதை சொல்கிறேன்’’ என பேசிய வீடியோவும் வைரலாகி வருகிறது.

Read more Photos on
click me!

Recommended Stories