ஆம்னி பேருந்து ஆற்று பாலத்தில் தடுப்பை உடைத்து தொங்கிய பேருந்து.. தூக்கித்தில் இருந்த 40 பயணிகளின் நிலை என்ன?

Published : Dec 20, 2025, 09:48 AM IST

விழுப்புரம் விக்கிரவாண்டி அருகே, அதிவேகமாக சென்ற ஆம்னி பேருந்து கட்டுப்பாட்டை இழந்து சங்கராபரணி ஆற்றுப் பாலத்தின் தடுப்பை உடைத்து தொங்கியது. இந்த கோர விபத்தில் 40 பயணிகள் பயணித்த நிலையில், காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

PREV
13
ஆம்னி பேருந்து விபத்து

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அடுத்த பேரணி அருகே சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் இன்று அதிகாலை அதிவேகமாக சென்ற ஆம்னி பேருந்து ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சங்கராபரணி ஆற்று பாலத்தில் தடுப்பை உடைத்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் பேருந்து தொங்கியது.

23
40 பயணிகள் காயம்

இந்த கோர விபத்தில் பேருந்தின் முன் பகுதி நொறுங்கியது. அதிகாலை நேரம் என்பதால் ஆழ்ந்த தூக்கத்தில் இருந்த 40 பயணிகள் அலறி கூச்சலிட்டனர். பேருந்து விபத்து தொடர்பாக போலீசாருக்கும் மற்றும் மீட்புக் குழுவினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் காயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

33
பேருந்தை மீட்கும் பணிகள்

விபத்து தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில் ஓட்டுநர் அதிவேகமாக பேருந்தை இயக்கியதே விபத்துக்கு காரணம் என தெரியவந்துள்ளது. காவல்துறை தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பாலத்தின் மையத் தடுப்பில் சிக்கியுள்ள பேருந்தை மீட்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. அதிகாலை நேரத்தில் விபத்து ஏற்பட்டதை அடுத்து அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Read more Photos on
click me!

Recommended Stories