சென்னை விமான நிலையத்தில் பரபரப்பு! அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய 102 பயணிகள்! நடந்தது என்ன?

Published : Mar 30, 2025, 01:47 PM ISTUpdated : Mar 30, 2025, 03:09 PM IST

SpiceJet emergency landing: ஜெய்ப்பூரிலிருந்து சென்னை வந்த விமானத்தின் டயர் தரையிறங்கும் முன் வெடித்தது. விமானியின் திறமையால் 102 பயணிகள் உயிர் தப்பினர். விமானம் தாமதமானதால் பயணிகள் அவதி.

PREV
14
சென்னை விமான நிலையத்தில் பரபரப்பு! அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய 102 பயணிகள்! நடந்தது என்ன?
சென்னை விமான நிலையம்

தமிழகத்தில் சென்னை விமான நிலையம் மீனம்பாக்கம் திரிசூலம் பகுதியில் அமைந்துள்ளது சர்வதேச விமான நிலையம். இந்த விமான நிலையம் எப்போதும் பரபரப்பாக காணப்படும். இங்கு இருந்து பல்வேறு நாடுகள் மற்றும் மாநிலத்திற்கு விமானங்கள் இயக்கப்படுகின்றன. 

24
ஸ்பைஸ் ஜெட் விமானம்

இந்நிலையில் ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரிலிருந்து 102 பயணிகளுடன் புறப்பட்டு சென்னைக்கு இன்று காலை ஸ்பைஸ்ஜெட் விமானம் வந்துக்கொண்டிருந்தது. அப்போது ஸ்பைஸ்ஜெட் விமானம் தரையிறக்கப்படுவதற்கு முன் அதன் டயரில் கோளாறு ஏற்பட்டிருப்பதை விமானி கண்டறிந்துள்ளார்.

இதையும் படிங்க: சென்னை மக்களுக்கு அதிர்ச்சி செய்தி! இனி வெயில் 100 டிகிரிக்கு மேல் சுட்டெரிக்கப்போகுதாம்!

34
டயரில் கோளாறு

அதனைத் தொடர்ந்து அவர் விமான நிலைய அதிகாரிகளுக்கு இது குறித்து உடனே தகவல் தெரிவித்துள்ளார். நீண்ட நேரம் வானில் வட்டமடித்துக் கொண்டிருந்தது. பின்னர் ஓடுதளத்தில் உரிய முன்னேற்பாடுகளுடன் விமான நிலைய பணியாளர்கள் இருந்த நிலையில் விமானி அசம்பாவிதம் இன்றி விமானத்தை பத்திரமாக தரையிறக்கினார். 

44
அதிர்ஷ்டவசமாக 102  பயணிகள் உயிர் தப்பினர்

அதன்பின் விமானத்தின் டயர்களை பரிசோதித்ததில் 2-வது சக்கரத்தின் டயர் வெடித்து இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. விமானியின் சாமர்த்தியத்தால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டு அதிர்ஷ்டவசமாக 102  பயணிகள் உயிர் தப்பினர். விமானம் உடனடியாக தூத்துக்குடி செல்ல இருந்த நிலையில் தாமதத்தால் பயணிகள் பெரும் அவதிக்குள்ளாகினர். 

Read more Photos on
click me!

Recommended Stories