கடந்த சட்டப்பேரவையில் ஆவடி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று பால்வளத்துறை அமைச்சராக நாசர் இருந்து வருகிறார். இவர் அவ்வப்போது சர்ச்சையில் சிக்குவதை வழக்கமாக கொண்டுள்ளார். அண்மையில் அமைச்சர் நாசர் அமர நாற்காலி எடுத்து வருமாறு கட்சி நிர்வாகியிடம் கூறியுள்ளார்.
கட்சி நிர்வாகி நாற்காலியை எடுத்து வர தாமதமானதால் ஆத்திரமடைந்த அமைச்சர் நாசர் கட்சி நிர்வாகி மீது கல் வீசியுள்ளார். இது தொடர்பான வீிடியோ காட்சிகள் வைரலாகி அரசியல் கட்சி தலைவர் தனது கண்டனத்தை தெரிவித்தனர்.
இந்நிலையில் ஆவடி மற்றும் திருமுல்லைவாயில் சுற்று வட்டாரத்தில் சுற்றுவட்டாரத்தில் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக தமிழக பால்வளத்துறை அமைச்சர் நாசர் காரில் சென்றுக்கொண்டிருந்தார். திருமுல்லைவாயில் காவல் நிலையம் அருகே பசு மாடு ஒன்று விபத்தில் சிக்கி படுகாயங்களுடன் துடித்து கொண்டிருந்தது.
அதனை கண்ட அமைச்சர் நாசர் உடனடியாக காரை நிறுத்தி கால்நடை மருத்துவர்களை சம்பவ இடத்திற்கு வரவழைத்தார். மருத்துவர்கள் முதலுதவி சிகிச்சை அளித்தும் பசுவின் உடல்நிலையில் முன்னேற்றம் இல்லாததால் அந்த வழியாக சென்ற டாட்டா ஏசி வாகனத்தை நிறுத்தி வேப்பேரி கால்நடை மருத்துவமனைக்கு பசுமாட்டை அனுப்பி வைத்தார்.