தமிழ்நாடு மின்சார வாரியத்துறையின் கீழ் செயல்படும் துணை மின்நிலையங்களில் மாதாந்திரப் பராமரிப்பு காரணமாக அவ்வப்போது மின் விநியோகம் நிறுத்தப்படுவது வழக்கமான ஒன்றாகும். அதன்படி இன்றைய தினம், சென்னையின் முக்கிய இடங்களில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணிவரை மின் தடை ஏற்படும் என்று மின்சார வாரியம் அறிவித்துள்ளது.
பம்மல் :
எச்எல் காலனி, பாம்பொன் நகர், நேரு நகர், வெங்கடேஸ்வரா நகர், அகத்தீஸ்வரர் நகர், விமன் நகர், லட்சுமி நகர், எம்ஜிஆர் தெரு, டிடிகே நகர், டாக்டர்.ராதாகிருஷ்ணன் சாலை, பாரதி நகர்.
போரூர்:
லட்சுமி அவென்யூ, ராமச்சந்திரா நகர், சுப்பையா நகர், முகலிவாக்கம் மெயின் ரோடு, முத்து மாரியம்மன் நகர், ஐயப்பன்தாங்கல் மவுண்ட் பூந்தமல்லி சாலை, முருகன் கோயில் தெரு, அம்மன் நகர், இந்திரா நகர், சொர்ணபுரி நகர், திருமுடிவாக்கம் பழந்தண்டலம் கிராமம், அண்ணாநகர், பூந்தண்டலம், மாங்காடு நெல்லித்தோப்பு மகாலட்சுமி நகர், குரு அவென்யூ, மாசிலாமணி நகர், கொழுமணிவாக்கம் பகுதி, ராஜீவ் நகர், குன்றத்தூர் மெயின் ரோடு, கே.கே.நகர், கோவூர் புருஷோத்தம்மன் நகர், அம்பாள் நகர், ஆனந்த விநாயகர் கோயில் தெரு, காவனூர் சேக்கிழார் நகர், மலையம்பாக்கம், ஜெயம் நகர் மற்றும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும் அடங்கும்.
கிண்டி:
டிஜி நகர் டிஎன்ஜிஓ காலனி, ஜீவன் நகர், முருகன் நகர், பார்த்தசாரதி நகர், புழுதிவாக்கம் என்எஸ்சி போஸ் சாலையின் ஒரு பகுதி, பாலம்மாள் நகர், சுவாமி நகர், ஆதம்பாக்கம் கக்கன் நகர், அம்பேத்கர் நகர், திருவள்ளுவர் தெரு, வானுவம்பேட்டை முத்தையல் நகர், மேடவாக்கம் மெயின் ரோடு மற்றும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும் அடங்கும். மதியம் 2.00 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும் என மின்வாரியம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.