Electric Train: எழும்பூர் ரயில் நிலையத்தில் 734.91 கோடி ரூபாயில் மதிப்பீட்டில் மேம்பாட்டு பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதன் காரணமாக மின்சர ரயில் சேவையில் மாற்றம்.
நாடு முழுவதும் ரயில் சேவை முக்கிய பங்கு வகிக்கிறது. குறைவான கட்டணம், பாதுகாப்பான பயணம் என்பதால் பேருந்து சேவவையை விட அதிகளவில் ரயில் சேவையை விரும்புகின்றனர். குறிப்பாக தமிழகத்தை பொறுத்த வரையில் சென்னையில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் மின்சார ரயில் முக்கிய பங்கு வகிக்கிறது. சென்னை கடற்கரை - தாம்பரம் - செங்கல்பட்டு இடையே 200க்கும் மேற்பட்ட ரயில்கள் தினமும் இயக்கப்பட்டு வருகிறது.
25
எழும்பூர் ரயில் நிலையம் மேம்பாட்டு பணிகள்
அதுமட்டுமல்லாமல் எந்தவொரு டிராபிக் இல்லாமலும் குறிப்பிட்ட நேரத்திற்குள் அலுவலகங்களுக்கு சென்றடைய முடியும். பள்ளி, கல்லூரி செல்லும் மாணவ, மாணவிகள் மற்றும் வியாபாரிகள் என லட்சகக்கணக்கான மக்கள் பயனடைந்து வருகின்றனர். சென்னை புறநகர் பகுதியை இணைப்பதில் மின்சார ரயில் சேவை முக்கிய பங்கு வகிக்கிறது. இந்நிலையில் எழும்பூர் ரயில் நிலையத்தில் 734.91 கோடி ரூபாயில் மதிப்பீட்டில் மேம்பாட்டு பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதன் காரணமாக மின்சர ரயில் சேவையில் அதிரடி மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
35
தெற்கு ரயில்வே
இதுதொடர்பாக தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள அறிவிப்பில்: சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் மறுசீரமைப்பு பணி காரணமாக மின்சார ரயில் சேவையில் தற்காலிகமாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது. எழும்பூர் ரயில் நிலைய 10, 11வது நடைமேடைகளில் இருந்து இயக்கப்பட்ட மின்சார ரயில்கள் வரும் 20ம் தேதி முதல் 45 நாட்களுக்கு 5 மற்றும் 6வது நடைமேடைகளில் இருந்து புறப்படும்.
சென்னை கடற்கரையில் இருந்து தாம்பரம், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், அரக்கோணம் செல்லும் ரயில்கள் நடைமேடை 6ல் இருந்து இயக்கப்படும். அரக்கோணம், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, தாம்பரத்தில் இருந்து சென்னை கடற்கரை செல்லும் ரயில்கள் நடைமேடை 5ல் இருந்து இயக்கப்படும்.
55
திருத்தப்பட்ட தற்காலிக நேர அட்டவணை
சென்னை கடற்கரையில் இருந்து தாம்பரம், செங்கல்பட்டு, அரக்கோணம் செல்லும் அனைத்து புறநகர் ரயில்களும் திருத்தப்பட்ட தற்காலிக நேர அட்டவணைப்படி இயங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.