விராட் கோலிக்கு திடீர் காயம்?; ரஞ்சி டிராபியில் விளையாடாமல் இருக்க பிளானா? ரசிகர்கள் கேள்வி!

First Published | Jan 17, 2025, 4:55 PM IST

விராட் கோலிக்கு திடீர் காயம் ஏற்பட்டுள்ளதால் அவர் ரஞ்சி டிராபியில் விளையாடுவதில் சந்தேகம் எழுந்துள்ளது. கோலிக்கு காயம் ஏற்பட்டுள்ளது குறித்து ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

India Australia Test Series

இந்திய அணி மோசமான தோல்வி 

இந்திய அணி ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் 3 1 என்ற கணக்கில் படுதோல்வி அடைந்தது. இந்திய அணி படுதோல்விகள் அடைய முக்கிய காரணம் ரோகித் சர்மா, விராட் கோலியின் படுமோசமான பேட்டிங் தான். முதல் டெஸ்ட்டில் மட்டும் சதம் அடித்த விராட் கோலி, அதன்பிறகு நடந்த போட்டிகளில் ஒரு அரைசதம் கூட அடிக்கவில்லை. இந்த தோல்வி எதிரொலியாக கோலி, ரோகித் சர்மா மீது கடும் விமர்சனங்கள் எழுந்துள்ளன.

இவர்கள் இருவர் உள்பட இந்திய சீனியர் வீரர்கள் ரஞ்சி கோப்பை போன்ற முதல் தர போட்டிகளில் விளையாட வேண்டும். ஆஸ்திரேலியா, இங்கிலாந்து போன்ற பெரிய தொடர்களை எதிர்கொள்ள ரஞ்சி கோப்பை போட்டிகள் உதவியாக இருக்கும் என்று இந்தியா முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தினார்கள்.

Virat Kohli Injury

விராட் கோலிக்கு காயம்?

இந்த கருத்தை ஆமோதித்த இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் கவுதம் கம்பீர்,''இந்திய வீரர்கள் அனைவரும் ரஞ்சி டிராபி போன்ற உள்ளூர் கிரிக்கெட்டில் விளையாட வேண்டும். உள்ளூர் போட்டிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்காவிட்டால், டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாடக்கூடிய வீரர்களை தேர்வு செய்வது கடினமாகும்'' என்று கூறியிருந்தார்.

இதனைத் தொடர்ந்து பிசிசிஐ கொடுத்த தொடர் அழுத்தம் காரணமாக விராட் கோலி ரஞ்சி டிராபியில் டெல்லி அணிக்காக விளையாடுவார் என தகவல்கள் வெளியாயின. ஜனவரி 23ம் தேதி சவுராஷ்டிராவுக்கு எதிரான ரஞ்சி டிராபி போட்டிக்கு முன்னதாக அவர் டெல்லி அணியில் இணைவார் என்றும் தகவல்கள் பரவி வந்தன. இந்நிலையில், விராட் கோலிக்கு திடீரென காயம் ஏற்படுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. 

கோ கோ உலகக் கோப்பை: பூடானை பந்தாடி காலிறுதிக்குள் நுழைந்தது இந்திய ஆண்கள் அணி!

Tap to resize

Virat Kohli Batting

ரஞ்சி கோப்பையில் விளையாடுவாரா?

அதவாது விராட் கோலிக்கு கழுத்தில் திடீர் வலி ஏற்பட்டுள்ளது. இதனால் அவர் வலி நிவாரணத்திற்காக தடுப்பூசி எடுத்துக் கொண்டார் என செய்திகள் வெளியிடப்பட்டுள்ளன. இதனால் விராட் கோலி ரஞ்சி டிராபியில் விளையாடுவது சந்தேகம் எழுந்துள்ளது. டெல்லி அணிக்கு ரஞ்சி கோப்பையில் சவுராஷ்டிரா மற்றும் ரயில்வேஸ் அணிகளுக்கு எதிரான போட்டிகள் மீதமுள்ளன.

இதனால் விராட் கோலி சவுராஷ்டிரா அணிக்கு எதிரான போட்டிகளை தவிர்த்து விட்டு, ரயில்வேஸ் அணிகளுக்கு எதிரான போட்டியில் விளையாடுவார் என ஒரு பக்கமும், கோலி டெல்லி மாநில அணி வீரர்களுடன் இணைந்து வலைப்பயிற்சியில் மட்டும் தான் ஈடுபடுவார் ரஞ்சி கோப்பையில் விளையாட மாட்டார் என மறுபக்கமும் தகவல்கள் பரவி வருகின்றன. 

Ranji Trophy

பிசிசிஐ அதிருப்தி 

சாம்பியன்ஸ் டிராபி தொடர், இங்கிலாந்து டெஸ்ட் தொடர் என முக்கியமான தொடர் வர உள்ளதால் விராட் கோலிக்கு ரஞ்சி கோப்பை நல்ல பயிற்சியாக இருக்கும் என பிசிசிஐ நினைக்கிறது. ஆனால் இப்போது கோலிக்கு திடீரென காயம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுவது பிசிசிஐ அதிருப்தியில் ஆழ்த்தியுள்ளது. இதேபோல் விராட் கோலிக்கு திடீரென எப்படி காயம் ஏற்பட்டது? 

ரஞ்சி கோப்பையில் விளையாடுவதை தவிர்க்க விராட் கோலி முயற்சி செய்து வருகிறாரா? என்று இந்திய ரசிகர்கள் பலர் கேள்வி எழுப்பி வருகின்றனர். ரஞ்சி கோப்பையில் விளையாடும் டெல்லி அணி வீரர்களை டெல்லி கிரிக்கெட் வாரியம் விரைவில் தேர்வு செய்ய உள்ளது. அப்போது விராட் கோலி ஆடுவாரா? இல்லையா? என்பது தெரிந்து விடும்.

கோ கோ உலகக் கோப்பை 2025: இந்திய மகளிர் அணி காலிறுதிக்குள் நுழைந்தது!

Latest Videos

click me!