ஐபிஎல்லில் மொத்தம் 11 அணிகள் உள்ளன. இந்தியாவின் முக்கியத் தொழிலதிபர்கள், பாலிவுட் நடிகர்கள் என ஒவ்வொருவரும் ஒரு அணியின் உரிமையாளர்களாக உள்ளனர்.
அதில் முக்கியமான அணி சென்னை சூப்பர் கிங்ஸ். ஐபிஎல்லில் மிகவும் பிரபலமான, வலுவான அணிகளில் ஒன்றாக உள்ளது. தோனியின் தாக்கம், விசுவாசமான ரசிகர்கள் காரணமாக அந்த அணியின் பிராண்ட் உச்சத்தில் உள்ளது. சமீபத்திய மதிப்பு சுமார் $235 மில்லியன் (கிட்டத்தட்ட ₹2,000 கோடி)
24
ஐபிஎல் தொடர்களில் 5 முறை சாம்பியன்
சிஎஸ்கே அணியை சென்னை சூப்பர் கிங்ஸ் கிரிக்கெட் லிமிடெட் என்ற நிறுவனம் அணியின் உரிமையாளராக உள்ளது. இது இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனத்துக்கு சொந்தமானது. இதன் சேர்மன் என்.சீனிவாசன் முன்னாள் இந்திய கிரிக்கெட் வாரியம், சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் தலைவராக இருந்தவர். 2025 செப்டம்பரில் அவர் மீண்டும் சிஎஸ்கேசிஎல் சேர்மனாக நியமிக்கப்பட்டார். அவரது மகள் ரூபா குருநாத் உள்ளிட்டோர் நிர்வாகத்தில் முக்கிய பங்கு வகிக்கின்றனர். சிஇஓ மற்றும் மேனேஜிங் டைரக்டராக கே.எஸ்.காசி விஸ்வநாதன் அணியின் தினசரி நிர்வாகத்தை கவனித்து வருகிறார். சிஎஸ்கே அணி ஐபிஎல் தொடர்களில் 5 முறை சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது.
34
சிஎஸ்கே நிர்வாகத்துடன் உதயநிதி பேச்சுவார்த்தை
இந்நிலையில் தமிழக விளையாட்டுத்துறை அமைச்சராக உள்ள திமுக குடும்பத்தை சேர்ந்த உதயநிதி சிஎஸ்கே அணியை வாங்க இந்தியா சிமெண்ட்ஸ் சேர்மன் என்.சீனிவாசனுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகக் கூறப்படுகிறது. கிட்டத்தட்ட ரூ.2,200 கோடிக்கு வாங்க இந்த பேச்சுவார்த்தை நடந்து வருவதாகக் கூறப்படுகிறது. உதயநிதி ஸ்டாலின் வெகுநாட்களாக சிஎஸ்கே ரசிகராக இருந்து வருகிறார். அவருக்கு வெகுநாட்களாக சிஎஸ்கே அணியை வாங்க வேண்டும் என்கிற திட்டம் இருந்தாகக் கூறப்படுகிறது.
ஏற்கெனவே திமுக தலைமைக்கு நெருங்கிய குடும்பமான கலாநிதி மாறனின் மகள் காவ்யா மாறன் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை வாங்கி நடத்தி வருகிறார். அந்த வகையில் சிஎஸ்கே அணியை உதயநிதி வாங்கினால் இந்தியாவில் ஐபிஎல் அணியில் இருக்கும், 11 அணிகளில் இரண்டு அணிகள் கருணாநிதி குடும்பத்திற்கு சொந்தமானதாக இருக்கும்.
கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.