ஆர்சிபி வெற்றிக்கு முட்டுக்கட்டை போடுமா சிஎஸ்கே! இரு அணிகளின் பிளேயிங் லெவன்!

Published : May 03, 2025, 12:26 PM IST

ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே மற்றும் ஆர்சிபி அணிகள் இன்று மோதுகின்றன. இரு அணிகளின் பிளேயிங் லெவன், சாதனைகள் குறித்த விவரங்களை பார்க்கலாம்.

PREV
14
ஆர்சிபி வெற்றிக்கு முட்டுக்கட்டை போடுமா சிஎஸ்கே! இரு அணிகளின் பிளேயிங் லெவன்!

IPL: CSK VS RCB Playing 11: ஐபிஎல் கிரிக்கெட் போட்டி இந்தியாவில் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், இன்றைய 52வது ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் பெங்களுரூ சின்னசாமி மைதானத்தில் மோதுகின்றன. இதுவரை ஒருமுறை கூட ஐபிஎல் கோப்பையை கையில் ஏந்தாத ஆர்சிபி அணி இந்த சீசனில் வெற்றி மேல் வெற்றி குவித்து வருகிறது. இதுவரை 10 போட்டிகளில் விளையாடி 7ல் வெற்றி, 3ல் தோல்வியுடன் 14 புள்ளிகள் பெற்று 3வது இடத்தில் உள்ளது. 

24
IPL: CSK vs RCB

சிஎஸ்கேவின் பரிதாபம் 

அதே வேளையில் ஐந்து முறை கோப்பையை வென்றுள்ள சிஎஸ்கே இந்த சீசனில் அதலபாதாளத்தில் இருக்கிறது. இதுவரை 10 போட்டிகளில் விளையாடி 2ல் மட்டுமே வெற்றி பெற்று 8ல் தோல்வி அடைந்து வெறும் 4 புள்ளிகளுடன் கடைசி இடத்தில் உள்ளது. ஏற்கெனவே சிஸ்கே பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற முடியாமல் தொடரில் இருந்து வெளியேறி விட்டது. 

வெற்றி மேல் வெற்றி குவிக்கும் ஆர்சிபி 

ஆர்சிபி அணியை பொறுத்தவரை பேட்டிங்கில் விராட் கோலி, தேவ்தத் படிக்கல், டிம் டேவிட் சிறந்து விளங்குகின்றனர். ரஜத் படிதார் கடந்த சில போட்டிகளில் சரியாக செயல்படவில்லை. பில் சால்ட் கடந்த சில போட்டிகளில் விளையாடவில்லை. அதே வேளையில் பவுலிங்கில் ஆர்சிபி வலுவாக உள்ளது. ஜோஸ் ஹேசில்வுட், புவனேஷ்குமார் சிறப்பாக செயல்படுகின்றனர். குர்னால் பாண்ட்யா, சுயாஷ் சர்மா ஆகியோர் ஸ்பின்னில் கலக்குகின்றனர்.

34
CSK vs RCB, Cricket

ஷிவம் துபே, ஜடேஜா மிக மோசம்

சிஎஸ்கே அணியை பொறுத்தவரை இனி பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற முடியாது என்பதால் எந்தவித நெருக்கடியும் இன்றி சுதந்திரமாக விளையாட முயற்சிக்கும். இளம் வீரர்கள் ஷேக் ரஷித், ஆயுஷ் மித்ரே, சாம் கரன், அதிரடி வீரர் டேவால் பிரவேஸ் ஆகியோரை தான் அந்த அணி அதிகம் நம்பி உள்ளது. ஷிவம் துபே, ஜடேஜா, தோனியின் பேட்டிங் திருப்தி அளிக்கவில்லை. பவுலிங்கில் கலீல் அகமது, நூர் அகமது, ஜடேஜா சிறப்பாக செயல்பட்டாலும் மதிஷா பதிரனா எதிர்பார்ப்புக்கு ஏற்ப விளையாடவில்லை.

நேருக்கு நேரில் யார் கெத்து?

இந்த சீசனில் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இரு அணிகளும் ஏற்கெனவே மோதிய போட்டியில் ஆர்சிபி 50 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றிருந்தது. இந்த முறையும் ஆர்சிபி அணியின் கையே ஓங்கி இருக்கிறது. ஆர்சிபியும், சிஎஸ்கேவும் இதுவரை 34 போட்டிகளில் நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில் சிஎஸ்கே 21 முறையும், ஆர்சிபி 12 முறையும் வெற்றி பெற்றுள்ளன. ஒரு போட்டியில் முடிவில்லை. 2022 சீசனுக்குப் பிறகு கடந்த 6 போட்டிகளில், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் 3-3 என்ற கணக்கில் சமநிலையில் உள்ளன.

44
CSK and RCB Playing 11

பெங்களூருவில் எப்படி?

பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் இரு அணிகளும் விளையாடிய 11 போட்டிகளில் சிஎஸ்கே, ஆர்சிபி தலா 5 வெற்றிகளை பெற்றுள்ளன. ஒரு போட்டி வாஷ் அவுட் ஆனது. சிஎஸ்கேவுக்கு எதிராக ஆர்சிபி அதிகப்பட்சமாக 218 ரன்களையும், குறைந்தபட்சமாக 70 ரன்களையும் எடுத்துள்ளது. ஆர்சிபிக்கு எதிராக சிஸ்கே அதிகப்பட்சமாக 226 ரன்களையும், குறைந்தபட்சமாக 112 ரன்களையும் எடுத்துள்ளது.

ஆர்சிபி-சிஎஸ்கே பிளேயிங் லெவன்:

சிஎஸ்கே பிளேயிங் லெவன்: எம் எஸ் தோனி (கேப்டன்), ஷேக் ரஷித், ஆயுஷ் மத்ரே, சாம் கரன், ஷிவம் துபே, ரவீந்திர ஜடேஜா, டேவால் பிரேவாஸ், நூர் அகமது, கலீல் அகமது, அன்ஷீல் கம்போஜ், மதிஷா பதிரனா. 

ஆர்சிபி பிளேயிங் லெவன்: ரஜத் படிதார் (கேப்டன்), விராட் கோலி, தேவ்தத் படிக்கல், ஜேக்கப் பெத்தல், டிம் டேவிட், குர்னால் பாண்ட்யா, ஜிதேஷ் சர்மா, ஜோஷ் ஹேசில்வுட், சுயாஷ் சர்மா, புவனேஷ்வர் குமார், ரோமோரியோ ஷெப்பர்ட்.

Read more Photos on
click me!

Recommended Stories