CSK vs MI: உள்ளே வந்த 'சிக்சர்' மன்னன்! சிஎஸ்கேவில் அதிரடி மாற்றம்! பிளேயிங் லெவன் இதோ!

Published : Apr 18, 2025, 07:12 PM IST

மும்பை இந்தியன்ஸ் அணியை 20ம் தேதி எதிர்கொள்ள உள்ள நிலையில், சிஎஸ்கேவின் பிளேயிங் லெவனில் அதிரடி வீரர் சேர்க்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.  

PREV
14
CSK vs MI: உள்ளே வந்த 'சிக்சர்' மன்னன்! சிஎஸ்கேவில் அதிரடி மாற்றம்! பிளேயிங் லெவன் இதோ!

IPL: CSK  playing 11 against MI: ஐபிஎல் கிரிக்கெட் தொடர் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில் ரசிகர்களின் அளப்பரிய அன்பை பெற்ற சிஎஸ்கேவின் நிலைமை மிகவும் பரிதாபகரமாக உள்ளது. அந்த அணி 7 போட்டிகளில் விளையாடி இரண்டில் வெற்றி பெற்று தோல்வி அடைந்து 4 புள்ளிகள் பெற்று புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது. சிஎஸ்கே அடுத்த போட்டியில் பலம்வாய்ந்த மும்பை இந்தியன்ஸ் அணியை வரும் 20ம் தேதி எதிர்கொள்ள உள்ளது. மும்பை வான்கடே மைதானத்தில் இந்த போட்டி நடைபெற உள்ளது.

24
Chennai Super Kings, IPL

சிஎஸ்கேவில் இரண்டு மாற்றங்கள் 

சிஎஸ்கே தொடர்ந்து 5 போட்டிகளில் தோல்வி அடைந்த நிலையில், கடைசியாக லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்கு எதிராக வெற்றி பெற்று தொடர் தோல்விக்கு முற்றுப்புள்ளி வைத்தது. வெற்றியுடன் வருவதால் மும்பை இந்தியன்ஸ்க்கு எதிரான போட்டியில் சிஎஸ்கேவின் பிளேயிங் லெவனில் இரண்டு மாற்றங்கள் மட்டும் செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

கிளாசனின் விநோத தவறு! அவுட்டாகி சென்ற ரிக்கல்டன் மீண்டும் பேட்டிங்! இப்படி ஒரு ரூல்ஸ் இருக்கா?

34
Dewald Brevis, CSK

ராகுல் திரிபாதி நீக்கப்படுகிறார் 

அதாவது நடப்பு ஐபிஎல் தொடரில் ஒரு போட்டியில் கூட 20 ரன்களை தாண்டாத ராகுல் திரிபாதி அணியில் இருந்து நீக்கப்படுகிறார். சிஎஸ்கேவும், தோனியும் அவர் மீது அதிகம் நம்பிக்கை வைத்த நிலையில் கிடைத்த வாய்ப்புகள் அனைத்தையும் வீணடித்து தன் மீதான நம்பிக்கையை பொய்யாக்கியுள்ளார் ராகுல் திரிபாதி. மேலும் வேகப்பந்து வீச்சாளர் குர்ஜப்னீத் சிங் காயம் காரணமாக வெளியேறியதால் அவருக்கு பதிலாக தென்னாப்பிரிக்காவின் இளம் சர்வதேச வீரர் டெவால்ட் பிரெவிஸ் சிஎஸ்கே அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

உள்ளே வரும் டெவால்ட் பிரெவிஸ்

டெவால்ட் பிரெவிஸ் மும்பை இந்தியன்ஸ்க்கு எதிரான போட்டியில் சிஎஸ்கேவின் பிளேயிங் லெவனில் இடம்பெறுவார் என தகவல்கள் கூறுகின்றன. சிஎஸ்கேவால் 2.2 கோடி ரூபாய்க்கு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ல டெவால்ட் பிரெவிஸ் அதிரடியில் கலக்கக்கூடியவர். சர்வசாதாரணமாக சிக்சர்களை பறக்க விடும் அவர் ஐபிஎல்லில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக 10 போட்டிகளில் விளையாடியுள்ளார். அதிரடியாக விளையாடக்கூடியவர் என்பதாலும், மும்பை வான்கடே பிட்ச்சின் தன்மையை நன்றாக அறிந்தவர் என்பதாலும் டெவால்ட் பிரெவிஸ் நேரடியாக சிஎஸ்கேவின் அணியில் இடம்பிடிக்கிறார்.

44
CSK Playing 11

பாஸ்ட் பவுலிங்கில் எத்தனை பேர்?

மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் ரச்சின் ரவிந்திரா, ஷேக் ரஷித் வழக்கம்போல் ஒப்பனிங்கில் களமிறங்குகின்றனர். அடுத்ததாக விஜய் சங்கர் களமிறங்குகிறார். இவரை தொடர்ந்து டெவால்ட் பிரெவிஸ் பேட்டிங் செய்ய இருக்கிறார். இதன்பிறகு நடு வரிசையில் ஷிவம் துபே, பின்வரிசையில் ஜடேஜா, தோனி, ஓவர்டன் பேட்டிங் செய்ய உள்ளனர். அன்ஷுல் காம்போஜ், பதிரனா, கலீல் அகமது, ஓவர்டன் பாஸ்ட் பவுலிங்கிலும், நூர் அகமது, ஜடேஜா ஸ்பின் பவுலிங்கிலும் பங்களிக்க உள்ளனர். 

சிஎஸ்கே பிளேயிங் லெவன் 

மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் சிஎஸ்கே பிளேயிங் லெவன்: மகேந்திர சிங் தோனி (கேப்டன்), ரச்சின் ரவீந்திரா, ஷேக் ரஷித், விஜய் சங்கர், டெவால்ட் பிரெவிஸ், ரவீந்திர ஜடேஜா, ஓவர்டன், அன்ஷுல் காம்போஜ், மதிஷா பதிரனா, கலீல் அகமது, நூர் அகமது. ஷிவம் துபே இம்பேக்ட் வீரராக களமிறங்குவார்.

8 ஆண்டு காத்திருப்புக்கு பிறகு தந்தையான ஜாகீர் கான்! க்யூட் போட்டோஸ் வைரல்!

கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.

Read more Photos on
click me!

Recommended Stories