Paralympics: ஒரே நாளில் 4 பதக்கங்களை வேட்டையாடிய இந்தியா - பட்டியலில் எந்த இடம் தெரியுமா?

Published : Aug 31, 2024, 12:07 AM IST

பாரிசில் நடைபெற்று வரும் பாராலிம்பிக் போட்டியில் இந்தியா ஒரே நாளில் 4 பதக்கங்களைப் பெற்று அசத்தி உள்ளது.

PREV
15
Paralympics: ஒரே நாளில் 4 பதக்கங்களை வேட்டையாடிய இந்தியா - பட்டியலில் எந்த இடம் தெரியுமா?
Avani Lekhara

பாராலிம்பிக் மகளிர் 10 மீட்டர் ஏர் ரைபிள் போட்டியில் இந்திய வீராங்கனை அவனி லெகாரா இரண்டாவது முறையாக தங்கப்பதக்கம் வென்று அசத்தி உள்ளார். முன்னதாக 2020ம் ஆண்டு டோக்கியோவில் நடைபெற்ற பாராலிம்பிக் போட்டியில் அவனி லெகாரா 249.6 புள்ளிகளுடன் தங்கப்பதக்கம் வென்று சாதனை படைத்தார். தற்போது தனது முந்தைய சாதனையை முறியடித்து 249.7 புள்ளிகள் பெற்று புதிய பாராலிம்பிக் சாதனையை படைத்துள்ளார்.

25
Mona Agarwal

10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில் பங்கேற்ற மற்றொரு இந்திய வீராங்கனையான மோனா அகர்வால் வெண்கலப்பதக்கம் வென்று அசத்தி உள்ளார். 

35
Manish Narwal

ஆடவர் 10 மீட்டர் துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் இந்தியாவின் மணீஷ் நர்வால் வெள்ளிப் பதக்கம் வென்றார். இப்போட்டியில் தென்கொரியாவின் ஜொ ஜியோங்டு தங்கப்பதக்கமும், சீனாவின் யாங் சாவோ வெண்கலப் பதக்கமும் வென்றுள்ளனர்.

45
Preethi Pal

பாரீஸ் பாராலிம்பிக் தடகளப் போட்டியில் இந்தியாவிற்கு முதல் பதக்கத்தை பெற்று தந்துள்ளார் பிரீத்தி பால். 100 மீட்டர் தடகளப் போட்டியில் 14.12 நொடிகளில் பந்தய தூரத்தைக் கடந்து பிரீத்தி பால் வெண்கலப் பதக்கம் வென்றுள்ளார்.

55
Indian in Paralympics

இன்று ஒரே நாளில் இந்தியா 1 தங்கம், 1 வெள்ளி, 2 வெண்கலம் என 4 பதக்கங்களைப் பெற்று பதக்கப்பட்டியலில் 9வது இடத்தில் உள்ளது. சீனா மொத்தமாக 11 பதக்கங்களுடன் முதல் இடத்தில் உள்ளது.

கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.

Read more Photos on
click me!

Recommended Stories