GIPKL 2025 தொடரின் மகளிருக்கான முதல் 3 போட்டிகளின் முடிவுகள்: தமிழ் பெண் சிங்கத்திற்கு கிடைத்த முதல் வெற்றி!

Published : Apr 19, 2025, 10:06 PM IST

GIPKL 2025 Womens First 3 Matches Results: குளோபல் இந்தியன் பிரவாசி கபடி லீக் 2025 தொடரின் மகளிருக்கான இன்றைய போட்டிகள் 6 மணிக்கு தொடங்கியது. முதல் போட்டியில் மராத்தி ஃபால்கன்ஸ் மற்றும் தெலுங்கு சீட்டாஸ் அணிகள் மோதின. இதில், தெலுங்கு சீட்டாஸ் 42-28 என்ற புள்ளிகள் கணக்கில் வெற்றி பெற்றது.

PREV
16
GIPKL 2025 தொடரின் மகளிருக்கான முதல் 3 போட்டிகளின் முடிவுகள்: தமிழ் பெண் சிங்கத்திற்கு கிடைத்த முதல் வெற்றி!

GIPKL 2025 Womens First 3 Matches Results: குளோபல் இந்தியன் பிரவாசி கபடி லீக் 2025 தொடரின் மகளிருக்கான இன்றைய போட்டிகள் 6 மணிக்கு தொடங்கியது. ஆண்கள் மற்றும் பெண்கள் இடம் பெற்று விளையாடி வரும் இந்த தொடர் நேற்று தொடங்கியது. வரும் 30ஆம் தேதி வரையில் இந்த குளோபல் இந்தியன் பிரவாசி கபடி லீக் தொடர் நடைபெறுகிறது.

26

இதில் 6 ஆண்கள் அணி மற்றும் 6 பெண்கள் அணி என்று மொத்தமாக 12 அணிகள் இடம் பெற்று விளையாடி வருகின்றன. இந்த நிலையில் தான் மகளிருக்கான போட்டிகள் இன்று முதல் நடைபெற்று வருகிறது.

36

இந்த தொடரின் முதல் போட்டியில் மராத்தி ஃபால்கன்ஸ் மற்றும் தெலுங்கு சீட்டாஸ் அணிகள் மோதின. இதில், தெலுங்கு சீட்டாஸ் 42-28 என்ற புள்ளிகள் கணக்கில் வெற்றி பெற்றது. ஆரம்பம் முதலே சிறப்பாக விளையாடிய தெலுங்கு சீட்டாஸ் வீராங்கனைகள் ரைடு மூலமாக 24 புள்ளிகளும், டாக்கிள் மூலமாக 12 புள்ளிகளும் ஆல் அவுட் மூலமாக 6 புள்ளிகளும் எடுத்து கடைசியில் மொத்தமாக 42 புள்ளிகள் பெற்றனர்.

46

ஆனால், மராத்தி ஃபால்கன்ஸ் வீராங்கனைகள் ரைடு மூலமாக 15 புள்ளிகளும், டாக்கிள் மூலமாக 12 புள்ளிகளும் எக்ஸ்டிராஸ் மூலமாக 1 புள்ளிகளும் எடுக்க கடைசியில் மொத்தமாக 28 புள்ளிகள் பெற்றனர். மராத்தி ஃபால்கன்ஸ் அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்த வீராங்கனை மதீனா (டிஃபெண்டர்) திகழ்ந்தார். அவர், 5 Successful Tackles மூலமாகவும், சூப்பர் டாக்கிள்ஸ் மூலமாகவும் புள்ளிகள் பெற்று மொத்தமாக 7 புள்ளிகள் எடுத்துக் கொடுத்தார்.

56

அவருக்கு பக்க பலமாக சிறந்த ரைடரான சரீதா சங்க்வான் 6 Successful Raids, 4 Touch Points மூலமாகவும் 2 போனஸ் புள்ளிகள் மூலமாகவும் மொத்தமாக 6 புள்ளிகள் பெற்றுக் கொடுத்தார். இதே போன்று சப்ஸ்டிடியூட் வீராங்கனையான ஆல் ரவுண்டர் சரீதா யாதவ் களமிறங்கப்பட்டு 10 புள்ளிகள் அணிக்காக எடுத்துக் கொடுத்தார். இப்படி தெலுங்கு சீட்டாஸ் வீராங்கனைகள் சிறப்பாக விளையாடவே மராத்தி ஃபால்கன்ஸ் 28-42 என்ற புள்ளிகள் கணக்கில் தோல்வியை சந்தித்தது.

66

இதே போன்று அடுத்தடுத்து நடைபெற்ற பஞ்சாபி டைக்ரெஸ் மற்றும் போஜ்புரி லியோபார்ட்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டியில் போஜ்புரி லியோபார்ட்ஸ் 41-21 என்ற புள்ளிகள் கணக்கில் வெற்றி பெற்றது. மற்றொரு போட்டியில் தமிழ் லயோனஸ் அணி 44-18 என்ற புள்ளிகள் கணக்கில் ஹரியான்வி ஈகிள்ஸ் அணியை வீழ்த்தியது.

கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.

RK
About the Author

Rsiva kumar

நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.Read More...
Read more Photos on
click me!

Recommended Stories