IND vs PAK: பாகிஸ்தானை வீழ்த்தியது எப்படி? 'ஸ்கெட்ச்' இதுதான்! ஓபனாக பேசிய ரோகித் சர்மா!

Published : Feb 24, 2025, 08:07 AM IST

சாம்பியன்ஸ் டிராபியில் பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது. பாகிஸ்தானை வீழ்த்தியது எப்படி? என்பது குறித்து கேப்டன் ரோகித் சர்மா ஓப்பனாக பேசியுள்ளர். 

PREV
14
IND vs PAK: பாகிஸ்தானை வீழ்த்தியது எப்படி? 'ஸ்கெட்ச்' இதுதான்! ஓபனாக பேசிய ரோகித் சர்மா!
IND vs PAK: பாகிஸ்தானை வீழ்த்தியது எப்படி? ஸ்கெட்ச் இதுதான்! ஓபனாக பேசிய ரோகித் சர்மா!

சாம்பியன்ஸ் டிராபி தொடர் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், நேற்று நடந்த பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி 49.4 ஓவர்களில் 241 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. சவுத் ஷகீல் (76 பந்தில் 62 ரன்) அரைசதம் விளாசினார். முகமது ரிஸ்வான் 77 பந்தில் 46 ரன்கள் அடித்தார். இந்திய அணி தரப்பில் குல்தீப் யாதவ் 3 விக்கெட்களும், ஹர்திக் பாண்ட்யா 2 விக்கெட்களும் வீழ்த்தினார்கள்.

பின்பு சவாலான இலக்கை நோக்கி களமிறங்கிய இந்திய அணி அதிரடி தொடக்கம் கொடுத்தது. கேப்டன் ரோகித் சர்மா (15 பந்தில் 20 ரன்), சுப்மன் கில் (52 பந்தில் 46 ரன்) எடுத்து அவுட் ஆனார்கள். அதன்பிறகு ஜோடி சேர்ந்த விராட் கோலி மற்றும் ஷ்ரேயாஸ் ஐயர் அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்து சென்றனர். தனது 51வது சதம் விளாசி அசத்திய விராட் கோலி 111 பந்தில் 100 ரன்கள் எடுத்து நாட் அவுட் ஆக திகழ்ந்தார். ஷ்ரேயாஸ் ஐயர் அரைசதம் (56 ரன்) விளாசி அவுட் ஆனார். இந்திய அணி 42.3 ஓவர்களில் 4 விக்கெட் இழந்து வெற்றி இலக்கை எட்டியது.

24
இந்தியா-பாகிஸ்தான் போட்டி

இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி அரையிறுதிக்கு தகுதி பெற்றது. போட்டியை நடத்தும் பாகிஸ்தான் அணி சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இருந்து வெளியேறியது. இந்த வெற்றிக்கு பிறகு பேசிய கேப்டன் ரோகித் சர்மா, ''நாங்கள் தொடக்கம் முதலே சிறப்பாக பந்து வீசினோம். சேஸிங்கில் விக்கெட் மெதுவாக மாறும் என்று எங்களுக்குத் தெரியும், ஆனால் எங்கள் அனுபவம் வாய்ந்த பேட்ஸ்மேன்கள் இலக்கை துரத்த உதவினர். குல்தீப், அக்சர், ஜடேஜா சிறப்பாக பந்துவீசினார்கள்.

விராட் கோலி புதிய சாதனை! அதிவேகமாக 14,000 ரன்களைக் கடந்து அசத்தல்!

34
பாகிஸ்தானை வீழ்த்தியது எப்படி?

முமமது ஷமி, ஹார்திக், ஹர்ஷித் ஆகியோரும் எப்படி பந்து வீசினார்கள் என்பதை மறந்துவிடக் கூடாது. ஒரு முழு அணியாக சிறப்பாக செயல்பட்டுள்ளோம். அணி என்ன விரும்புகிறது என்பதை வீரர்கள் அறிந்து அதற்கேற்ப செயல்படுகிறார்கள். பேட்டர்களுக்கு யார் அதிக பிரச்சனைகளை உருவாக்குகிறார்கள் என்பதைக் கண்டுபிடித்து முடிவுகளை எடுக்க முயற்சிக்கிறேன்.

விராட் நாட்டைப் பிரதிநிதித்துவப்படுத்துவதை விரும்புகிறார். நாட்டுக்காக அவர் சிறப்பாகச் செய்வதை விரும்புகிறார். இன்று (நேற்று) அவர் அதைத்தான் செய்து இருக்கிறார். விராட் கோலி பேட்டிங்கை பார்த்து டிரஸ்ஸிங் அறைக்குள் அமர்ந்திருப்பவர்கள் ஆச்சரியப்படுவதில்லை. ஏனெனில் விராட் எப்போதும் நல்ல நிலையில் உள்ளார்'' என்றார்.

44
முகமது ரிஸ்வான்

இந்த தோல்வி குறித்து பேசிய பாகிஸ்தான் கேப்டன் முகமது ரிஸ்வான், ''நாங்கள் டாஸ் வென்றோம், ஆனால் அதற்கான பலனை பெறவில்லை. 280 ரன்கள் எடுக்க விரும்பினோம். ஆனால் இந்தியாவின் பந்து வீச்சாளர்கள் மிடில் ஓவர்களில் மிகச் சிறப்பாக செயல்பட்டனர். சவுத்தும் நானும் பேட்டிங் செய்து கொண்டிருந்தபோது, ஆட்டத்தின் இறுதி வரை களத்தில் நிற்க முடிவு செய்தோம். ஆனால் எங்களின் ஷாட் தேர்வு மோசமாக இருந்ததால் விக்கெட் வீழ்ச்சிக்கு வழிவகுத்தது. அதனால்தான் நாங்கள் 240 ரன்களுக்குள் கட்டுபடுத்தப்பட்டோம். 

அப்ரார் எங்களுக்கு விக்கெட் கொடுத்தார், ஆனால் கோலியும், சுப்மன் கில்லும் ஆட்டத்தை எங்களிடமிருந்து வெகுதூரம் கொண்டு சென்றனர். நாங்கள் பீல்டிங்கை மேம்படுத்த வேண்டும். இந்த போட்டியில் நாங்கள் நிறைய தவறுகளைச் செய்தோம். செய்த தவறுகளை மீண்டும் மீண்டும் செய்தோம்'' என்று தெரிவித்தார்.

சச்சினின் சாதனையை சைலண்டாக முறியடித்த ரோஹித் சர்மா

கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.

Read more Photos on
click me!

Recommended Stories