குஜராத் டைட்டன்ஸை சுத்து போட்டு காலி செய்த யாஷ் தாக்கூர் – முதல் முறையாக 5 விக்கெட் கைப்பற்றி சாதனை!

First Published Apr 8, 2024, 12:25 AM IST

குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான 21ஆவது லீக் போட்டியில் லக்னோ வீரர் யாஷ் தாக்கூர் 5 விக்கெட்டுகள் கைப்பற்றி சாதனை படைத்துள்ளார்.

LSG vs GT, IPL 2024

லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையிலான 21ஆவது லீக் போட்டி இன்று நடைபெற்றது. இதில், டாஸ் வென்ற லக்னோ கேப்டன் முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தார்.

Lucknow Super Giants vs Gujarat Titans, 21st Match

அதன்படி முதலில் பேட்டிங் செய்த லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியானது 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 163 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக மார்கஸ் ஸ்டோய்னிஸ் 58 ரன்கள் எடுத்தார்.

Yash Thakur 5 Wickets

பின்னர் எளிய இலக்கை துரத்திய குஜராத் டைட்டன்ஸ் அணியில் சாய் சுதர்சன் மற்றும் சுப்மன் கில் இருவரும் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். முதல் விக்கெட்டிற்கு இந்த ஜோடி 54 ரன்கள் எடுத்தது. கில் 19 ரன்களில் ஆட்டமிழந்தார்.

Lucknow Super Giants

அடுத்து வந்த கேன் வில்லியம்சன் 1, சரத் பிஆர் 2 ரன்களில் நடையை கட்டினர். நிதானமாக விளையாடிய சாய் சுதர்சன் 31 ரன்களில் ஆட்டமிழந்தார். தர்ஷன் நீல்கண்டே 12, விஜய் சங்கர் 17, ரஷீத் கான் 0, உமேஷ் யாதவ் 2 என்று சொற்ப ரன்களில் வெளியேறினர்.

Yash Thakur

கடைசி வரை நின்று விளையாடிய ராகுல் திவேதியா 25 பந்துகளில் 2 பவுண்டரி, 2 சிக்ஸ் உள்பட 30 ரன்கள் எடுத்து 9ஆவது விக்கெட்டாக தனது விக்கெட்டை இழந்தார். கடைசியில் நூர் அகமது 4 ரன்களில் ஆட்டமிழக்க குஜராத் டைட்டன்ஸ் 18.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 130 ரன்கள் மட்டுமே எடுத்து 33 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.

LSG vs GT, 21st IPL 2024 Match

இந்த தோல்வியின் மூலமாக குஜராத் டைட்டன்ஸ் விளையாடிய 5 போட்டிகளில் 2 வெற்றி, 3 தோல்வியோடு புள்ளிப்பட்டியலில் 7ஆவது இடத்தில் உள்ளது. இதே போன்று இந்தப் போட்டியில் வெற்றி வாகை சூடிய லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் 4 போட்டிகளில் விளையாடி 3 வெற்றி, ஒரு தோல்வியோடு புள்ளிப்பட்டியலில் 3ஆவது இடம் பிடித்துள்ளது.

Lucknow Super Giants vs Gujarat Titans, 21st IPL Match

பவுலிங்கைப் பொறுத்த வரையில் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியில் யாஷ் தாக்கூர் 3.5 ஓவர்கள் வீசி ஒரு மெய்டன் உள்பட 30 ரன்கள் கொடுத்து 5 விக்கெட்டுகள் கைப்பற்றி சாதனை படைத்தார். இந்த சீசனில் 5 விக்கெட்டுகள் கைப்பற்றிய முதல் பந்து வீச்சாளர் என்ற சாதனையை யாஷ் தாக்கூர் படைத்துள்ளார்.

Lucknow Super Giants vs Gujarat Titans, 21st Match

26 வயதான யாஷ், கடந்த ஆண்டுக்கான ஐபிஎல் ஏலத்தில் ரூ.45 லட்சத்திற்கு ஏலம் எடுக்கப்பட்டார். மேலும், கடந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் அறிமுகமானார். கடந்த சீசனில் சேப்பாக்கத்தில் நடந்த சிஎஸ்கே அணிக்கு எதிரான போட்டியின் மூலமாக அறிமகமானார்.

Lucknow Super Giants

கடந்த ஆண்டு விளையாடிய 9 போட்டிகளில் 13 விக்கெட்டுகள் கைப்பற்றினார். இதில் சிறந்த பந்து வீச்சாக 4/37 விக்கெட்டுகள் கைப்பற்றினார். ஆனால், இந்த சீசனில் இதுவரையில் 3 போட்டிகளில் விளையாடியுள்ளார்.

Lucknow Super Giants beat Gujarat Titans

இந்த நிலையில் தான் இந்தப் போட்டியில் விளையாடி சுப்மன் கில், விஜய் சங்கர், ராகுல் திவேதியா, ரஷீத் கான், நூர் அகமது ஆகியோரது விக்கெட்டுகளை கைப்பற்றினார். மேலும் இந்த சீசனில் 3 போட்டிகளில் இடம் பெற்று விளையாடி 6 விக்கெட்டுகள் எடுத்துள்ளார்.

LSG

கடந்த 2019 ஆம் ஆண்டு முதல் தற்போது வரையில் 49 டி20 போட்டிகளில் விளையாடி 74 விக்கெட்டுகள் கைப்பற்றியுள்ளார். குர்ணல் பாண்டியா 3 விக்கெட்டும், நவீன் உல் ஹாக், ரவி பிஷ்னோய் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டுகள் கைப்பற்றினர்.

LSG vs GT Live Score

இந்தப் போட்டியைத் தொடர்ந்து வரும் 12 ஆம் தேதி நடக்கும் போட்டியில் லக்னோ அணியானது டெல்லி கேபிடல்ஸ் அணியை எதிர்கொள்கிறது. இந்த போட்டி லக்னோ மைதானத்தில் நடைபெறுகிறது.

LSG vs GT, 21st IPL 2024 Match

இதே போன்று குஜராத் டைட்டன்ஸ் அணியானது வரும் 10 ஆம் தேதி ஜெய்ப்பூரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை எதிர்கொள்கிறது. இது ராஜஸ்தானில் ஹோம் மைதானம் என்பது குறிப்பிடத்தக்கது.

click me!