Rohit Sharma, Cricket World Cup 2023
உலகத்திலேயே இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா தான் துரதிர்ஷ்டசாலி என்று ஆஸ்திரேலியா அதிரடி மன்னன் டிராவிட் ஹெட் அழைத்துள்ளார். 2023 ஆம் ஆண்டு ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை இந்தியாவில் நடைபெற்றது.
ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பையில் இந்தியா விளையாடிய எல்லா போட்டியிலும் வெற்றி வாகை சூடியது. ஆனால், ஒரே ஒரு போட்டியில் தோல்வி அடைந்து கண்ணீரோடு திரும்பியது. அந்த ஒரு போட்டி தான் இறுதிப் போட்டி. ஆஸ்திரேலியாவிற்கு எதிரான இறுதிப் போட்டி அகமதாபாத் மைதானத்தில் நடைபெற்றது.
Travis Head, ODI World Cup 2023
டாஸ் ஜெயிச்ச ஆஸ்திரேலியா இந்தியாவை பேட்டிங் செய்ய அழைத்தது. அதன்படி கேப்டன் ரோகித் சர்மா மற்றும் சுப்மன் கில் இருவரும் பேட்டிங் செய்ய வந்தனர். இதில் கில் பெரிதாக அடிக்காமல் 4 ரன்களில் நடையை கட்டினார். பின்னர் சூப்பர் ஜோடியான ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி இருவரும் இணைந்து அதிரடியாக விளையாடி ரன்கள் குவித்தனர்.
ரோகித் சர்மா 31 பந்துகளில் 4 பவுண்டரி, 3 சிக்ஸர் உள்பட 47 ரன்கள் எடுத்திருந்த போது மேக்ஸ்வெல் ஓவரில் சிக்ஸர் அடிக்க முயற்சித்து டிராவிஸ் ஹெட்டிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். ஹெட் பின்னாலேயே சென்று அபாரமாக கேட்ச் பிடித்து ரோகித் சர்மாவை ஆட்டமிழக்கச் செய்தார்.
Rohit Sharma and Travis Head
கோலி 54 ரன்களில் வெளியேற, கேஎல் ராகுல் 66 ரன்கள் மட்டுமே எடுத்தரர். இறுதியாக இந்தியா அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 240 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதில் என்ன வருத்தம் என்றால், கடைசி 40 ஓவர்களில் இந்தியா 4 பவுண்டரி மட்டுமே அடித்தது.
பின்னர் விளையாடிய ஆஸ்திரேலியா அணிக்கு சிம்ம சொப்பனமாக விளங்கிய டிராவிஸ் ஹெட் அதிரடியாக விளையாடி 120 பந்துகளில் 5 பவுண்டரி 4 சிக்ஸர் உள்பட 137 ரன்கள் எடுத்துக் கொடுக்க 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 6ஆவது முறையாக டிராபியை வென்றது.
India vs Australia, ODI World Cup Final 2023
மேலும், ரிக்கி பாண்டிங், ஆடம் கில்கிறிஸ்ட் வரிசையில் உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் சதம் அடித்த 3ஆவது ஆஸ்திரேலியா வீரர் என்ற சாதனையை டிராவிஸ் ஹெட் படைத்தார். இந்த போட்டிக்கு பிறகு ரோகித் சர்மாவின் கேட்ச் பற்றி விவாதிக்கப்பட்டது. அப்போது பேசிய டிராவிஸ் ஹெட், ரோகித் சர்மா ஒரு துரதிர்ஷ்டசாலி என்றார். அவர் நன்றாக பேட்டிங் செய்தார்.
அதோடு பெரிய ஸ்கோர் எடுக்கவும் தயாராக இருந்தார். சில நேரங்களில் உங்களுக்கு அதிர்ஷ்டம் கை கொடுக்கும். அதுவே சில நேரங்களில் உங்களுக்கு துரதிர்ஷ்டமாக அமைந்துவிடும். ரோகித் சர்மாவின் விக்கெட்டை எடுத்ததோடு அணியின் வெற்றிக்கு என்னால் பங்களிக்க முடிந்தது என்பதில் நான் மகிழ்ச்சியடைகிறேன் என்றார்.
India vs Australia, ODI World Cup 2023
மேலும், ரோகித் சர்மாவின் கேட்ச் பிடித்தது எனக்கு சிறப்பாக இருந்தது. பீல்டிங்கில் கடினமாக இருந்தேன். நான் 100 அடிப்பேன் என்று கனவில் கூட நினைக்கவில்லை என்றார் என்பது குறிப்பிடத்தக்கது.