இந்திய அணிக்கு புதிய ஸ்பான்சர் வந்தாச்சு! ரூ.579 கோடி ஒப்பந்தம்! எந்த நிறுவனம் தெரியுமா?

Published : Sep 16, 2025, 05:50 PM IST

Indian Team New Jersey Sponsor: இந்திய கிரிக்கெட் அணியின் புதிய ஜெர்சி ஸ்பான்சராக அப்பல்லோ டயர்ஸ் நிறுவனம் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. ‍புதிய ஸ்பான்சர் லோகோ இந்தியா A மற்றும் ஆஸ்திரேலியா A அணிகளுக்கு இடையேயான ஒருநாள் தொடரில் முதலில் இடம்பெறும்.

PREV
14
Apollo Tyres Officially Named Team India Jersey Partner

பணம் சம்பந்தப்பட்ட ஆன்லைன் கேம்களை தடை செய்யும் மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டதைத் தொடர்ந்து இந்திய கிரிக்கெட் அணியின் ஜெர்சி ஸ்பான்சரான ஆன்லைன் கேமிங் நிறுவனமான டிரீம் 11 உடனான ஒப்பந்தத்தை பிசிசிஐ முடித்துக் கொண்டது. இதனைத் தொடர்ந்து டிரீம் 11 இந்திய அணியின் ஒப்பந்தத்தில் இருந்து வெளியேறியது.

24
புதிய ஸ்பான்சரை தேசிய பிசிசிஐ

2023ல் மூன்று ஆண்டுகளுக்கு ரூ.358 கோடிக்கு Dream11 உடன் பிசிசிஐ ஒப்பந்தம் செய்திருந்தது. ஆனால் முன்கூட்டியே விலக வேண்டிய நிலை ஏற்பட்டதால் இந்திய கிரிக்கெட் அணிக்கு புதிய ஸ்பான்சரை பிசிசிஐ தீவிரமாக தேடி வந்தது. முந்தைய ஸ்பான்சர்கள் சர்ச்சையில் சிக்கியதால், இம்முறை கடுமையான விதிமுறைகளை பிசிசிஐ விதித்தது. அதாவது ஆன்லைன் கேமிங் நிறுவனங்கள் மற்றும் கிரிப்டோ கரன்சி நிறுவனங்கள் ஸ்பான்சர்ஷிப்புக்கு தகுதியற்றவை என பிசிசிஐ தெரிவித்து இருந்தது.

34
அப்போலோ டயர்ஸ் புதிய ஸ்பான்சர்

இந்நிலையில், இந்திய கிரிக்கெட் அணியின் புதிய ஜெர்சி ஸ்பான்சராக அப்போலோ டயர்ஸ் நிறுவனம் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ரூ.579 கோடி மதிப்பிலான இந்த ஒப்பந்தம் மூன்று ஆண்டுகளுக்கு அமலில் இருக்கும் என்று தகவல்கள் கூறுகின்றன. ஜெர்சி ஸ்பான்சர்ஷிப்பிற்கான ஏலத்தில் அப்போலோ டயர்ஸ் ரூ.579 கோடியுடன் முதலிடம் பிடித்தது. கேன்வா ரூ.544 கோடியும், ஜேகே சிமெண்ட்ஸ் ரூ.477 கோடியும் ஏலம் கேட்டன.

44
ஒரு போட்டிக்கு சுமார் ரூ.4.77 கோடி

புதிய அப்போலோ டயர்ஸ் ஸ்பான்சர் லோகோ, இந்தியா A மற்றும் ஆஸ்திரேலியா A அணிகளுக்கு இடையேயான ஒருநாள் தொடரில் முதலில் இடம்பெறும். அதன் பிறகு வெஸ்ட் இண்டீஸ் தொடரிலும் பயன்படுத்தப்படும். இந்த ஸ்பான்சர்ஷிப் ஒப்பந்தம் 2027 வரை நீடிக்கும். ஒரு போட்டிக்கு சுமார் ரூ.4.77 கோடி வழங்கப்படும். இது முந்தைய ஸ்பான்சரான ட்ரீம்11 வழங்கியதை விட அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.

Read more Photos on
click me!

Recommended Stories