கிரிக்கெட் ஆச்சரியம்: டி20 உலகக் கோப்பையில் இரண்டு வெவ்வேறு அணிகளுக்காகக் களம் கண்ட 6 வீரர்கள்!

Published : Feb 06, 2026, 09:21 PM IST

Cricketers Who Played For 2 Countries in T20 World Cup : உலக கிரிக்கெட்டில் இந்த ஆறு வீரர்களின் சாதனை மிகவும் சிறப்பு வாய்ந்தது. இவர்கள் இரண்டு வெவ்வேறு நாடுகளுக்காக டி20 உலகக் கோப்பையில் விளையாடி அனைவரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளனர். 

PREV
17
டி20 உலகக் கோப்பையில் 2 நாடுகளுக்காக விளையாடிய 6 கிரிக்கெட் வீரர்கள்!

ஒரு வீரர் தன் நாட்டிற்காக உலகக் கோப்பையில் விளையாடுவது பெருமை. ஆனால், சிலர் இரண்டு வெவ்வேறு நாடுகளுக்காக டி20 உலகக் கோப்பையில் விளையாடி அரிய சாதனை படைத்துள்ளனர். அவர்கள் யார் என்று இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

27
ஷெஹான் ஜெயசூர்யா (இலங்கை, அமெரிக்கா)

இலங்கை முன்னாள் ஆல்ரவுண்டர் ஷெஹான் ஜெயசூர்யா, 2016ல் இலங்கைக்காகவும், தற்போது அமெரிக்காவுக்காகவும் டி20 உலகக் கோப்பையில் விளையாடுகிறார்.

37
மார்க் சாப்மேன் (ஹாங்காங், நியூசிலாந்து)

ஹாங்காங் அணிக்காக 2014, 2016 டி20 உலகக் கோப்பைகளில் விளையாடிய மார்க் சாப்மேன், தற்போது நியூசிலாந்து அணியின் முக்கிய மிடில் ஆர்டர் பேட்டராக வலம் வருகிறார்.

47
ரோலோஃப் வான் டெர் மெர்வே (தென் ஆப்பிரிக்கா, நெதர்லாந்து)

தென் ஆப்பிரிக்காவுக்காக 2009, 2010 டி20 உலகக் கோப்பைகளில் விளையாடிய இவர், பின்னர் நெதர்லாந்து அணிக்காக 2016, 2021, 2022 மற்றும் 2026 உலகக் கோப்பைகளிலும் பங்கேற்கிறார்.

57
டேவிட் வைஸ் (தென் ஆப்பிரிக்கா, நமீபியா)

2016ல் தென்னாப்பிரிக்காவுக்காக விளையாடிய டேவிட் வைஸ், பின்னர் நமீபியா அணிக்காக 2021, 2022, மற்றும் 2024 டி20 உலகக் கோப்பைகளில் முக்கியப் பங்காற்றினார்.

67
டிர்க் நானெஸ் (ஆஸ்திரேலியா, நெதர்லாந்து)

வேகப்பந்து வீச்சாளர் டிர்க் நானெஸ், 2009ல் ஆஸ்திரேலியாவுக்காகவும், 2010ல் நெதர்லாந்துக்காகவும் டி20 உலகக் கோப்பையில் விளையாடியுள்ளார்.

77
கோரி ஆண்டர்சன் (நியூசிலாந்து, அமெரிக்கா)

ஒருநாள் போட்டிகளில் அதிவேக சதம் அடித்த கோரி ஆண்டர்சன், 2016ல் நியூசிலாந்துக்காகவும், 2024ல் அமெரிக்காவுக்காகவும் டி20 உலகக் கோப்பையில் விளையாடியுள்ளார்.

RK
About the Author

Rsiva kumar

நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.Read More...
Read more Photos on
click me!

Recommended Stories