வெஸ்ட் இண்டீஸின் புதிய 'யுனிவர்ஸ் பாஸ்' ஹெட்மயர்! 22 பந்துகளில் அரைசதம்; கெயிலின் 17 வருட சாதனை காலி!

Published : Feb 07, 2026, 07:49 PM IST

Shimron Hetmyer breaks Chris Gayle record:டி20 உலகக் கோப்பை 2026-ல் ஷிம்ரன் ஹெட்மயர் புதிய சாதனை படைத்துள்ளார். ஸ்காட்லாந்துக்கு எதிராக வெறும் 22 பந்துகளில் அரைசதம் அடித்து, West Indies அணிக்காக அதிவேக அரைசதம் அடித்த வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார்.

PREV
14
22 பந்துகளில் ஹெட்மயர் அதிரடி அரைசதம்

கொல்கத்தாவில் நடந்த டி20 உலகக்கோப்பை 2026 தொடரின் 2ஆவது போட்டியில், ஷிம்ரன் ஹெட்மயர் அதிரடியாக விளையாடி, கிறிஸ் கெய்லின் 17 ஆண்டுகால சாதனையை முறியடித்தார். ஹெட்மயருக்கு இது ஒரு வரலாற்று தருணமாக அமைந்தது.

24
தடுமாறிய தொடக்கம்.. கிங் ஆறுதல்

முதலில் டாஸ் வென்ற ஸ்காட்லாந்து பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி வெஸ்ட் இண்டீஸ் முதலில் பேட்டிங் செய்தது. ஆரம்பத்தில் தடுமாறி பவர்பிளேயில் 33 ரன்கள் மட்டுமே எடுத்தது. பிராண்டன் கிங் (35) சற்று வேகம் காட்டினாலும், முக்கிய விக்கெட்டுகள் சரிந்தன. பின்னர் வந்த ஹெட்மயர் அதிரடியாக விளையாடி  22 பந்துகளில் அரைசதம் அடித்து சாதனை படைத்தார். கடந்த 2009 ஆம் ஆண்டு கெய்ல் 23 பந்துகளில் அரைசதம் அடித்து சாதனை படைத்திருந்தார். இப்போது 17 ஆண்டுகளுக்கு பிறகு ஹெட்ம்யர் கெயிலின் சாதனையை முறியடித்து புதிய வரலாற்று சாதனை படைத்துள்ளார். இந்தப் போட்டியில் அவர் 36 பந்துகளில் 64 ரன்கள் குவித்தார்.

34
பாவெல், ஷெர்ஃபேன் ரூதர்ஃபோர்ட்

ஹெட்மயர், ரோவ்மன் பாவெல் உடன் இணைந்து 37 பந்துகளில் 81 ரன்கள் சேர்த்தார். கடைசி ஓவர்களில் ரூதர்ஃபோர்ட் அதிரடியால், WI 20 ஓவர்களில் 182/5 ரன்கள் குவித்தது. போட்டிக்கு பிறகு பேசிய ஹெட்மயர் கூறியிருப்பதாவது: ஃபிட்னஸுக்கு மனைவிதான் காரணம். அவர்தான் என் பயிற்சியாளர், அவரின் ஊக்கத்தால் தான் இந்த ஆட்டம் சாத்தியமானது' என நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார்.

44
ஸ்காட்லாந்தின் போராட்டம்.. வெஸ்ட் இண்டீஸ் ஆதிக்கம்

ஸ்காட்லாந்தின் ஃபீல்டிங் சிறப்பாக இருந்தது, குறிப்பாக மெக்முல்லனின் கேட்ச். இருப்பினும், விண்டீஸ் பவுலர்களின் அதிரடியால், ஸ்காட்லாந்து 147 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இந்தப் போட்டியில் வெஸ்ட் இண்டீஸின் வேகப்பந்து வீச்சாளர் ரொமாரியோ ஷெபர்டு  ஒரே ஓவரில் 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார். அதுவும் ஹாட்ரிக் விக்கெட்டுகள் கைப்பற்றி சாதனை படைத்தார். போட்டியின் 16.2ஆவது ஓவரில் மேத்யூ கிராஸை ஆட்டமிழக்கச் செய்தார். அடுத்து வந்த மைக்கேல் லீக் ரன் ஏதுமின்றி ஆட்டமிழக்க, அடுத்து வந்த ஓலிவர் டேவிட்ஸனும் 0 ரன்னுக்கு ஆட்டமிழந்தார். இறுதியாக ஸ்காட்லாந்து 18.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 147 ரன்கள் மட்டுமே எடுத்தது.

RK
About the Author

Rsiva kumar

நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.Read More...
Read more Photos on
click me!

Recommended Stories