தோனி செய்யாத சாதனை – சிஎஸ்கேயின் முதல் கேப்டனாக சதம் விளாசி சாதனை படைத்த ருதுராஜ் கெய்க்வாட்!

First Published | Apr 23, 2024, 10:28 PM IST

லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணிக்கு எதிரான 39ஆவது லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனான ருதுராஜ் கெய்க்வாட் சதம் விளாசியதன் மூலமாக சிஎஸ்கேயின் முதல் கேப்டனாக சதம் விளாசி சாதனை படைத்துள்ளார்.

Chennai Super Kings vs Lucknow Super Giants, 39th Match

சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணிகளுக்கு இடையிலான ஐபிஎல் 2024 கிரிக்கெட் தொடரின் 39ஆவது லீக் போட்டி தற்போது சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில், டாஸ் வென்ற லக்னோ கேப்டன் கேஎல் ராகுல் பவுலிங் தேர்வு செய்தார். அதன்படி சிஎஸ்கே அணியில் அஜிங்க்யா ரஹானே மற்றும் ருதுராஜ் கெய்க்வாட் இருவரும் தொடக்க வீரர்களாக களமிறங்கினர்.

Chennai Super Kings vs Lucknow Super Giants, 39th Match

இதில் ரஹானே 1 ரன்னில் ஆட்டமிழக்க, அடுத்து வந்த டேரில் மிட்செல் 11 ரன்களில் ஆட்டமிழந்தார். இவரைத் தொடர்ந்து ரவீந்திர ஜடேஜா களமிறங்கினார். ஆனால், ஆவரும் பெரிதாக சோபிக்கவில்லை. அவர் 16 ரன்களில் ஆட்டமிழந்தார். இதையடுத்து கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் உடன் ஷிவம் துபே ஜோடி சேர்ந்தார். இருவரும் சிக்ஸர் மற்றும் பவுண்டரி மழை பொழிந்தனர்.

Tap to resize

Chennai Super Kings vs Lucknow Super Giants, 39th Match

இதில், ருதுராஜ் கெய்க்வாட் 28 பந்துகளில் அரைசதம் கடந்து, 56 பந்துகளில் 103 ரன்கள் குவித்து சாதனை படைத்தார். அதாவது சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் சதம் விளாசிய முதல் கேப்டன் என்ற சாதனையை படைத்துள்ளார். மேலும், இந்த சீசனில் சதம் அடித்த முதல் கேப்டன் என்ற சாதனையையும் படைத்துள்ளார்.

Ruturaj Gaikwad

இதற்கு முன்னதாக சிஎஸ்கே அணிக்கு 249 போட்டிகளில் 235 போட்டிகளில் கேப்டனாக இருந்த எம்.எஸ்.தோனி ஒரு சதம் கூட அடிக்கவில்லை. அந்த சாதனையைத் தான் தற்போது தனது 8ஆவது போட்டியில் ருதுராஜ் கெய்க்வாட் படைத்துள்ளார். இந்த சீசனில் இதுவரையில் விளையாடிய 8 போட்டிகளில் ருதுராஜ் கெய்க்வாட் 349 ரன்கள் குவித்துள்ளார். இதில், 2 அரைசதங்களும் அடங்கும்.

Chennai Super Kings vs Lucknow Super Giants, 39th Match

இதே போன்று ஷிவம் துபேவும் தன் பங்கிற்கு அரைசதம் விளாசினார். அவர் 27 பந்துகளில் 3 பவுண்டரி, 7 சிக்ஸர் உள்பட 66 ரன்கள் எடுத்து ரன் அவுட் செய்யப்பட்டார். கடைசியில் வந்த தோனி பவுண்டரி அடிக்க சிஎஸ்கே 20 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 210 ரன்கள் குவித்தது.

Chennai Super Kings vs Lucknow Super Giants, 39th Match

இதில், கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் 60 பந்துகளில் 12 பவுண்டரி, 3 சிக்ஸர் உள்பட 108 ரன்கள் குவித்து ஆட்டமிழக்காமல் இருந்தார். பவுலிங்கைப் பொறுத்த வரையில் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியில் மேட் ஹென்றி, மோசின் கான் மற்றும் யாஷ் தாக்கூர் தலா ஒரு விக்கெட் கைப்பற்றினர்.

Latest Videos

click me!