NZ உடனான முதல் டெஸ்ட் டிரா எதிரொலி... இந்தியா உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனலுக்கு செல்ல வாய்ப்பு இருக்கா? இல்லையா?

Published : Nov 23, 2026, 11:12 AM IST

NZ vs IND 1st Test Draw : நியூசிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டி டிராவில் முடிவடைந்துள்ளதால், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் ரேஸில் அதிரடி மாற்றம் நிகழ்ந்துள்ளது. அதைப்பற்றி பார்க்கலாம்.

PREV
13
NZ vs IND 1st Test

நியூசிலாந்துக்கு எதிரான முதல் கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில் இந்தியா டிரா மட்டுமே செய்ய முடிந்தது. முதல் இன்னிங்ஸில் 352 ரன்கள் என்ற பிரம்மாண்ட முன்னிலை பெற்றாலும், இரண்டாவது இன்னிங்ஸில் கிளென் பிலிப்ஸ் மற்றும் டேரில் மிட்செல் ஆகியோரின் போராட்டத்தால் நியூசிலாந்து அணி போட்டியை டிரா செய்தது. 119/2 என்ற நிலையில் கடைசி நாள் ஆட்டத்தை தொடங்கியது நியூசிலாந்து.

இன்றைய நாளில் டெவோன் கான்வே (65) மற்றும் ரச்சின் ரவீந்திரா (37) ஆகியோரை ஆரம்பத்திலேயே வீழ்த்தி இந்தியா வெற்றி நம்பிக்கையை எழுப்பியது. ஆனால் பிட்ச்சில் இருந்து வேகப்பந்து வீச்சாளர்களுக்கோ சுழற்பந்து வீச்சாளர்களுக்கோ எந்த உதவியும் கிடைக்காததால், முதல் செஷனில் அதிக விக்கெட்டுகளை எடுக்க முடியாமல் இந்திய பவுலர்கள் திணறினர். உணவு இடைவேளைக்கு பிறகு, இரண்டாவது செஷனில் டாம் பிளண்டலை (15) அன்ஷுல் கம்போஜ் ஆட்டமிழக்க செய்து இந்தியாவுக்கு நம்பிக்கை அளித்தாலும், பிலிப்ஸ் மற்றும் மிட்செலின் பேட்டிங் இந்திய அணியின் வெற்றி வாய்ப்பை தகர்த்தது.

KL Rahul: 6 மாத உழைப்பு.. செஞ்சுரியில் கிடைத்த பலன்! நியூசிலாந்தில் மனம் திறந்த கே.எல். ராகுல்..!

23
டிராவில் முடிந்த முதல் டெஸ்ட்

இறுதியாக 5 விக்கெட் இழப்புக்கு 239 ரன்கள் எடுத்திருந்தபோது இரு அணிகளும் டிராவை ஒப்புக்கொண்டன. கிளென் பிலிப்ஸ் 126 பந்துகளில் 26 ரன்களுடனும், டேரில் மிட்செல் 186 பந்துகளில் 49 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர். இந்திய தரப்பில் பிரசித் கிருஷ்ணா இரண்டு விக்கெட்டுகளையும், அன்ஷுல் கம்போஜ், வாஷிங்டன் சுந்தர் மற்றும் ஜஸ்பிரித் பும்ரா தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.

முதல் இன்னிங்ஸில் 175 ரன்கள் குவித்து நியூசிலாந்தை சரிவில் இருந்து மீட்ட ஹென்றி நிக்கோல்ஸ் ஆட்டநாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்த டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 368 ரன்களுக்கு ஆல் வுட் ஆனது, இரண்டாவது இன்னிங்ஸில் 5 விக்கெட்டுகளை இழந்து 239 ரன்கள் குவித்திருந்தது. இந்தியா முதல் இன்னிங்ஸில் 9 விக்கெட்டுகளை இழந்து 720 ரன்களை குவித்து டிக்ளேர் செய்தது.

33
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் ரேஸில் இந்தியாவிற்கு பின்னடைவு

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு முன்னேறும் வாய்ப்பை தக்கவைக்க இந்தியாவுக்கு இந்த போட்டியில் வெற்றி பெறுவது கட்டாயமாக இருந்தது. போட்டி டிராவில் முடிந்ததால், புள்ளிப்பட்டியலில் முன்னேறும் வாய்ப்பை தவறவிட்ட இந்தியா, இறுதிப்போட்டிக்கு செல்லும் வாய்ப்பிலும் பெரும் பின்னடைவை சந்தித்துள்ளது. இனி எஞ்சியுள்ள 7 டெஸ்ட் போட்டிகளில் இந்தியா 6 போட்டிகளில் வென்றால் மட்டுமே உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு முன்னேற முடியும்.

நியூசிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் வருகிற நவம்பர் 27ந் தேதி கிறிஸ்ட்சர்ச் மைதானத்தில் நடைபெற உள்ளது. இந்த டெஸ்ட்டில் வெற்றிபெறும் அணி தொடரை கைப்பற்றும். ஒருவேளை இந்த டெஸ்டும் டிராவில் முடிந்தால் கோப்பை இருவருக்குமே வழங்கப்படும்.

click me!

Recommended Stories