Siraj : முகமது சிராஜ், நாகினி 3 நடிகை மஹிரா ஷர்மா உடன் டேட்டிங்கா? உண்மையை சொன்ன நடிகை!

Published : Mar 04, 2025, 08:16 PM IST

Mahira Sharma and Mohammed Siraj Dating Rumors : டிவி நடிகை மஹிரா ஷர்மா, கிரிக்கெட் வீரர் முகமது சிராஜ் உடன் காதல் கிசுகிசுக்களை வெறும் வதந்தி என்று கூறியுள்ளார்.

PREV
15
Siraj : முகமது சிராஜ், நாகினி 3 நடிகை மஹிரா ஷர்மா உடன் டேட்டிங்கா? உண்மையை சொன்ன நடிகை!

Mahira Sharma and Mohammed Siraj Dating Rumors : டிவி நடிகை மஹிரா ஷர்மாவுக்கும், கிரிக்கெட் வீரர் முகமது சிராஜுக்கும் இடையே காதல் இருப்பதாக சில காலமாக செய்திகள் வந்த வண்ணம் உள்ளன. 'நாகினி 3' போன்ற சீரியல்களில் நடித்த மஹிரா கான் இதுகுறித்து மௌனம் கலைத்து, அந்த செய்திகளில் உண்மையில்லை என்று கூறியுள்ளார். கடந்த பிப்ரவரி மாதம் வெளியான ஒரு செய்தி அறிக்கையில், மஹிரா ஷர்மாவும், முகமது சிராஜும் ஒருவரை ஒருவர் டேட் செய்து வருவதாகவும், ஆனால் அதை ரகசியமாக வைத்துள்ளனர் என்றும் கூறப்பட்டது.

25
Mohammed Siraj, Cricket, Rumors

மஹிரா ஷர்மா, முகமது சிராஜ் உறவு உண்மை என்ன?

மஹிரா ஷர்மா ஃபில்மி க்யான் உடனான உரையாடலின்போது, முகமது சிராஜ் உடனான காதல் கிசுகிசுக்கள் வெறும் வதந்தி என்று கூறினார். தான் யாரையும் காதலிக்கவில்லை என்றும் அவர் திட்டவட்டமாக தெரிவித்தார். "யாரும் இல்லை. நான் யாரையும் டேட் செய்யவில்லை" என்று அவர் கூறினார்.

35
Mahira Sharma, Mohammed Siraj

காதல் வதந்திகளை எப்படி கையாள்கிறீர்கள்?

இந்த உரையாடலின்போது, மஹிரா ஷர்மாவிடம் காதல் வதந்திகளை எப்படி கையாள்வீர்கள் என்று கேட்டபோது, "ரசிகர்கள் உங்களை யாரோடு வேண்டுமானாலும் இணைக்கலாம். அதை நாம் தடுக்க முடியாது. நான் நடிக்கும்போது, என் கூட நடிக்கும் நடிகர்களுடனும் என்னை இணைத்து பேசுவார்கள். அவர்கள் எடிட் எல்லாம் செய்வார்கள். ஆனால் நான் அதை பெரிதாக எடுத்துக்கொள்ள மாட்டேன். உங்களுக்கு பிடித்திருந்தால் செய்யுங்கள், ஆனால் அப்படி எதுவும் இல்லை" என்று கூறினார்.

45
Mohammed Siraj Dating Rumors With Mahira Sharma

மஹிரா ஷர்மா - முகமது சிராஜ் பெயர் எப்படி இணைந்தது?

முகமது சிராஜ், மஹிரா ஷர்மாவின் சமூக வலைதள பதிவை லைக் செய்தபோதுதான், இருவருக்கும் காதல் இருப்பதாக செய்திகள் பரவ ஆரம்பித்தன. அதுமட்டுமின்றி, இருவரும் சமூக வலைதளங்களில் ஒருவரை ஒருவர் பின் தொடர்ந்தனர்.

55
Mahira Sharma Dating Rumors With Mohammed Siraj

'தாரக் மேத்தா கா ஊல்டா சஷ்மா' போன்ற சீரியல்களில் மஹிரா ஷர்மா

27 வயதான மஹிரா ஷர்மா, பிரபலமான டிவி நடிகை ஆவார். 2015ஆம் ஆண்டு 'தாரக் மேத்தா கா ஊல்டா சஷ்மா' சீரியலில் ஏக்தா என்ற கதாபாத்திரத்தில் நடித்து தனது வாழ்க்கையைத் தொடங்கினார். பின்னர் அவர் 'யாரோன் கா டஷன்', 'பார்ட்னர் டிரபிள் ஹோ கயி டபுள்', 'நாகினி 3', 'குண்டலி பாக்யா', 'பேபனா பியார்' போன்ற சீரியல்களிலும் நடித்தார். 'நாகினி 3' சீரியலில் யாமினி என்ற சூனியக்காரியாக சிறிய, ஆனால் வலுவான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

RK
About the Author

Rsiva kumar

நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.Read More...
click me!

Recommended Stories