ஆபரேஷன் ஹெட், அபிஷேக் சர்மா – 2 பேரையும் காலி செய்த குல்தீப் யாதவ் – சீனியர், ஜூனியர்ஸ் ஹேப்பி!

Published : Apr 20, 2024, 11:00 PM IST

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியில் அதிரடியாக விளையாடி ரன்கள் குவித்த டிராவிஸ் ஹெட் மற்றும் அபிஷேக் சர்மா இருவரும் குல்தீப் யாதவ் ஆட்டமிழக்கச் செய்து டெல்லி அணிக்கு சிம்ம சொப்பனமாகத் திகழ்ந்தார்.

PREV
18
ஆபரேஷன் ஹெட், அபிஷேக் சர்மா – 2 பேரையும் காலி செய்த குல்தீப் யாதவ் – சீனியர், ஜூனியர்ஸ் ஹேப்பி!
Delhi Capitals vs Sunrisers Hyderabad, 35th Match

ஐபிஎல் 2024 கிரிக்கெட் தொடரின் 35ஆவது லீக் போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் விளையாடி வருகின்றன. அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெற்று வரும் இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ரிஷப் பண்ட் பவுலிங் செய்தார். அதன்படி ஹைதராபாத் அணியில் டிராவிஸ் ஹெட் மற்றும் அபிஷேக் சர்மா இருவரும் களமிறங்கினர்.

28
Delhi Capitals vs Sunrisers Hyderabad, 35th Match

டெல்லி அணியில் முதல் ஓவரை கலீல் அகமது வீசினார். அந்த ஓவரில் 19 ரன்கள் எடுக்கப்பட்டது. 2ஆவது ஓவரை லலீத் யாதவ் வீசினார். இந்த ஓவரில் 21 ரன்கள் எடுக்கப்பட்டது. 3ஆவது ஓவரை ஆண்ட்ரிச் நோர்ட்ஜே வீசினார். இந்த ஓவரில் 22 ரன்கள் எடுக்கப்பட்டது.

38
Delhi Capitals vs Sunrisers Hyderabad, 35th Match

4ஆவது ஓவரை லலித் குமார் வீச, அந்த ஓவரில் 21 ரன்கள் எடுக்கப்பட்டது. குல்தீப் யாதவ் வீசிய 5ஆவது ஓவரில் 3 சிக்ஸர்கள் உள்பட 20 ரன்கள் எடுக்கப்பட்டது. பவர்பிளேயின் கடைசி ஓவரை முகேஷ் குமார் வீச, அந்த ஓவரில் 4, 4, 4, 4, 0, 6 என்று 22 ரன்கள் எடுக்க பவர்பிளேயில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் விக்கெட் இழப்பின்றி 125 ரன்கள் குவித்தது.

48
DC vs SRH, 35th IPL 2024 Match

ஐபிஎல் கிரிக்கெட்டில் பவர்பிளேயில் எடுக்கப்பட்ட அதிகபட்ச ஸ்கோர் இதுவாகும். இதையடுத்து 7ஆவது ஓவரை வீசிய குல்தீப் யாதவின் 2ஆவது பந்தில் அபிஷேக் சர்மா 12 பந்துகளில் 2 பவுண்டரி, 6 சிக்ஸர் உள்பட 46 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதே ஓவரின் கடைசி பந்தில் எய்டன் மார்க்ரமும் 1 ரன்னில் நடையை கட்டினார்.

58
Delhi Capitals vs Sunrisers Hyderabad, 35th Match

இதே போன்று குல்தீப் யாதவ் வீசிய போட்டியின் 9ஆவது ஓவரின் கடைசி பந்தில் டிராவிஸ் ஹெட்டும் ஆட்டமிழந்தார். அவர், 32 பந்துகளில் 11 பவுண்டரி, 6 சிக்ஸர் உள்பட 89 ரன்கள் குவித்து வெளியேறினார். அபிஷேக் சர்மா மற்றும் டிராவிஸ் ஹெட் விக்கெட்டை எடுத்த பிறகு ஹைதராபாத் அணியின் ரன் ரேட் குறைந்தது.

68
Delhi Capitals vs Sunrisers Hyderabad

போட்டியின் 10ஆவது ஓவரின் முதல் பந்தில் ஹென்ரிச் கிளாசென் விக்கெட்டை அக்‌ஷர் படேல் எடுத்துக் கொடுத்தார். கடைசியாக 17ஆவது ஓவரின் கடைசி பந்தில் நிதிஷ் ரெட்டியின் விக்கெட்டை குல்தீப் யாதவ் எடுத்தார். இந்தப் போட்டியில் குல்தீப் யாதவ் எடுத்த 4 விக்கெட்டும் முக்கியமான விக்கெட்டுகள். அவர் மட்டும் விக்கெட்டுகளை எடுக்கவில்லை என்றால் இந்தப் போட்டியில் ஹைதராபாத் 300 ரன்களை கடந்திருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

78
Delhi Capitals vs Sunrisers Hyderabad, 35th Match

இறுதியாக சன்ரைசர்ஸ் ஹைதராபாத் 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 266 ரன்கள் குவித்தது. பவுலிங்கைப் பொறுத்த வரையில் டெல்லி அணியில் குல்தீப் யாதவ் 4 ஓவர்கள் வீசி 55 ரன்கள் கொடுத்து 4 விக்கெட்டுகள் கைப்பற்றினார். முகேஷ் குமார் 4 ஓவர்கள் வீசி ஒரு விக்கெட் எடுத்து 57 ரன்கள் கொடுத்தார். அக்‌ஷர் படேல் 4 ஓவர்கள் வீசி 29 ரன்கள் கொடுத்து ஒரு விக்கெட் எடுத்தார்.

88
DC vs SRH, IPL 2024

ஹைதராபாத் அணி விளையாடியதைப் பார்த்த டெல்லி கேபிடல்ஸ் பயிற்சியாளர், ஆலோகர்கள், என்ன செய்வதென்று தெரியாமல் தவித்தனர். அதன் பிறகு குல்தீப் யாதவ் விக்கெட்டுகள் எடுத்துக் கொடுக்கவும் நிம்மதி அடைந்தனர்.

RK
About the Author

Rsiva kumar

நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.Read More...
Read more Photos on
click me!

Recommended Stories