Tallest Cricketers: 6 அடிக்கு மேல.. இந்தியாவின் உயரமான கிரிக்கெட் வீரர்கள்.. லிஸ்ட் பார்த்தா அசந்துடுவீங்க!

Published : Aug 18, 2026, 07:27 AM IST

Tallest Cricketers: இந்திய கிரிக்கெட்டில் பனை மரம் போல் அதிக உயரம் கொண்ட வீரர்கள் இருக்கிறார்கள். இந்த பட்டியலை பார்த்தால் நீஙகளே ஆச்சரியப்பட்டு போவீர்கள். வாங்க செய்திக்குள் போகலாம்.

PREV
14
இந்தியாவின் உயரமான கிரிக்கெட் வீரர்கள்

கிரிக்கெட்டைப் பொறுத்தவரை ஒரு வீரரின் திறமைதான் முக்கியம். ஆனால், சில வீரர்களுக்கு அவர்களின் உயரம் களத்தில் ஒரு தனி அடையாளத்தைக் கொடுக்கும். குறிப்பாக, வேகப்பந்து வீச்சாளர்கள் உயரமாக இருந்தால், பிட்ச்சில் பந்தை கூடுதலாக பவுன்ஸ் செய்ய முடியும். இந்திய கிரிக்கெட் வரலாற்றில் 6 அடிக்கு மேல் உயரமுள்ள பல வீரர்கள் இருந்திருக்கிறார்கள். அவர்களில் டாப் 7 வீரர்கள் யார் என்று பார்ப்போம்.

இஷாந்த் சர்மா (6 அடி 4 அங்குலம்)

இந்திய டெஸ்ட் கிரிக்கெட்டின் வெற்றிகரமான பந்துவீச்சாளர்களில் ஒருவரான இஷாந்த் சர்மாவின் உயரம் சுமார் 6 அடி 4 அங்குலம். தனது நீண்ட கிரிக்கெட் பயணத்தில், ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து போன்ற பிட்ச்களில் இந்த உயரத்தை வைத்தே பேட்ஸ்மேன்களை நடுங்க வைத்திருக்கிறார்.

24
ஷிவம் துபே மற்றும் வெங்கடேஷ் ஐயர் (6 அடி 4 அங்குலம்)

இந்தப் பட்டியலில் பவுலர்கள் மட்டுமல்ல, ஆல்-ரவுண்டர்களும் இருக்கிறார்கள். தற்போதைய இந்திய அணியின் பவர் ஹிட்டர் சிவம் துபே மற்றும் வெங்கடேஷ் ஐயர் ஆகிய இருவருமே 6 அடி 4 அங்குலம் உயரம் கொண்டவர்கள். இவர்களது உயரம், பெரிய சிக்ஸர்களை விளாசுவதற்கு உதவியாக இருக்கிறது.

அபே குருவில்லா மற்றும் பங்கஜ் சிங் (6 அடி 6 அங்குலம்)

இந்தியாவின் மிக உயரமான கிரிக்கெட் வீரர்கள் பட்டியலில் அபே குருவில்லா மற்றும் பங்கஜ் சிங் ஆகிய இருவரும் முதல் இடத்தில் உள்ளனர். இருவருமே சுமார் 6 அடி 6 அங்குலம் உயரம் கொண்டவர்கள். வேகப்பந்து வீச்சாளர்களான இவர்கள், தங்களது உயரத்தைப் பயன்படுத்தி பந்தை நன்றாக பவுன்ஸ் செய்து பேட்ஸ்மேன்களை திணறடித்தனர்.

34
பிரசித் கிருஷ்ணா (6 அடி 3 அங்குலம்)

கர்நாடகாவைச் சேர்ந்த வேகப்பந்து வீச்சாளர் பிரசித் கிருஷ்ணாவின் உயரம் சுமார் 6 அடி 3 அங்குலம். தற்போதைய அணியில் இருக்கும் இவர், தனது உயரத்தைப் பயன்படுத்தி பந்தை எக்ஸ்ட்ரா பவுன்ஸ் செய்து விக்கெட்டுகளை வீழ்த்துவதில் கெட்டிக்காரர்.

சுதீப் தியாகி (6 அடி 4 அங்குலம்)

முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் சுதீப் தியாகியும் 6 அடி 4 அங்குலம் உயரம் கொண்டவர். இந்திய அணிக்காக சில போட்டிகளில் விளையாடிய இவர், தனது உயரத்தால் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார்.

44
இந்தியாவின் டாப் 7 உயரமான கிரிக்கெட் வீரர்கள் ஷார்ட் பட்டியல்:

அபே குருவில்லா: 6 அடி 6 அங்குலம்

பங்கஜ் சிங்: 6 அடி 6 அங்குலம்

இஷாந்த் சர்மா: 6 அடி 4 அங்குலம்

ஷிவம் துபே: 6 அடி 4 அங்குலம்

வெங்கடேஷ் ஐயர்: 6 அடி 4 அங்குலம்

சுதீப் தியாகி: 6 அடி 4 அங்குலம்

பிரசித் கிருஷ்ணா: 6 அடி 3 அங்குலம்

Read more Photos on
click me!

Recommended Stories