IND vs WI: 250 ரன் அடிச்சும் தோத்துட்டோமே.. இந்திய பவுலிங் கோச்சை விளாசித் தள்ளிய ஜாம்பவான்!

Published : Oct 10, 2026, 04:23 PM IST

IND vs WI: வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான 2வது டி20 போட்டியில் இந்திய அணி 249 ரன்கள் குவித்தும் தோற்றது. இந்திய பவுலிங் யூனிட் இந்த அளவுக்கு பலவீனமாக உள்ளதா? என ரசிகர்கள், முன்னாள் வீரர்கள் பேச ஆரம்பித்துள்ளனர்.

PREV
14
249 ரன்கள் குவித்தும் இந்தியா தோல்வி

ராஞ்சியில் நடைபெற்ற வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில், இந்தியா 250 ரன்கள் என்ற இமாலய இலக்கை நிர்ணயித்தது. ஆனால், வெஸ்ட் இண்டீஸ் அணி இன்னும் 9 பந்துகள் மீதமிருக்கும்போதே இந்த இலக்கை எளிதாக எட்டி சாதனை படைத்தது. முதலில் பேட் செய்த இந்தியா 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 249 ரன்கள் குவித்தது. எனினும், ஷாய் ஹோப் அடித்த மிரட்டலான சதம் வெஸ்ட் இண்டீஸ்வ அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றது. 250 ரன்கள் இலக்கு வைத்தும் இந்தியா தோற்றது ஏன்? என ரசிகர்கள் புலம்பி வருகின்றனர்.

24
பவுலிங் கோச்சை விளாசித் தள்ளிய சுனில் கவாஸ்கர்

இந்த நிலையில், ராஞ்சியில் பனிப்பொழிவு (Dew) அதிகமாக இருந்தாலும், நமது பந்துவீச்சாளர்கள் இன்னும் கொஞ்சம் நன்றாக பந்துவீசியிருக்கலாம் என கிரிக்கெட் ஜாம்பவான் சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார். ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனலில் பேசிய கவாஸ்கர், "சில ஓவர்களுக்குப் பிறகு ரன் ரேட் குறைந்தபோது, இந்தியா 235 முதல் 240 ரன்கள் வரை அடிக்கும் என்று நான் நினைத்தேன். அதனால் பேட்ஸ்மேன்களை நாம் குறை சொல்ல முடியாது. அவர்கள் தங்கள் வேலையை சரியாகச் செய்துவிட்டார்கள்.

ஆனால், பந்துவீச்சாளர்கள் மட்டும் அவர்கள் செய்ய வேண்டிய வேலையை சரியாகச் செய்யவில்லை என்பது மிகவும் தெளிவாகத் தெரிகிறது. இந்த பந்துவீச்சாளர்களிடம் இருந்து என்ன எதிர்பார்த்தார்கள், அதை அவர்கள் செய்வார்களா என்று பந்துவீச்சு பயிற்சியாளரிடம் கேட்டால், அதுக்கான பதில் ரொம்ப சுவாரஸ்யமாக இருக்கும்" என்று கூறியுள்ளார்.

34
தோல்விக்கான காரணத்தை சொன்ன ஸ்ரேயாஸ் ஐயர்

இன்னொரு பக்கம், போட்டி தோற்றாலும் இந்திய அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் எதிரணியின் பேட்டிங்கையும் அவர்களது பார்ட்னர்ஷிப்பையும் பாராட்டியுள்ளார். நமது வீரர்களைக் குறை சொல்ல அவர் மறுத்துவிட்டார். அதற்கு பதிலாக, ராஞ்சியில் இருந்த பனிப்பொழிவும் பிட்ச்சின் தன்மையும்தான் தோல்விக்குக் காரணம் என்று அவர் கூறியுள்ளார்.

"இதற்கு சரியான காரணத்தைச் சொல்ல முடியாது. ஏனென்றால், பனிப்பொழிவு ஆரம்பமானதும் பந்துவீசுவது மிகவும் கடினமாக மாறிவிடும். 249 ரன்கள் என்ற பெரிய ஸ்கோரைக்கூட எதிரணி இன்னும் இரண்டு ஓவர்கள் மீதம் இருக்கும்போதே அடித்து முடித்துவிட்டார்கள். இந்த பிட்ச்சில் செய்யும் சின்னத் தவறு கூட பெரிய விலையைக் கொடுக்க வைக்கும்.

பந்து கொஞ்சம் மிஸ் ஆனாலும் அது நேராக கேலரிக்குத்தான் சென்றது. அவர்கள் ரொம்ப சூப்பராக பேட் செய்தர்கள். சஞ்சு, அபிஷேக், மயங்க் கிட்ட இருந்து நாங்க இதைத்தான் எதிர்பார்க்கிறோம்" என்று ஸ்ரேயாஸ் ஐயர் தெரிவித்துள்ளார்.

44
விராட் கோலி சாதனையை சமன் செய்த சாம்சன்

இந்த போட்டியில் சஞ்சு சாம்சன் வெறும் 21 பந்துகளில் அரைசதம் அடித்தார். வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக ஒரு இந்திய வீரர் அடித்த அதிவேக அரைசதம் இதுவாகும். இதற்கு முன்பு 2019-ல் வான்கடே ஸ்டேடியத்தில் விராட் கோலியும் 21 பந்துகளில் 50 ரன்கள் அடித்திருந்தார். இப்போது அந்த சாதனையை சஞ்சு சமன் செய்துள்ளார்.

இந்தப் போட்டியில் இந்தியா 5 விக்கெட் இழப்புக்கு 249 ரன்கள் குவித்தது. டி20 ஃபார்மேட்டில் வெஸ்ட் இண்டீஸுக்கு எதிராக இந்தியா அடித்த அதிகபட்ச ஸ்கோர் இதுவாகும். இதற்கு முன்பு 2016-ல் லாடர்ஹில்லில் நடைபெற்ற போட்டியில் இந்தியா 4 விக்கெட்டுக்கு 244 ரன்கள் அடித்திருந்தது. அதேபோல 2019-ல் மும்பையில் 3 விக்கெட்டுக்கு 240 ரன்கள் அடித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Read more Photos on
click me!

Recommended Stories