இந்திய டெஸ்ட் அணியில் மீண்டும் இடம்பிடித்த கிளாஸ் பிளேயர்..! ஆஸி.,க்கு எதிரான டெஸ்ட், ஒருநாள் அணி விவரம்

First Published | Oct 26, 2020, 9:58 PM IST

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்திய டெஸ்ட் மற்றும் ஒருநாள் அணிகளில் இடம்பெற்றுள்ள வீரர்கள் விவரத்தை பார்ப்போம்.
 

ஐபிஎல் முடிந்ததும் இந்திய அணி ஆஸ்திரேலியாவிற்கு சுற்றுப்பயணம் செய்து 3 ஒருநாள், 3 டி20 மற்றும் 4 டெஸ்ட் போட்டிகளை கொண்ட தொடரில் ஆடவுள்ளது. ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்துக்கான டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 ஆகிய 3 அணிகளும் அறிவிக்கப்பட்டுள்ளன.
ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்திற்கான இந்திய அணியில் ரோஹித் சர்மா இடம்பெறவில்லை. நடப்பு ஐபிஎல் சீசனில் ரோஹித் சர்மா காயம் காரணமாக கடந்த 2 போட்டிகளில் ஆடவில்லை. ரோஹித் சர்மாவுக்கு தொடையில் காயம் ஏற்பட்டுள்ள நிலையில், அவரது உடற்தகுதி கண்காணிக்கப்பட்டுவருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tap to resize

ரோஹித் சர்மா பெயர் இடம்பெறாத நிலையில், டெஸ்ட் அணியில் மீண்டும் கேஎல் ராகுல் இடம்பிடித்துள்ளார். டெஸ்ட் அணியின் முதன்மை தொடக்க வீரராக இருந்த கேஎல் ராகுல், 2018 இங்கிலாந்து சுற்றுப்பயணம் மற்றும் வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான தொடரில் சொதப்பியதையடுத்து டெஸ்ட் அணியிலிருந்து நீக்கப்பட்டிருந்த நிலையில், அதன்பின்னர் கடந்த ஓராண்டுக்கும் மேலாக தொடர்ச்சியாக சிறப்பாக ஆடிவருவதால், ராகுல் மீண்டும் இப்போது டெஸ்ட் அணியில் இடம்பிடித்துள்ளார்.
ஐபிஎல்லில் காயமடைந்த இஷாந்த் சர்மா, பெங்களூருவில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமியில் சிகிச்சையும் பயிற்சியும் பெற்றுவருகிறார். அவரும் கண்காணிப்பில் இருப்பதால் அவரது பெயரும் டெஸ்ட் அணியில் இல்லை. முகமது சிராஜ் டெஸ்ட் அணியில் ஃபாஸ்ட் பவுலராக சேர்க்கப்பட்டுள்ளார்.
டி20 மற்றும் ஒருநாள் அணிகளில் இடம்பெறாத ரிஷப் பண்ட், டெஸ்ட் அணியில் 2வது விக்கெட் கீப்பராக சேர்க்கப்பட்டுள்ளார். முதன்மை விக்கெட் கீப்பர் ரிதிமான் சஹா தான்.
டெஸ்ட் அணியில் ஹர்திக் பாண்டியா இடம்பெறவில்லை. ஹர்திக் பாண்டியா இல்லாததால் ஆல்ரவுண்டர் பற்றாக்குறை நிலவுகிறது. அது ஆடும் லெவன் காம்பினேஷனை தேர்வு செய்வதில் சற்று சிரமத்தை ஏற்படுத்தும்.
இந்திய டெஸ்ட் அணி:விராட் கோலி(கேப்டன்), ரஹானே(துணை கேப்டன்), மயன்க் அகர்வால், பிரித்வி ஷா, கேஎல் ராகுல், புஜாரா, ஹனுமா விஹாரி, ஷுப்மன் கில், ரிதிமான் சஹா(விக்கெட் கீப்பர்), ரிஷப் பண்ட்(விக்கெட் கீப்பர்), பும்ரா, ஷமி, உமேஷ் யாதவ், நவ்தீப் சைனி, குல்தீப் யாதவ், ஜடேஜா, அஷ்வின், முகமது சிராஜ்.
இந்திய ஒருநாள் அணி:விராட் கோலி(கேப்டன்), ஷிகர் தவான், கில், ராகுல்(துணை கேப்டன், விக்கெட் கீப்பர்), ஷ்ரேயாஸ் ஐயர், மனீஷ் பாண்டே, ஹர்திக் பாண்டியா, மயன்க் அகர்வால், ஜடேஜா, சாஹல், குல்தீப் யாதவ், பும்ரா, ஷமி, சைனி, ஷர்துல் தாகூர்.

Latest Videos

click me!