ஹர்திக், அபிஷேக், திலக் ருத்ரதாண்டவம்.. தெறிக்க விட்ட இந்தியா.. 4 ரன்னில் உலக சாதனை மிஸ்ஸிங்!

Published : Feb 26, 2026, 09:33 PM IST

கடைசி கட்டத்தில் ஹர்திக் பாண்ட்யாவும், திலக் வர்மாவும் சிக்சர் மழை பொழிந்தனர். ஹர்திக் பாண்ட்யா 23 பந்தில் 4 சிக்சர்கள், 2 பவுண்டரியுடன் 50 ரன்கள் அடித்து அசத்தினார்.

PREV
14
இந்திய அணி 256 ரன்கள் குவிப்பு

டி20 உலகக் கோப்பை சூப்பர் 8 போட்டியில் ஜிம்பாப்வேவுக்கு எதிரான போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 4 விக்கெட் இழப்பிற்கு 256 ரன்கள் குவித்து பிரம்மிக்க வைத்துள்ளது. இந்த உலகக் கோப்பை தொடரில் அடிக்கப்பட்ட அதிகபட்ச ஸ்கோர் என்ற சாதனையை படைத்துள்ளது. அதிரடி வீரர் ஹர்திக் பாண்டியா 23 பந்துகளில் அரைசதம், அபிஷேக் ஷர்மா 26 பந்துகளில் அரைசதம் என அதிரடி பேட்டிங்கால் இந்திய அணி ஜிம்பாப்வேவுக்கு இமாலய இலக்கு நிர்ணயம் செய்துள்ளது.

24
பார்முக்கு திரும்பிய அபிஷேக் சர்மா

இந்திய அணி தொடக்கம் முதலே அதிரடியாக ஆடியது. கம்பேக் கொடுத்த சஞ்சு சாம்சன் 15 பந்துகளில் 2 சிக்ஸர், ஒரு பவுண்டரியுடன் 24 ரன்கள் எடுத்தார். மூன்று போட்டிகளில் டக் அவுட்டாகி இருந்த அபிஷேக் சர்மா ஒரு வழியாக பார்முக்கு திரும்பி வெறும் 26 பந்துகளில் அரை சதம் அடித்து அசத்தினார். சூப்பராக விளையாடிய அவர் 30 பந்துகளில் 4 பவுண்டரிகள், 4 சிக்சர்களுடன் 55 ரன்கள் எடுத்து அவுட் ஆனார்.

34
திலக் வர்மா, ஹர்திக் பாண்ட்யா அபாரம்

இதற்கிடையே இஷான் கிஷன் (24 பந்தில் 38 ரன்கள்), கேப்டன் சூர்யகுமார் யாதவ் (13 பந்தில் 33 ரன்கள்) அதிரடியில் கலக்கி அவுட் ஆனார்கள். கடைசி கட்டத்தில் ஹர்திக் பாண்ட்யாவும், திலக் வர்மாவும் சிக்சர் மழை பொழிந்தனர். ஹர்திக் பாண்ட்யா 23 பந்தில் 4 சிக்சர்கள், 2 பவுண்டரியுடன் 50 ரன்கள் அடித்து அசத்தினார். திலக் வர்மா 16 பந்தில் 4 சிக்சர்கள், 3 பவுண்டரியுடன் 44 ரன்கள் எடுத்தார். இதன்மூலம் இந்திய அணி 256 ரன்கள் என்ற மிக பிரம்மாண்டமான இலக்கை எட்டியது.

44
4 ரன்னில் உலக சாதனை மிஸ்ஸிங்

நடப்பு டி20 உலகக்கோப்பையில் இதுதான் அதிகப்பட்ச ஸ்கோர் ஆகும். மேலும் டி20 உலகக்கோப்பையில் இந்திய அணியின் அதிகப்பட்ச ஸ்கோர் இதுதான். மேலும் ஒட்டுமொத்த டி20 உலகக்கோப்பையில் ஒரு அணியின் 2வது அதிகப்பட்ச ஸ்கோர் இதுதான். இலங்கை அணி கென்யாவுக்கு எதிராக எடுத்த 260 ரன்களே இதுவரை முதல் அதிகப்பட்ச ஸ்கோராக இருந்து வருகிறது. இதன்மூலம் 4 ரன்களில் இந்திய அணி உலக சாதனையை நழுவ விட்டுள்ளது.

Read more Photos on
click me!

Recommended Stories