தமிழகத்தின் சொத்து, சேலம் ஹீரோ, யார்க்கர் மன்னன் நட்டுவின் மொத்த சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?

Published : Apr 22, 2024, 12:16 PM ISTUpdated : Apr 22, 2024, 12:23 PM IST

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியில் இடம் பெற்று விளையாடி வரும் தமிழக வீரர் சேலம் சின்னப்பம்பட்டியைச் சேர்ந்த நடராஜனின் சொத்து மதிப்பு ரூ.14 கோடி ஆகும்.

PREV
110
தமிழகத்தின் சொத்து, சேலம் ஹீரோ, யார்க்கர் மன்னன் நட்டுவின் மொத்த சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?
Natarajan Net Worth

கடந்த 1991 ஆம் ஆண்டு ஏப்ரல் 4 ஆம் தேதி தமிழகத்தில் சேலம் அருகிலுள்ள சின்னப்பம்பட்டியில் பிறந்தவர் நடராஜன். இவரது தந்தை விசைத்தறி நெசவு தொழிலாளி. அம்மா, ஃபாஸ்ட் புட் கடை நடத்தி வருகிறார். நடராஜன் தான் குடும்பத்தில் மூத்தவர். அவருக்கு பிறகு நால்வர் இருக்கின்றனர்.

210
Natarajan Net Worth

கடந்த ஜூன் 2018 ஆம் ஆண்டு பள்ளி தோழியான பவித்ராவை திருமணம் செய்து கொண்டார். 2020 ஆம் ஆண்டு இவர்களுக்கு அழகான பெண் குழந்தை பிறந்தது. கடந்த 2014 – 15 ஆம் ஆண்டு நடந்த ரஞ்சி டிராபி தொடரில் நடராஜன் அறிமுகமானார். இதையடுத்து, 2016 – 17 ஆம் ஆண்டு நடந்த மாநிலங்களுக்கு இடையிலான டி20 போட்டியில் தமிழகத்திற்கான டி20 போட்டியில் அறிமுகமானார்.

310
Natarajan Net Worth

இதைத் தொடர்ந்து 2018 ஆம் ஆண்டு விஜய் ஹசாரே டிராபி தொடரில் இடம் பெற்று விளையாடினார். உள்ளூர் கிரிக்கெட் போட்டிகளில் சிறப்பாக விளையாடிய நடராஜன் கடந்த 2017 ஆம் ஆண்டு நடந்த ஐபிஎல் தொடரில் பஞ்சாப் அணியில் ரூ.3 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்டார்.

410
Natarajan Net Worth

அதன் பிறகு நடந்த ஒவ்வொரு ஐபிஎல் தொடரிலும் இடம் பெற்று விளையாடி வருகிறார். ஆனால், 2018 மற்றும் 2019 ஆம் ஆண்டுகளில் நடந்த ஐபிஎல் தொடரில் நடராஜன் இடம் பெறவில்லை.

510
Natarajan Net Worth

அடுத்து சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியில் ரூ.40 லட்சத்திற்கு விளையாடிய அவர், தற்போது ரூ.4 கோடிக்கு இடம் பெற்று விளையாடி வருகிறார். ஐபிஎல் கிரிக்கெட்டில் இடம் பெற்று விளையாடியதைத் தொடர்ந்து 2020 ஆம் ஆண்டு இந்திய அணியில் இடம் பெற்றார்.

610
Natarajan Net Worth

ஆஸ்திரேலியா சென்ற இந்திய அணியில் இடம் பெற்று ஆஸ்திரேலியா சென்று அனைத்து பார்மேட்டுகளிலும் விளையாடினார். ஒரே டூரில் அனைத்து போட்டிகளிலும் விளையாடிய ஒரே வீரர் என்ற சாதனையை படைத்தார். மேலும், 2 ஒருநாள் போட்டிகளில் விளையாடிய நடராஜன் 3 விக்கெட்டுகள் கைப்பற்றினார்.

710
Natarajan Net Worth

இதே போன்று 4 டி20 போட்டிகளில் விளையாடிய நடராஜன் 7 விக்கெட்டுகளும், ஒரு டெஸ்ட் போட்டியில் இடம் பெற்று விளையாடி 3 விக்கெட்டுகளும் கைப்பற்றியுள்ளார். ஆனால், கடந்த 2 ஆண்டுகளாக இந்திய அணியில் இடம் பெறும் வாய்ப்பு நடராஜனுக்கு அமையவில்லை.

810
Natarajan Net Worth

தற்போது சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்காக விளையாடி வரும் நடராஜனின் நிகர சொத்து மதிப்பு ரூ.4 கோடி ஆகும். இதுவரையில் நடராஜனுக்கு பிசிசிஐ ஒப்பந்தம் கிடைக்கவில்லை. அதற்கான போட்டிகளிலும் அவர் இடம் பெற்று விளையாடவில்லை.

910
Natarajan Net Worth

டி நடராஜனுக்கு ஒப்புதல் அளிக்க நிறைய பிராண்டுகள் இல்லை, ஆனால் அவரது Instagramன் படி, அவர் Winleaf, Uber மற்றும் Dream11 ஐ ஆதரிக்கிறார். நடராஜன் தனது சொந்த ஊரான சின்னப்பம்பட்டியில் கிரிக்கெட் மைதானத்தில் கிரிக்கெட் அகாடமியை திறந்துள்ளார். இது வேகப்பந்து வீச்சாளர்களுக்கு வருமான ஆதாரமாக மாறியுள்ளது.

1010
Natarajan Net Worth

சின்னப்பம்பட்டியில் குடும்பத்துடன் ஆடம்பரமான சொகுசு வீட்டில் வசிக்கிறார். நடராஜனின் கார் கலெக்‌ஷன் விவரங்கள் இல்லையென்றாலும் கூட, 2021 ஆம் ஆண்டு நடந்த கபா டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியாவிற்கு எதிராக சிறப்பாக செயல்பட்டதைத் தொடர்ந்து ஆனந்த் மஹிந்திரா நிறுவனம் மஹிந்திரா தார் எஸ்யூவி ஒன்றை பரிசாக வழங்கியுள்ளது.

RK
About the Author

Rsiva kumar

நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.Read More...
Read more Photos on
click me!

Recommended Stories