இந்திய ஆடுகளங்களில் பந்து நன்றாக திரும்பும் என்பதால், தரமான விக்கெட் கீப்பருக்கு முன்னுரிமை கொடுக்கும் விதமாக, இந்தியாவில் ஆடும் டெஸ்ட் போட்டிகளில் ரிதிமான் சஹா விக்கெட் கீப்பராக எடுக்கப்பட்டார். வெளிநாடுகளில் ஆடும் டெஸ்ட் போட்டிகளில் ரிஷப் பண்ட்டுக்கே முன்னுரிமை கொடுக்கப்படும் என்பதுதான் இந்திய அணி நிர்வாகத்தின் முந்தைய திட்டம். ஆனால் ரிஷப் பண்ட் தொடர்ந்து சொதப்பியதால் தான் ஆஸி.,க்கு எதிராக சஹாவே எடுக்கப்பட்டார். ஆனால் சஹா முதல் போட்டியின் 2 இன்னிங்ஸ்களிலும் சேர்த்தே 13 ரன்கள் மட்டுமே அடித்தார். ஆனால் ரிஷப் பண்ட்டோ, பிங்க் பந்தில் ஆடப்பட்ட பயிற்சி போட்டியில் அதிரடியாக ஆடி 73 பந்தில் சதமடித்தார்.