ஐபிஎல் 13வது சீசனில், முதல் முறையாக பிளே ஆஃபிற்கே முன்னேறாமல் லீக் சுற்றிலேயே வெளியேறியது. ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்த 13வது சீசனில் அணி நிர்வாகத்துடனான கருத்து வேறுபாட்டால் ஐபிஎல்லில் ஆடாமல் நாடு திரும்பிய சுரேஷ் ரெய்னா, சிஎஸ்கே அணியில் தக்கவைக்கப்படுவாரா மாட்டாரா என்பது பெரும் சந்தேகமாக இருந்தது.
இந்நிலையில், ஐபிஎல் 14வது சீசனுக்கான ஏலத்திற்கு முன், சிஎஸ்கே அணி தக்கவைக்கும் மற்றும் கழட்டிவிடும் வீரர்கள் பட்டியலை வெளியிட்டது. சிஎஸ்கே அணியின் மேட்ச் வின்னரான சுரேஷ் ரெய்னா தக்கவைக்கப்பட்டுள்ளார். இம்ரான் தாஹிர், ட்வைன் பிராவோ, டுப்ளெசிஸ் ஆகிய சீனியர் வீரர்களும் தக்கவைக்கப்பட்டுள்ளனர்.
கடந்த சீசனில் அணிக்கு எந்தவிதத்திலும் பங்களிப்பே செய்யாமல் கடும் விமர்சனத்துக்குள்ளான கேதர் ஜாதவ், முரளி விஜய் ஆகியோருடன், ஹர்பஜன் சிங், மோனுகுமார் சிங், பியூஷ் சாவ்லா ஆகியோரும் கழட்டிவிடப்பட்டுள்ளனர். ஷேன் வாட்சன் ஓய்வுபெற்றுவிட்டார்.
சிஎஸ்கே கழட்டிவிட்ட வீரர்கள்:கேதர் ஜாதவ், பியூஷ் சாவ்லா, முரளி விஜய், ஹர்பஜன் சிங், மோனுகுமார் சிங், ஷேன் வாட்சன்(ஓய்வு).
சிஎஸ்கே அணி தக்கவைத்த வீரர்கள்:தோனி(கேப்டன்), ஜடேஜா, ரெய்னா, பிராவோ, டுப்ளெசிஸ், ருதுராஜ் கெய்க்வாட், சாம் கரன், இம்ரான் தாஹிர், தீபக் சாஹர், கேஎம் ஆசிஃப், அம்பாதி ராயுடு, லுங்கி இங்கிடி, ஹேசில்வுட், ஜெகதீசன், சாய் கிஷோர், ஷர்துல் தாகூர், மிட்செல் சாண்ட்னெர், கரன் ஷர்மா.