India vs New Zealand
IND vs NZ Mumbai Test: நியூசிலாந்து அணிக்கு எதிரான முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் தோல்வியடைந்த இந்திய அணிக்கு பிசிசிஐ கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது. மூன்றாவது டெஸ்ட் போட்டிக்கு முன்னதாக கட்டாய பயிற்சியில் ஈடுபட வேண்டும் என பிசிசிஐ உத்தரவிட்டுள்ளது.
சில போட்டிகளுக்கு முன்னதாக பயிற்சி முகாமில் பங்கேற்பது என்பது வீரர்களின் விருப்பத்திற்கு விடப்பட்டிருந்தது. எந்த வீரரும் பயிற்சி முகாமில் கலந்து கொள்ளாமல் இருக்கலாம். ஆனால், நவம்பர் 1 ஆம் தேதி தொடங்கவுள்ள மும்பை டெஸ்ட் போட்டிக்கு முன்னதாக பயிற்சி என்பது விருப்பமில்லை, கட்டாயம் என பிசிசிஐ தெரிவித்துள்ளதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன.
Mumbai Test, IND vs NZ
அனைத்து வீரர்களும் அக்டோபர் 30 மற்றும் 31 ஆகிய தேதிகளில் மும்பை மைதானத்தில் பயிற்சி முகாமில் கலந்து கொள்ள வேண்டும். இது கட்டாய பயிற்சி முகாம் என்பதால் யாரும் இதைத் தவிர்க்கக் கூடாது’ என அணி நிர்வாகம் வீரர்களுக்குத் தெரிவித்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
முதல் டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் இந்திய அணி திணறியது. இரண்டாவது டெஸ்ட் போட்டியில் சுழற்பந்து வீச்சில் சிக்கித் தவித்தது. விராட் கோலி, ரோஹித் சர்மா உள்ளிட்ட பெரும்பாலான பேட்ஸ்மேன்கள் நிலையற்ற ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். கடைசி டெஸ்ட் போட்டியிலாவது பெரிய ஸ்கோரை எடுக்க வேண்டும் என்ற கட்டாயத்தில் உள்ளனர்.
Rohit Sharma, Indian Cricket Team
இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இன்னும் ஒரு போட்டி மீதமுள்ள நிலையில், கேன் வில்லியம்சன் தலைமையிலான நியூசிலாந்து அணி 2-0 என்ற கணக்கில் டெஸ்ட் தொடரை கைப்பற்றியுள்ளது. பெங்களூருவில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்து அணி 8 wickets வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதையடுத்து, புனேவில் நடைபெற்ற இரண்டாவது டெஸ்ட் போட்டியில் கியூவிஸ் அணி 113 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இதுமட்டுமின்றி, முதல் முறையாக இந்திய மண்ணில் டெஸ்ட் தொடரை வென்றுள்ளது நியூசிலாந்து அணி.