இந்திய அணியின் புதிய பயிற்சியாளர் வி.வி.எஸ் லட்சுமணன்?.. பிசிசிஐ சொன்ன முக்கிய அப்டேட்!

Published : Dec 28, 2025, 03:49 PM IST

கௌதம் கம்பீர் தலைமையில் இந்தியா வெறும் ஏழு டெஸ்ட்களில் மட்டுமே வென்று, 10-ல் தோல்வியடைந்துள்ளது. மற்ற இரண்டு போட்டிகள் டிராவில் முடிந்தன. நியூசிலாந்து, தென்னாப்பிரிக்கா மற்றும் ஆஸ்திரேலியாவிடம் படுதோல்வி அடைந்தது

PREV
14
இந்திய அணி அடுத்தடுத்து தோல்வி

இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் கௌதம் கம்பீர் தலைமையில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக சொந்த மண்ணில் 0-2 என்ற கணக்கில் இந்தியா டெஸ்ட் தொடரை இழந்தது. கடந்த ஆண்டு நியூசிலாந்திடம் 0-3 என்ற கணக்கில் டெஸ்ட்டில் படுதோல்வி அடைந்திருந்தது. இந்திய அணி அடுத்தடுத்த ஆண்டுகளில் இரண்டாவது ஒயிட்வாஷ் அடைந்தது ரசிகர்களுக்கு மட்டுமின்றி பிசிசிஐக்கும் பெரும் அதிர்ச்சி அளித்தது.

24
டெஸ்ட் அணியின் புதிய பயிற்சியாளர் வி.வி.எஸ் லட்சுமணன்?

டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணி தொடர் தோல்வியை தழுவி வருவதால் இந்திய டெஸ்ட் அணிக்கு மட்டும் கெளதம் கம்பீருக்கு பதிலாக முன்னாள் வீரர் விவிஎஸ் லட்சுமணனை தலைமை பயிற்சியாளராக நியமிக்க பிசிசிஐ முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி வந்தன. இது தொடர்பாக விவிஎஸ் லட்சுமணனிடம் பிசிசிசி பேசி விட்டதாகவும் தகவல்கள் கூறின.

இந்த நிலையில், பிசிசிஐ செயலாளர் தேவ்ஜித் சைகியா, விவிஎஸ் லட்சுமணன் இந்திய‌ அணியின் அடுத்த டெஸ்ட் பயிற்சியாளராக அணுகப்பட்டதாக வெளியான யூகங்களை உண்மையில்லாத மற்றும் ஆதாரமற்றது என்று மறுத்துள்ளார். மேலும், டெஸ்ட் போட்டிகளுக்கான தலைமை குழுவில் மாற்றம் செய்வது குறித்து வாரியம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் அவர் கூறினார்.

34
பிசிசிஐ மறுப்பு

இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய‌ , தேவ்ஜித் சைகியா''இது முற்றிலும் தவறான செய்தி. இது முற்றிலும் ஊகத்தின் அடிப்படையிலான செய்தி. சில மிகவும் புகழ்பெற்ற செய்தி நிறுவனங்களும் இந்த செய்தியை ஒளிபரப்புகின்றன. இதில் எந்த உண்மையும் இல்லை. 

பிசிசிஐ இதை நேரடியாக மறுக்கிறது. மக்கள் என்ன வேண்டுமானாலும் நினைக்கலாம், ஆனால் பிசிசிஐ எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இது ஒருவரின் கற்பனையே; இதில் உண்மையில்லை, இது உண்மையில்லாத மற்றும் ஆதாரமற்ற செய்தி என்பதைத் தவிர வேறு எதுவும் என்னால் சொல்ல முடியாது" என்று தெரிவித்துள்ளர்.

44
கம்பீர் தலைமையில் இந்திய அணி மோசம்

கெளதம் கம்பீர் தலைமையில் இந்திய அணி ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் சிறப்பாக செயல்பட்டு, ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி மற்றும் ஆசிய கோப்பை டி20 தொடரை தோல்வியடையாமல் வென்றிருந்தாலும், டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்த சாதனை தலைகீழாக உள்ளது. 

இந்தியா வெறும் ஏழு டெஸ்ட்களில் மட்டுமே வென்று, 10-ல் தோல்வியடைந்துள்ளது, மற்ற இரண்டு போட்டிகள் டிராவில் முடிந்தன. இந்தியா சொந்த மண்ணில் வங்கதேசம், வெஸ்ட் இண்டீசுக்கு எதிராக 2-0 என்ற கணக்கில் தொடரை வென்றது. ஆனால் நியூசிலாந்து, தென்னாப்பிரிக்கா மற்றும் ஆஸ்திரேலியாவிடம் படுதோல்வி அடைந்தது குறிப்பிடத்தக்கது.

Read more Photos on
click me!

Recommended Stories