Abhishek Sharma: ஆத்தாடி! என்னா அடி! சிக்சர் மழை.. வெறும் 30 பந்தில் சதம்.. அபிஷேக் சர்மா உலக சாதனை!

Published : Sep 17, 2026, 09:09 PM IST

Abhishek Sharma: ஆப்கானிஸ்தானுக்கு எதிரான கடைசி டி20 போட்டியில் வெறும் 30 பந்துகளில் சதம் விளாசிய அபிஷேக் சர்மா, மாபெரும் உலக சாதனை படைத்துள்ளார். ரோகித் சர்மா உள்பட பல்வேறு வீரர்களின் சாதனைகளை தகர்த்தெறிந்துள்ளார்.

PREV
14
30 பந்துகளில் சதம் விளாசிய அபிஷேக் சர்மா

டி20 கிரிக்கெட்டில் இந்திய அணியின் அதிரடி ஓப்பனர் அபிஷேக் சர்மா புதிய வரலாற்று சாதனை டெல்லியில் இன்று நடக்கும் ஆப்கானிஸ்தானுக்கு எதிராக நடந்த மூன்றாவது மற்றும் கடைசி டி20 போட்டியில், வெறும் 30 பந்துகளில் அவர் சதம் விளாசியுள்ளார். இதன் மூலம் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அதிவேக சதம் அடித்த இந்தியர் என்ற ரோகித் சர்மாவின் (35 பந்துகள்) சாதனையை அவர் முறியடித்துள்ளார்.

24
11 சிக்சர்கள், 9 பவுண்டரிகள்

இந்த போட்டியில் 34 பந்துகளை சந்தித்த அபிஷேக், 108 ரன்கள் குவித்து ரஷித் கான் பந்துவீச்சில் அவுட் ஆனார். மைதானத்தின் அனைத்து பகுதிகளிலும் பந்துகளை விரட்டியடித்த அவர் 11 சிக்ஸர்கள் பறக்க விட்டார். 9 பவுண்டரிகளை நொறுக்கினார். அவரது ஸ்ட்ரைக் ரேட் 318 ஆக இருந்தது. ஆப்கானிஸ்தானுக்கு எதிரான இந்த டி20 தொடர் முழுவதும் அபிஷேக் சர்மா தடுத்து நிறுத்த முடியாத ஃபார்மில் இருக்கிறார். முதல் டி20 போட்டியில் 32 பந்துகளில் 82 ரன்களும், இரண்டாவது போட்டியில் 19 பந்துகளில் 39 ரன்களும் எடுத்த அவர், தற்போது 34 பந்துகளில் 108 ரன்கள் குவித்து மிரட்டியுள்ளார்.

34
விமர்சனங்களுக்கு பதிலடி

இந்த தொடருக்கு முன்பு அவர் ஃபார்மில் இல்லாமல் தவித்தார். இதனால் அவரை அணியில் இருந்து நீக்க வேண்டும் என்ற பேச்சுகளும் எழுந்தன. ஆனால், தனது பேட் மூலம் விமர்சனங்களுக்கு அவர் தகுந்த பதிலடி கொடுத்துள்ளார். அபிஷேக் சர்மா சதம் விளாசியவுடன் மைதானத்தில் சில நொடிகள் அமர்ந்து தியானம் செய்து சதத்தை கொண்டாடினார்.

உலக சாதனை பட்டியலில் இணைந்த அபிஷேக் சர்மா

உலகளவில் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அதிவேக சதம் விளாசியவர்கள் பட்டியலில் எஸ்டோனியா வீரர் சாஹில் சவுகான் உள்ளார். அவர் சைப்ரஸ் அணிக்கு எதிராக வெறும் 27 பந்துகளில் சதம் நொறுக்கி முதலிடத்தில் அமர்ந்துள்ளார். இப்போது 30 பந்துகளில் சதம் விளாசியது மூலம் அபிஷேக் சர்மா 2வது இடம் பிடித்துள்ளார். ரோகித் சர்மா 2017ம் ஆண்டு வங்கதேசத்துக்கு எதிராக 35 பந்துகளில் சதம் விளாசி இந்த பட்டியலில் 6வது இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

44
சர்வதேச டி20 (T20I) கிரிக்கெட்டில் அதிவேக சதம் அடித்தவர்கள் பட்டியல்

1. சாஹில் சவுகான் (எஸ்டோனியா)

பந்துகள்: 27

எதிர் அணி: சைப்ரஸ் (2024)

2. அபிஷேக் சர்மா (இந்தியா)

பந்துகள்: 30

எதிர் அணி: ஆப்கானிஸ்தான் (2026, டெல்லி)

3. ஜான் நிகோல் லாஃப்டி-ஈட்டன் (நமீபியா)

பந்துகள்: 33

எதிர் அணி: நேபாளம் (2024)

4. குஷால் மல்லா (நேபாளம்)

பந்துகள்: 34

எதிர் அணி: மங்கோலியா (2023)

5. டேவிட் மில்லர் (தென்னாப்பிரிக்கா)

பந்துகள்: 35

எதிர் அணி: வங்கதேசம் (2017)

6. ரோகித் சர்மா (இந்தியா)

பந்துகள்: 35

எதிர் அணி: இலங்கை (2017)

7. சுதேஷ் விக்ரமசேகரா (செக் குடியரசு)

பந்துகள்: 35

எதிர் அணி: துருக்கி (2019)

Read more Photos on
click me!

Recommended Stories