மேஷம்:
இந்த ராசிக்காரர்கள் தங்களுடைய லட்சியத்தை நோக்கி செல்ல உந்துதல் கொண்டவர்கள். வெற்றி எட்டி பிடிக்கும் அச்சமற்ற மனநிலை இவர்களுக்கு உண்டு. இவர்களிடம் தலைமைத்துவ பண்பும் உண்டு. போட்டி நிறைந்த உலகில் முன்னேறுவதற்கான வாய்ப்பை உருவாக்கிக் கொள்வார்கள். மேஷ ராசிக்காரர்கள் சவாலை சமாளிக்கவும், ஏற்று கொள்ளவும் பயப்படமாட்டார்கள். எல்லோருக்கும் முன்மாதிரியாக இருப்பார்கள். விடாமுயற்சியும், வைராக்கியமும், அசைக்க முடியாத கவனமும் கோடீஸ்வரர்களாக மாற்றும் காரணிகளாக உள்ளன.