மறந்தும் கூட இந்த 3 பொருட்களை பர்ஸில் வைக்காதீங்க..பண பிரச்சனை தலைவிரித்தாடும்..!!

First Published | Jun 22, 2023, 5:02 PM IST

உங்களுக்கு ஏற்படும் பண பிரச்சனையை தவிர்க்க வேண்டுமா? வாஸ்து சாஸ்திரம் படி, உங்கள் பணப்பையில் எதை வைக்க வேண்டும், எதை வைக்கக் கூடாது என்பதை குறித்து பார்க்கலாம்.

Purse

வாழ்க்கையில் நிதி நெருக்கடியை சந்திக்க யாரும் விரும்ப மாட்டார்கள். ஆனால், சில காரணங்களால் ஒவ்வொருவரும் வாழ்க்கையின் ஒரு கட்டத்தில் பணப் பற்றாக்குறையை சந்திக்க நேரிடுகிறது. சரி, பணம் சம்பாதிக்க ஒரே ஒரு வழி இருக்கிறது அது கடின உழைப்பு. ஆனால், பல சமயங்களில் கடினமாக உழைத்தும் நீங்கள் எதிர்பார்த்த அளவுக்கு பணம் சம்பாதிக்க முடியாமல் போய்விடும். அத்தகைய சூழ்நிலையில், வாஸ்து சாஸ்திரத்தில் குறிப்பிடப்பட்டுள்ள சில விஷயங்களை நீங்கள் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும். அந்தவகையில், வாஸ்து சாஸ்திரத்தில் பர்ஸில் எதை வைக்க வேண்டும், எதை வைக்கக் கூடாது என்று சொல்லப்பட்டுள்ளது. இவற்றை கடைபிடித்தால் பணம் சம்பந்தமான பிரச்சனைகளை சந்திக்க வேண்டியதில்லை.

சாவி:
நீங்கள் வாஸ்து சாஸ்திரத்தை நம்பினால், தவறுதலாக உங்கள் பணப்பையில் எந்த விதமான சாவியையும் வைத்திருக்கக்கூடாது. பெரும்பாலும் மக்கள் உங்கள் வீடு அல்லது அலுவலகத்தின் டிராயரின் சாவியை தங்கள் பணப்பையில் வைத்திருப்பார்கள். ஆனால் வாஸ்து படி அது சரியல்ல. சாவியை கைப்பையில் வைத்திருப்பதால் பண இழப்பு ஏற்படும். நீங்கள் அதை விரும்பவில்லை என்றால், சாவியை வைக்க வேறு இடத்தைக் கண்டறியவும். 

Tap to resize

ரசிது:
பலர் மளிகைக் கடையில் வாங்கிய பொருட்களின் பில் அல்லது மின்சாரக் கட்டணத்திற்கான பில் வைத்திருக்கிறார்கள். இப்படிச் செய்வதால் எதிர்மறைத் தன்மை அதிகரிக்கிறது. பணத்துடன் எந்த விதமான பில் அல்லது தேவையற்ற காகிதங்களை உங்கள் பர்ஸில் வைத்திருக்காமல் இருப்பது நல்லது. அது உங்களுக்கு பண இழப்பை ஏற்படுத்தும். இதனால் உங்களுக்கு எப்பொழுதும் பணத் தட்டுப்பாடு ஏற்படலாம். 

கடன் வாங்கிய பணம்:
நீங்கள் கடனாக வாங்கிய பணத்தை உங்கள் பர்ஸில் வைத்துக்கொள்ளாதீர்கள். திரும்பச் செலுத்த வேண்டிய பணத்தை உங்கள் பர்ஸில் வைத்திருப்பதால் எந்தப் பயனும் இல்லை. இப்படிச் செய்தால், உங்கள் கடன் தொகை அதிகரித்துக் கொண்டே இருக்கும். உங்களுக்கு நிதி இழப்பும் ஏற்படலாம். கடன் வாங்கிய பணத்தை பர்ஸைத் தவிர வேறு இடத்தில் வைப்பது நல்லது. மேலும் கடன் தொகையை நேரம் கிடைத்தவுடன் திருப்பி செலுத்திவிடுங்கள்.

இந்த 3 பொருட்களை பர்ஸில் வைத்திருக்க வேண்டும்:
உங்களுக்கு வாஸ்து மீது நம்பிக்கை இருந்தால், உங்கள் பர்ஸில் மகா தேவி லட்சுமியின் படத்தை கண்டிப்பாக வைத்திருக்க வேண்டும். இதன் மூலம், உங்கள் நிதி நிலை எப்போதும் வலுவாக இருக்கும். மறுபுறம், உங்கள் நிதி நிலைமையை மேம்படுத்த விரும்பினால், உங்கள் பணப்பையில் ஒரு வெள்ளி நாணயத்தை வைத்திருக்க வேண்டும்.

ஆலமரம் இலையில் லட்சுமி தேவி வாசம் செய்வதாக ஐதீகம். எனவே இந்த இலையை உங்கள் பர்ஸில் வைக்க முதலில் ஆலமரம் இலையை கங்கை நீரில் கழுவி, அதன் மீது குங்குமத்தால் 'ஸ்ரீ' என்று எழுத வேண்டும். அதன் பிறகு இந்த இலையை உங்கள் கைப்பையில் வைக்கவும். இதன் மூலம் உங்களுக்கு பணம் கிடைக்க வாய்ப்பு அமையும். அதுபோலவே துளசி இலைகளையும் கைப்பையில் வைத்துக் கொள்ளலாம்.

இதையும் படிங்க: இந்த பொருட்களை வீட்டில் இருந்து உடனே தூக்கி போடுங்க!! இல்லன்னா குடும்பத்தில் நிம்மதி போய்டும்...

இந்து மதத்தில் அரிசி மிகவும் மங்களகரமானதாக கருதப்படுகிறது. இது கடவுள் வழிபாட்டிலும் பயன்படுத்தப்படுகிறது. அரிசியை மஞ்சளில் போட்டு பர்ஸில் வைத்துக் கொண்டால் செலவுகள் குறையும், வருமானம் கூடும்.

Latest Videos

click me!