வீட்டின் சமையலறையில் அமர்ந்து சாப்பிடலாமா? ஜோதிடம் கூறுவது என்ன?

First Published | Jun 22, 2023, 2:30 PM IST

சமையலறையில் அமர்ந்து சாப்பிடுவது சரியா? ஜோதிடம் இதுகுறித்து என்ன சொல்கிறது என்பதை குறித்து இங்கு பார்க்கலாம்.

ஜோதிட சாஸ்திரத்தில் இப்படி எத்தனை விதிகள் நம் அன்றாட வாழ்க்கையோடு தொடர்புடையவை என்று தெரியவில்லை. அத்தகைய விதிகளில் உணவு தொடர்பான பல விஷயங்கள் உள்ளன. உணவை எப்போதும் சுத்தமான உடலுடனும் மனதுடனும் சாப்பிட வேண்டும், சாப்பிடுவதற்கு முன் மந்திரம் செய்ய வேண்டும், சாப்பிடுவதற்கு முன் கை மற்றும் கால்களை எப்போதும் கழுவ வேண்டும். அந்தவகையில், சமையலறையில் உட்கார்ந்து சாப்பிடுவது சரியா? ஆம், இன்றும் பல வீடுகளில் மக்கள் தங்களது சமையலறையில் அமர்ந்து உணவு உண்ணுகிறார்கள். மேலும் சிலரது வீடுகளில் சாப்பிடுவதற்கும் சமைப்பதற்கும் ஒரே இடம்  தான் உள்ளது. உண்மையில் சமையலறையில் சாப்பிடுவது சரியா? இந்த கேள்விக்கான பதிலை இப்போது பார்க்கலாம்.

சமையலறையில் அமர்ந்து சாப்பிடுவது ராகுவை மகிழ்விக்கும் வழி:

முற்காலத்தில் சமையலறையில் அமர்ந்துதான் உணவு உண்பார்கள். இன்றும் கிராமப்புறச் சூழலுக்குச் சென்றால் சமையலறையிலேயே உணவு உண்ணும் நிலை உள்ளது. உண்மையில் இது ஜோதிடத்தில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது மற்றும் இது ராகு கிரகத்துடன் தொடர்புடையதாக நம்பப்படுகிறது. ராகு மகிழ்ச்சியற்றவராக இருந்தால், அது நேரடியாக நம் வாழ்க்கையையும் ஆரோக்கியத்தையும் பாதிக்கிறது என்று நம்பப்படுகிறது. இந்த கிரகத்தை சாந்தப்படுத்தவும், சமாதானப்படுத்தவும், சமையலறையில் அமர்ந்து உணவு சாப்பிட அறிவுறுத்தப்படுகிறது. யாராவது சமையலறையில் அமர்ந்து சாப்பிட்டால், ராகுவின் தாக்கம் அவருக்கு ஒருபோதும் ஏற்படாது என்பது நம்பிக்கை. இந்த காரணத்திற்காக, பல வீடுகளில் சமையலறையுடன் சாப்பாட்டு பகுதியும் இருக்கும். 

Tap to resize

குடும்ப உறுப்பினர்களிடையே நல்லிணக்கம் அதிகரிக்கும்:

சமையலறையில் ஒன்றாகச் சாப்பிடுவது குடும்ப உறுப்பினர்களிடையே நல்லிணக்கத்தை ஏற்படுத்த உதவுகிறது. உண்மையில், பண்டைய காலங்களில், குடும்பங்களுக்கு இடையே நல்ல பிணைப்புக்கு ஒரு முக்கிய காரணம் என்னவென்றால், மக்கள் சமையலறையில் ஒன்றாக அமர்ந்து சாப்பிடுவது தான்.ஜோதிட சாஸ்திரத்தில் குடும்பத்தில் உள்ள கருத்து வேறுபாடுகளை நீக்க அனைவரும் செய்ய வேண்டியது என்னவென்றால், ஒன்றாக அமர்ந்து சாப்பிடுங்கள். நீங்கள் சமையலறையில் சாப்பிட்டால் அது உங்களுக்கும் குடும்பத்திற்கும் நல்லது. எனவே, சமையலறையில் தரையில் அமர்ந்து சாப்பிடுவதால் பல நன்மைகள் உள்ளன்.

ஜோதிட சாஸ்திரப்படி தரையில் அமர்ந்து உணவு உண்பது பலவகையில் பலன் தரும். நேரடியாக தரையில் அமர்ந்து உணவு உண்ணும் போது, உடல் பூமியுடன் நேரடியாக தொடர்பு கொள்கிறது மற்றும் அதன் அலைகள் உடலுக்குள் நுழைகின்றன. இந்த அலைகள் உடலுக்கு நேர்மறை ஆற்றலை வழங்குவதோடு, பல நோய்களிலிருந்து பாதுகாக்கவும் உதவுகின்றன. சமையலறைக்குள் தரையில் அமர்ந்து உணவு உண்ணும் போது, அந்த ஆசனம் சுகாசனம் என்று அழைக்கப்படுகிறது மற்றும் தசைகள் நீட்டப்படுவதால், உணவை ஜீரணிக்க எளிதாகிறது. அதே நேரத்தில், சமையலறையின் நேர்மறை ஆற்றலும் உடலில் நுழைகிறது.

இதையும் படிங்க: மறந்தும் இந்த திசையில் தலை வைத்து தூங்காதீங்க.. நோய்கள் பெருகும்.. அறிவியலும் வாஸ்துவும் சொல்லும் காரணங்கள்!!

உங்கள் வீட்டின் சமையலறைக்குள் அமர்ந்து உணவு உண்பதற்கு முறையான ஏற்பாடு இருந்தால், அங்கேயே சாப்பிட வேண்டும். ராகுவை மகிழ்ச்சியாக வைத்திருப்பதற்கும் குடும்ப உறவுகளைப் பேணுவதற்கும் இதைச் செய்வது நல்லது என்று கருதப்படுகிறது.

Latest Videos

click me!