இந்த வழிபாட்டை இன்று மாலை நேரம் 5 மணி முதல் இரவு 7 மணிக்குள் வீட்டில் செய்யலாம். இதை செய்வதால் வெற்றி, சக்தி, ஆனந்தம், செல்வம் போன்றவை கிடைக்கும். ஞானம் தேடி அலைபவர்கள் சதுர்த்தி தினத்தில் ஒளவையார் அகவல் என்னும் விநாயகர் அகவலை படியுங்கள். இதனால் உங்களுக்கு ஞானம் பிறக்கும். வினைகள் தீரும். எல்லாவித செல்வங்களும் கிடைக்கப் பெறுவீர்கள்.