அட்சய திருதியை அன்று 'பல்லியை' ஏன் பார்த்தால் நல்லதா?

Published : Apr 30, 2025, 03:48 PM ISTUpdated : Apr 30, 2025, 05:04 PM IST

அட்சய திருதியை அன்று பல்லியை காண்பதால் என்னாகும் என்பது குறித்து இந்தப் பதிவில் தெளிவாக காணலாம். 

PREV
14
அட்சய திருதியை அன்று 'பல்லியை' ஏன் பார்த்தால் நல்லதா?

Why Should You See Lizard on Akshaya Tritiya 2025 : அட்சய திருதியை என்றாலே தங்கம் வாங்குவது தான் அனைவர் நினைவுக்கும் வரும். இது இந்துக்களின் பண்டிகைகளில் குறிப்பிடத்தகுந்த முக்கியத்துவம் பெறுகிறது.  சித்திரை மாத சுக்ல பட்சம் 14வது நாள் அன்று அட்சய திரிதியை. இந்நாளில் செல்வத்தின் அருளை தரும் லட்சுமி தேவி, செல்வ அதிபதியான குபேரன் ஆகியோரை வழிபட்டால் செல்வம் பெருகும் என்பது ஐதீகம். இந்த ஆண்டு அட்சய திரிதியை இன்று கொண்டாடப்படுகிறது. 

24
அட்சய திருதியை 2025

தங்கம் வாங்க முடியாதவர்கள் மஞ்சள், உப்பு போன்ற பொருள்களை வாங்குவார்கள். இதனால் ஆண்டு முழுவதும் செல்வத்தின் கடவுள்களால் ஆசிர்வதிக்கப்படுவார்கள் என்று நம்பிக்கை காணப்படுகிறது. அப்படியிருக்க சித்திரையில்  வளர்பிறை திருதியையில் வரும் அக்ஷயதிருதியையில் வீட்டில் உள்ள பல்லிகளை கண்டாலும் ஒரு விசேஷ நன்மை உண்டு. 

34
அட்சய திருதியை 2025 பல்லி தரிசனம்

உங்கள் வீட்டில் நீங்கள் பல்லியை கண்டால் வாஸ்துபகவான் உங்களுக்கு லட்சுமி கடாட்சம் உண்டாகச் செய்வார். ஏனென்றால் அக்ஷயதிருதியை அன்று பல்லிகள் யார் கண்களிலும்படாமல் மறைந்திருக்க வேண்டும்  என்பதே வாஸ்துபகவானின் கட்டளையாகும். அதனால் பல்லிகளை இன்று காண்பதே கடினம். அதையும் மீறி பல்லிகளை இன்று கண்டால் ஏழெழு ஜென்ம பாவங்கள் நீங்கி ஆசிர்வதிக்கப்படுவீர்கள் என்பதே ஐதீகம். 

44
அட்சய திருதியை 2025 லட்சுமி அருள்

இந்த கட்டளையை மீறி இன்றைய தினம் யார் கண்ணிலாவது பல்லி தென்பட்டால் அந்த பல்லியானது காண்பரின் "ஜென்மானு ஜென்ம திரிஜென்ம பாபமும்- தரித்திர பீடைகள்" விலக்கி  அவர்களுக்கு லட்சுமி கடாட்சம் கிடைக்க அருள வேண்டும் என்பதே வாஸ்து பகவானின் கட்டளையாகும். அதனால் இன்று பல்லியை கண்டால் வணங்கிவிடுங்கள். நிச்சயம் செல்வத்தின் கடவுளான லட்சுமி தேவி அருள் கிடைக்கும்.

Read more Photos on
click me!

Recommended Stories