கடவுள் டாலரை ஏன் கழுத்தில் அணியக்கூடாது? அதை அணிந்து கொள்வதால் கெட்ட பலன்கள் கிடைக்கும் என்பது உண்மையா?

First Published Jun 1, 2023, 6:10 PM IST

நம்முடைய கழுத்தில் கடவுளின் டாலரை அணிவது தவறு என சாஸ்திரங்கள் கூறுகின்றன. கடவுளின் டாலரை ஏன் கழுத்தில் அணியக்கூடாது என்பதை இங்கு தெரிந்து கொள்ளலாம்.

இந்து மத சாஸ்திரங்களில் வாழ்வதற்கு நிறைய விதிகளை கொடுத்துள்ளது. அதைப் போலவே வழிகாட்டல்களும் உண்டு. அந்த வகையில் கடவுள் முகம் பொறித்த டாலர் அணிவதை தவிர்க்க வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது. அப்படியான டாலர் மட்டுமின்றி கடவுள் தொடர்பான பொருட்களையும் உடலில் எங்கும் அணியக்கூடாது. ஆனால் மாலை அல்லது ருத்ராட்சத்தை அணியலாம். 

கடவுளின் டாலரை அணிவது அசுபமாக கருதப்படுகிறது. ஏனென்றால் கடவுள் புனிதமானவர். ஆனால் நம்மால் நாள் முழுவதும் உடல் தூய்மையை பராமரிக்க முடிவதில்லை என்பதே இதற்குக் காரணம். நாம் மலம் கழிப்பது முதல் பல வழிகளில் அசுத்தங்களைச் சந்திக்கிறோம். சில நேரம் அழுக்கு கைகளால் டாலரை தொட நேரிடலாம். தூங்கும் போது, ​​வளைந்து நெளிந்து தூங்குவதால், லாக்கெட் வாயில் ஒட்டிக்கொள்கிறது. 

திருமண உறவில் ஈடுபடும் போது டாலர் அணிவதை தவிர்க்க வேண்டும். மதம் தொடர்பான எந்தப் பொருளையும் அணிந்துகொண்டு இல்லற வாழ்வில் ஈடுபடக் கூடாது. ஆகவே தான் இதை தூய்மையற்ற செயல் என்கிறது சாஸ்திரம். நமது உடல் தூய்மையற்றதாக இருந்தால், அணிந்திருக்கும் டாலர் அசுத்தமாகிவிடும். டாலர் புனிதம் அழிந்தால் அதில் உள்ள சக்திகளும் அழிக்கப்படுகின்றன. இதனால் கடவுள் டாலர் வெறும் ஃபேஷன் பொருளாக கழுத்தில் கிடக்கிறது. 

இதையும் படிங்க: மிதுனத்தில் சூரியன் பெயர்ச்சி: இந்த 4 ராசியினருக்கு அதிர்ஷ்டம், பண ஆதாயம் கிடைக்கும்...!

புனித நூல்களின்படி, தூய்மையற்ற டாலர் எதிர்மறையை பரப்புகிறது. இதனால் கிரகங்கள் கோபமடைகின்றன.நேர்மறைக்காக அணியும் கடவுளின் டாலர் எதிர் நிலைகளை உருவாக்குகிறது. ஒரு நபரின் பதற்றம் அதிகரிக்கத் தொடங்குகிறது. ராகுவினால் வாழ்வில் பக்க விளைவுகள் உண்டு. ஆகவே கடவுளின் டாலரை கழுத்தில் அணிவதை தவிர்த்தால் மங்களம் உண்டாகும். 

இதையும் படிங்க: பணக்கஷ்டம் தீர! சனி தோஷம் விலக.. கருப்பு மிளகு பரிகாரம்!!!

click me!