வீட்டில் ஓயாத பிரச்சனை? உப்பு ஜாடி சரியான இடத்தில் இருக்கா? இல்லேன்னா இதுதான் காரணம்..

First Published | Jun 16, 2023, 5:05 PM IST

vastu tips for salt: வீட்டில் நாம் பயன்படுத்தும் சில பொருட்கள் தவறான திசையில் அல்லது இடத்தில் வைக்கும் போது வீட்டில் எதிர்மறையான காரியம் நடக்கும் என்று வாஸ்து சாஸ்திரம் கூறுகிறது. அது என்னென்ன பொருட்கள் அவற்றை எங்கு வைக்க வேண்டும் என்பதைக் குறித்து இங்கு பார்க்கலாம்.

நம் அனைவரது வீட்டிலும் தினந்தோறும் சமையலுக்கு பயன்படுத்தப்படும் அத்தியாவசியமான ஒரு பொருள் உப்பு. உப்பு ஒருவரது வீட்டில் உள்ள லெட்சுமி கலாட்சியத்தை கெடுக்கும் என்று ஐதீகம் உள்ளது. இந்த உப்பானது லக்ஷ்மி அம்சத்தில் எப்போதும் முதலிடத்தில் தான் இருக்கும். நம் வீட்டை சுத்தம் செய்ய பயன்படுத்தும் துடைப்பம் இரண்டாவதும் அவற்றை அள்ளும் குப்பை தொட்டி மூன்றாகும். இவை மூன்றையும் நம் வீட்டில் எந்த இடத்தில் முறையாக வைக்க வேண்டும் என்பதை குறித்து இங்கு பார்க்கலாம்.

பலரது வீட்டில் இம்மூன்று பொருட்களையும் எப்போதுமே சரியான இடத்தில் வைத்திருப்பர். அதனால் அவர்கள் எப்போதுமே அதிர்ஷ்டசாலிகளாகத்தான் இருப்பார்கள். ஆனால் சிலரது வீட்டில் இடப்பற்றாக்குறை காரணமாக இந்த பொருள்களை தவறான இடத்தில் வைப்பர். இதனால் அவர்களது வீட்டில் கஷ்டங்கள் எப்போதுமே சூழ்ந்து இருக்கும் என்று வாஸ்து சாஸ்திரம் கூறுகிறது. எனவே, எனவே எந்த இதயத்தில் எந்தெந்த பொருட்கள் இருக்க வேண்டும் என்பதை நீங்கள் அறிய விரும்புகிறீர்களா? வாங்க தெரிஞ்சிகலாம்.

Tap to resize

சமையலறையில் உப்பு ஜாடியை எங்கு வைப்பது?
பெண்கள் சமைத்துக் கொண்டிருக்கும் போது அவர்களது வலது கை பக்கம் உப்பு ஜாடி இருக்க வேண்டும். அதுவும் கை தொடும் தூரத்தில் தான் இருக்க வேண்டும். எட்டி எடுக்குமாறு இருக்கக் கூடாது. குறிப்பாக உயரத்தில் உப்பு ஜாடி இருக்கக் கூடாது.
 

உப்பு ஜாடி சுத்தம் செய்யும் முறை:
மாதம் ஒரு முறைக்கு உங்கள் வீட்டு உப்பு ஜாடியை கண்டிப்பாக சுத்தம் செய்ய வேண்டும். இவ்வாறு செய்ய முடியவில்லை என்றால் ஆறு மாதத்திற்கு ஒரு முறையாவது சுத்தம் செய்யுங்கள். உப்பு ஜாடியை மாலை 6 மணிக்குள் கழுவி முடிக்கவும் குறிப்பாக செவ்வாய் வெள்ளி கிழமைகளில் உப்புச் சாடியை எக்காரணத்தைக் கொண்டும் கழுவாதீர்கள்.

இந்த இடத்தில் மட்டும் குப்பை தொட்டி துடைப்பம் வைக்காதீங்க:
உங்கள் வீட்டின் தலைவாசலுக்கு நேராக குப்பைத்தொட்டியும் துடைப்பமும் இருக்கக் கூடாது அதுபோலவே தலைவாசலுக்கு பின்பக்கமும், வீட்டில் உள்ள வராண்டாவிலும், கட்டிலுக்கு அடியிலும் இவற்றை வைக்க கூடாது.

இதையும் படிங்க: Vastu tips: நீங்கள் வெளிநாட்டில் வசிப்பவரா? உங்க வீட்டில் செழிப்பு வர இந்த செல்லப்பிராணிகளை வளங்க..!

இந்த திசையில் குப்பை தொட்டியும் துடைப்பமும் வைக்காதீங்க:
உங்கள் வீட்டில் உள்ள எந்த ஒரு அறையிலும், குப்பைத் தொட்டியை வடக்கு திசையில் வைக்க கூடாது. ஏனெனில் வடகிழக்கு ஈசானிய மூலை எனப்படும். எனவே மரணம் கூட இந்த திசையில் குப்பை தொட்டியின் துடைப்பமும் வைக்க வேண்டாம்.

இங்கு சொல்லப்பட்ட படி இம்மூன்றையும் உங்கள் வீட்டில் தவறான இடத்தில் வைத்தீர்களானால் உடனே அவற்றை சரியான இடத்தில் வைக்கவும். இவ்வாறு செய்வதன் மூலம் உங்கள் வீட்டில் சில மாற்றங்கள் ஏற்படுவதை நீங்களே காண்பீர்கள்.

Latest Videos

click me!