
'சிதம்பர ரகசியம்' என்றால் என்னவென்று எப்போதாவது யோசித்ததுண்டா? புரியாத புதிர்களைக் குறிக்க நாம் பயன்படுத்தும் இச்சொல், சிதம்பரம் நடராஜர் கோயில் கருவறையில் உள்ள மறைபொருளை அடிப்படையாகக் கொண்டது. திரை விலக்கப்படும் போது காலியாய் தெரியும் வெளிச்சம், அதன் பின்னிருக்கும் ஆகாயத் தத்துவம், ஆன்மிக மற்றும் புராணக் கதைகளின் முழு உண்மையை இங்கு அறியலாம்!
இதையும் படிங்க : Milk : பாலை திரும்பத் திரும்ப கொதிக்க வைக்கிறீங்களா? இந்த விஷயம் தெரிஞ்சுக்கோங்க!
இந்து தத்துவத்தின் ஐந்து பூதங்களில் (நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம்) ஒன்றான ஆகாயத் தலமாகத் திகழ்வது தமிழ்நாட்டின் சிதம்பரம் நடராஜர் கோயில். மற்ற நான்கு தலங்களில் சிவன் லிங்க வடிவத்தில் காட்சியளித்தாலும், சிதம்பரத்தில் அவர் அருவமாக, அதாவது ஆகாய வடிவில் (வெற்றிடமாக) அருள் பாலிக்கிறார்.
இங்குள்ள கருவறையில் ஆனந்த தாண்டவ மூர்த்தியான நடராஜர் எழுந்தருளியுள்ளார். கருவறையில் நடராஜர் விக்கிரகத்திற்கு வலதுபுறம் ஒரு திரை தொங்கும். பூசாரி அந்தத் திரையை விலக்கி தீபாராதனை காட்டும்போது, அங்கே விக்கிரகமோ லிங்கமோ இருக்காது; தங்கத்திலான வில்வ இலை மாலை மட்டுமே தொங்கும். கண்ணுக்குப் புலப்படாத அந்த வெற்றிடமே "சிதம்பர ரகசியம்" என்று போற்றப்படுகிறது.
இதையும் படிங்க : Chewing Gum : சூவிங் கம் மெல்லுவதால் இவ்ளோ நன்மைகளா? இவ்ளோ நாள் இது தெரியாமப் போச்சே!
கண்ணுக்குத் தெரியாத அந்த வெற்றிடம்தான் 'சிதம்பர ரகசியம்'. கடவுள் ஒரு குறிப்பிட்ட உருவத்துக்குள்ள அடங்குறவர் இல்லை, அவர் உருவமற்றவர், எல்லா இடத்திலும் நிறைந்தவர், ஆகாயம் போல எல்லையற்றவர்னு சொல்றதுதான் இதோட அர்த்தம். 'சித்'னா அறிவு அல்லது ஞானம், 'அம்பரம்'னா ஆகாயம். அதாவது, ஞானமே ஆகாய வடிவத்துல இருக்குங்கிற தத்துவத்தை இது உணர்த்துதுனு புராணங்கள் சொல்லுது. இங்க கருவறையில இருக்கிற திரையை, மனிதனோட 'அறியாமை' அல்லது 'மாயை'க்கு அடையாளமா நினைக்கிறாங்க. நம்மகிட்ட இருக்கிற அறியாமைங்கிற திரை விலகினாதான், உள்ளே இருக்கிற பரம்பொருளோட ஞானத்தை உணர முடியும்னு இது காட்டுது. கடவுளை வெளியில தேடாம, நமக்குள்ளேயே தேடணும்ங்கிறதுதான் இந்தத் தலம் சொல்ற செய்தி.
இதையும் படிங்க : Human Body : நம்ம உடம்பில் இந்த 7 உறுப்புகள் இல்லாமலேயே வாழ முடியுமாம்!
இந்தத் தலத்துக்குப் பின்னாடி ஒரு சுவாரஸ்யமான புராணக் கதை இருக்கு. பழங்காலத்தில், தாருகாவனத்துல வாழ்ந்த சில ரிஷிகளுக்கு, தங்களோட தவம், மந்திர சக்தி மேல பயங்கர அகங்காரம் இருந்துச்சு. தங்களாலதான் இந்த உலகமே இயங்குது, கடவுள் தேவையில்லைனு அவங்க நினைச்சாங்க. அவங்களோட அகங்காரத்தை அடக்க, சிவன் பிட்சாடனர் வடிவத்துலயும் (மிக அழகான தோற்றம்), விஷ்ணு மோகினி வடிவத்துலயும் அந்த வனத்துக்குள்ள போனாங்க. ரிஷிகளோட மனைவிகள் பிட்சாடனரோட அழகால ஈர்க்கப்பட்டாங்க. அதே நேரம், ரிஷிகள் மோகினியைப் பார்த்து தங்களோட தவத்தை மறந்தாங்க. உண்மை தெரிஞ்சதும், கோபப்பட்ட ரிஷிகள் சிவனை அழிக்க ஒரு யாகம் செஞ்சாங்க. அந்த யாகத்துல இருந்து பாம்புகள், புலி, அப்புறம் 'அபஸ்மாரன்'ங்கிற அரக்கனை உருவாக்கி சிவன் மேல ஏவி விட்டாங்க.
இதையும் படிங்க : Relatives : பொறாமைப்படுற சொந்தக்காரங்களை எப்படி டீல் பண்றது? சூப்பர் பிளான்!
சிவன் அந்தப் பாம்புகளைத் தனக்கு ஆபரணமா போட்டுக்கிட்டார், புலியோட தோலை ஆடையா உடுத்திக்கிட்டார். அறியாமையோட சின்னமான அபஸ்மாரன்ங்கிற அரக்கனைத் தன்னோட வலது காலால மிதிச்சு, ஆனந்த தாண்டவம் ஆடினார். இதைப் பார்த்த ரிஷிகளுக்கு ஞானம் பிறந்து, தங்களோட அறியாமையை விட்டுட்டு சிவனிடம் சரணடைஞ்சாங்க. இந்த ஆனந்த தாண்டவம் படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல்ங்கிற அஞ்சு தொழில்களையும் குறிக்குதுனு புராணங்கள் சொல்லுது. அதுக்கப்புறம், பதஞ்சலி மற்றும் வியாக்ரபாதர் முனிவர்களோட வேண்டுதலுக்காக, சிவன் இந்த சிதம்பரத்துல (தில்லை வனம்) எப்பவும் ஆனந்த தாண்டவம் ஆடிக்கிட்டே, அருவமா ஆகாய வடிவத்துல இருப்பேன்னு வாக்கு கொடுத்தார். வியாக்ரபாதர், சிவனுக்குப் பூஜை செய்ய நல்ல பூக்களைப் பறிக்க புலியின் கால்களைப் பெற்றார்னு தல புராணம் சொல்லுது.
இதையும் படிங்க : Oil-Free Poori : பூரி சுட தண்ணி போதும்! எண்ணெய் வேண்டாம்! சத்தான பூரி ரெசிபி!
கோயில்ல திரைக்குப் பின்னாடி மறைந்திருக்கிற இந்த ஆழமான தத்துவம் காரணமா, வெளியே சொல்ல முடியாத ரகசியத்தையோ, இல்ல யாருக்கும் எளிதில் புரியாத விஷயத்தையோ 'சிதம்பர ரகசியம்'னு சொல்றது மக்கள் வழக்குல பழக்கமாயிடுச்சு. ஆனா, கோயில் சம்பிரதாயப்படி இது வெறும் மறைக்கப்பட்ட ரகசியம் இல்லை. வெற்றிடத்திலும்கூட தெய்வீகம் இருக்குங்கிற பெரிய உண்மையைச் சொல்ற ஒரு ஆன்மிக அடையாளம்னு பண்டிதர்கள் சொல்றாங்க.
இதையும் படிங்க : Weight Loss : 21 நாளில் ஈஸியா 7 கிலோ குறைக்கலாம்! உங்களுக்கான டயட் பிளான் இதோ!