பிஸியான வாழ்க்கையில் உடல் எடை அதிகரிப்பால் கஷ்டப்படுகிறீர்களா? எவ்வளவோ முயன்றும் உடல் கொழுப்பு குறையவில்லையா? உங்களுக்கான எளிய வழிகள் இதோ!
விரதம் இருப்பது மிகவும் பயனுள்ள முறை. உங்கள் உடல்நிலைக்கு ஏற்ப இதை முயற்சி செய்யலாம். ஆனால், விரதத்துடன் சேர்த்து, நீங்கள் சாப்பிடும் உணவிலும் கவனம் செலுத்துவது அவசியம்.
காலை 10 மணிக்கு பழங்கள், பச்சைக் காய்கறிகளுடன் நாளைத் தொடங்குங்கள். இனிப்பு, வறுத்த உணவுகளைத் தவிர்த்து, கஞ்சி, ஓட்ஸ் மற்றும் முளைகட்டிய பயறுகள் போன்ற லைட்டான உணவுகளை சாப்பிடலாம்.
மதியம் 12 மணி முதல் 1 மணிக்குள் மதிய உணவைச் சாப்பிடுங்கள். உங்கள் உணவில் புரதம், நார்ச்சத்து, இரும்புச்சத்து, தாதுக்கள் மற்றும் வைட்டமின்கள் நிறைந்திருக்க வேண்டும்.
மாலை 3-4 மணி அளவில், லைட்டான ஸ்நாக்ஸ் சாப்பிடுங்கள். வறுத்த சோயா சங்க்ஸ், உப்மா, வறுத்த தாமரை விதை (மக்கானா), வறுத்த கொண்டைக்கடலை, பாப்கார்ன் மற்றும் பேக்டு சிப்ஸ் சாப்பிடலாம்.
இந்த டயட் பிளானை பின்பற்றுவதன் மூலம், வெறும் 21 நாட்களில் 7 கிலோ வரை எளிதாகக் குறைக்கலாம். இதனுடன், உடற்பயிற்சி மற்றும் நடைப்பயிற்சி செய்தால், இன்னும் சிறந்த பலன்களைப் பெறலாம்.