Fasting: இடைப்பட்ட கால விரதம்: உடல்நலத்தை மேம்படுத்த எளிய வழிகள்
health-fitness Apr 28 2026
Author: Priya Velan Image Credits:Getty
Tamil
இடைப்பட்ட கால விரதம்:
இடைப்பட்ட கால விரதம் (Intermittent Fasting): இடைப்பட்ட கால விரதம் என்பது வெறும் உணவு முறை மட்டுமல்ல, அது ஒரு ஆரோக்கியமான வாழ்வியல் மாற்றம்.
Image credits: Getty
Tamil
எடையைக் குறைத்தல் :
நீண்ட நேரம் உணவு உட்கொள்ளாமல் இருக்கும்போது, உடலில் தேங்கியுள்ள கொழுப்பை எரித்து சக்தியாக மாற்றுகிறது. இதனால் உடல் எடையும், தொப்பையும் இயற்கையாகவே குறைகின்றன.
Image credits: Getty
Tamil
சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்துதல் :
இந்த விரத முறை இரத்தச் சர்க்கரையைக் குறைத்து, இன்சுலினைச் சீராக்குகிறது. இது டைப்-2 நீரிழிவு வராமல் தடுக்கவும், பாதிப்பு உள்ளவர்களுக்கு அதைக் கட்டுப்படுத்தவும் உதவுகிறது.
Image credits: Getty
Tamil
இதய பாதுகாப்பு :
இரத்த அழுத்தம் மற்றும் கெட்ட கொழுப்பைக் (LDL) குறைப்பதன் மூலம் இதய நோய்கள் ஏற்படும் அபாயத்தை இது பெருமளவு குறைக்கிறது.
Image credits: Getty
Tamil
மூளை மற்றும் நரம்பு மண்டல ஆரோக்கியம் :
விரதத்தின் போது மூளையில் புதிய நரம்பு செல்கள் உருவாகத் தூண்டப்படுகின்றன. நினைவாற்றலை அதிகரிப்பதோடு, முதுமையில் ஏற்படும் மறதி நோய்களிலிருந்தும் (Alzheimer's) நம்மைப் பாதுகாக்கிறது.
Image credits: Getty
Tamil
வீக்கத்தைக் குறைத்தல் (Inflammation):
நாள்பட்ட வீக்கமே நோய்களுக்குக் காரணம். இடைக்கால விரதம் ஆக்சிஜனேற்ற அழுத்தத்தைக் குறைத்து, செல்கள் தங்களைப் புதுப்பித்துக்கொள்ள (Autophagy) உதவுகிறது.
Image credits: Getty
Tamil
இளமையை பாதுகாத்தல்:
உடலில் உள்ள பழுதடைந்த செல்களை நீக்கி, புதிய செல்கள் உருவாக இந்த முறை உதவுகிறது. இந்த 'சுய சுத்திகரிப்பு' நிகழ்வு நீண்ட நாள் இளமையாகவும், சுறுசுறுப்பாகவும் வைத்திருக்க உதவுகிறது.
Image credits: Getty
Tamil
எளிமையான வாழ்வியல் முறை:
மற்ற டயட் முறைகளைப் போல இதற்கென பிரத்யேக உணவுகளைத் தேட வேண்டிய அவசியமில்லை. நீங்கள் உண்ணும் நேரத்தை மட்டும் முறைப்படுத்துவதன் மூலம் உங்கள் ஆரோக்கியத்தை எளிதாக மேம்படுத்த முடியும்.