vinayagar chaturthi: விநாயகருக்கு 21 இலைகள் படைப்பது ஏன்? காரணம் தெரிந்தால் ஆச்சரியப்படுவீங்க!

Published : Sep 10, 2026, 02:27 PM IST

vinayagar chaturthi: விநாயகர் சதுர்த்தி வழிபாட்டில் 21 வகையான இலைகளை விநாயகருக்கு சமர்ப்பிக்கும் வழக்கம் முக்கியமானதாகக் கருதப்படுகிறது. இந்த 21 என்ற எண்ணுக்கு என்ன சிறப்பு, இதன் பின்னணியில் உள்ள பாரம்பரிய காரணங்கள் என்ன என்பதை தெரிந்துகொள்ளலாம்.

PREV
14
விநாயகருக்கு 21 வகையான இலைகள்

விநாயகர் சதுர்த்தி என்றாலே வீடு முழுவதும் பூஜை வாசனை, விநாயகரின் சிலை அலங்காரம், கொழுக்கட்டை, சுண்டல் என பண்டிகைக் களைகட்டத் தொடங்கிவிடும். குறிப்பாக, விநாயகரை வழிபடும்போது மலர்களுடன் பல்வேறு வகையான இலைகளையும் பக்தர்கள் சமர்ப்பிப்பது வழக்கம்.

அதிலும் 21 வகையான இலைகளைக் கொண்டு விநாயகரை அர்ச்சிப்பது மிகவும் சிறப்பானதாகக் கருதப்படுகிறது. ஆனால், “ஏன் 21 இலைகள் மட்டும்? இந்த எண்ணுக்கு என்ன சிறப்பு? என்பதை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

24
விநாயகர் சதுர்த்தி

ஆவணி மாதம் வளர்பிறை சதிர்த்தி நாளில் விநாயகர் அவதரித்ததாக கூறப்படுகிறது. ஆண்டுதோறும் இந்நாளையே விநாயகர் சதுர்த்தி திருவிழாவாக நாடு முழுவதும் சிறப்பாக கொண்டாடி வருகிறோம். அந்த வகையில், இந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தி வருகிற செப்டம்பர் 14-ம் தேதி திங்கட்கிழமை கொண்டாடப்பட உள்ளது.

34
விநாயகருக்கு சாத்தப்படும் 21 வகையான இலைகள்

பல்வேறு பாரம்பரியங்களில் இலைகளின் பெயர்களில் சிறிய மாறுபாடுகள் காணப்படுகின்றன. பொதுவாக விநாயகர் பூஜையில் குறிப்பிடப்படும் 21 இலைகள்:

  1. மாசி இலை
  2. வில்வ இலை .
  3. வன்னி இலை
  4. அருகம்புல்
  5. ஊமத்தை இலை
  6. இலந்தை இலை
  7. தத்தூர இலை
  8. கரிசலாங்கண்ணி இலை .
  9. நாயுருவி இலை
  10. மருத இலை
  11. மாதுளை இலை
  12. தேவதாரு இலை
  13. அரச இலை
  14. அகத்தி இலை
  15. மாவிலை
  16. நெல்லி இலை
  17. எருக்கு இலை
  18. புளிய இலை
  19. கண்டங்கத்திரி இலை
  20. கிளுவை இலை
  21. முல்லை இலை .
44
ஏன் 21 இலைகள் மட்டும்? 21 என்ற எண்ணுக்கு என்ன சிறப்பு?

விநாயகர் வழிபாட்டில் 21 என்ற எண்ணுக்கு பாரம்பரியமாக ஒரு தனிச்சிறப்பு இருப்பதாகக் கருதப்படுகிறது. இதன் அடிப்படையில்தான் விநாயகரை வழிபடும்போது 21 முறை நாமங்களைச் சொல்லி, 21 அருகம்புல் கற்றைகளை வைத்து, 21 வகையான இலைகளைச் சமர்ப்பிப்பது பக்தி வழக்கமாக பல இடங்களில் பின்பற்றப்படுகிறது. இதனால் 21 என்பது விநாயகர் வழிபாட்டில் தொடர்ந்து பயன்படுத்தப்படும் ஒரு புனித எண்ணாகக் கருதப்படுகிறது.

இப்படி 21 இலைகளை வைக்கும் இந்த வழிபாடு “ஏக விம்சதி பத்ர பூஜை” என்றும் அழைக்கப்படுகிறது. இதில் “ஏக விம்சதி” என்பது 21 என்றும், “பத்ர” என்பது இலை என்றும் பொருள்.

21 இலைகளைச் சமர்ப்பிப்பது வெறும் ஒரு சடங்கு மட்டுமல்ல. இயற்கையும் இறைவனின் படைப்பே; அதை மதித்து, நன்றியுடன் இறைவனுக்கு அர்ப்பணிக்க வேண்டும் என்ற கருத்தையும் இது எடுத்துக்காட்டுகிறது.

விநாயகர் சதுர்த்தி நாளில் பெரிய அளவில் பூஜைப் பொருட்களை வாங்க முடியாதவர்கள்கூட, கிடைக்கும் இயற்கையான இலைகளைக் கொண்டு பக்தியுடன் வழிபடலாம் என்பதும் இதன் அழகான ஆன்மிக கருத்தாக பார்க்கப்படுகிறது.

மேலும், ஒவ்வொரு இலையையும் தனித்தனியாக விநாயகருக்கு சமர்ப்பித்து வழிபடுவது, பூஜையில் பக்தர்களின் கவனம், மன ஒருமைப்பாடு மற்றும் இறைநம்பிக்கையை அதிகரிக்கும் ஒரு வழிபாட்டு முறையாகவும் பார்க்கப்படுகிறது.

குறிப்பு: முக்கியமாக, இலைகளின் பெயர்களும் எண்ணிக்கையும் குடும்ப வழக்கம், பிராந்திய சம்பிரதாயம் மற்றும் பூஜை முறைக்கு ஏற்ப மாறுபடலாம்.

Read more Photos on
click me!

Recommended Stories