Veerapandi Gowmariamman Temple Cure For Smallpox : தேனி வீரபாண்டி கௌமாரியம்மன் கோயிலின் சிறப்புகள் என்ன? அம்மை நோய் மற்றும் கண் கோளாறுகள் நீங்க இந்த கன்னி தெய்வத்தை எப்படி வழிபட வேண்டும்? என்று பார்க்கலாம்.
கண் நோய் உள்ளவர்களுக்கும் அம்மை நோயால் பாதிக்கப்படுபவர்களுக்கும் கன்னி தெய்வமாக இருந்து காக்கும் கௌமாரியம்மன் தீராத நோயை தீர்க்கும் பெண் தெய்வம் சிறப்புகளை பற்றி இந்த தொகுப்பில் விரிவாக பார்க்கலாம். வரலாறு: வைகை வனத்தில் கொடிய அரக்கன் ஒருவன் வாழ்ந்துவந்தான். அவன் தேவர்களுக்கும், முனிவர்களுக்கும், மக்களுக்கும் மிகுந்த தொந்தரவு கொடுத்து வேள்விகள், ஆராதனைகள் எதுவும் நடக்க முடியாமல் தடுத்துவந்தான். அவனை அழிப்பதற்காக பராசக்தி இந்த வனத்திற்கு வந்தாள்.
25
Smallpox Eye Diseases
வந்த இடத்தில் சிவபூஜை செய்ய வேண்டி ஒரு லிங்கத் திருமேனியைப் பிடித்துவைத்து பூஜை செய்ய ஆரம்பித்தாள். அந்த ஈசனுக்குக் கண்ணீசுவரர் என்கிற திருநாமம் இட்டு வழிபட்டாள். அப்போது அங்கு வந்த அசுரன் பார்வதி தேவியின் பூஜையைக் கலைக்க முயன்றான். அவளை அங்கிருந்து அப்படியே தூக்கிச் செல்ல முயல ஆத்திரம் கொண்ட தேவி, கையில் பூஜைக்காக வைத்திருந்த அருகம்புல்லை அவனை நோக்கி வீசினாள். அம்பிகையின் அருளால் அருகம்புல் அம்பு ஆனது. அரக்கனை இரு துண்டுகளாகப் பிளந்தது. அரக்கன் மாண்டு போனான். இதனால் மகிழ்ந்த தேவர்கள் பார்வதியை கன்னித்தெய்வமாக்கி 'கௌமாரி'யாக அத்தலத்திலேயே கோயில்கொண்டு அனைவருக்கும் அருள வேண்டும் என்று வேண்டிக்கொள்ள தேவி அங்கேயே சுயம்புவாக எழுந்தருளிக் கோயில்கொண்டாள்.
35
Veerapandi Gowmariamman Temple
கண் நோய் தீர்க்கும் கௌமாரியம்மன் என்று குறிப்பிடப்படுவது தேனி மாவட்டத்தில் உள்ள வீரபாண்டி கௌமாரியம்மன் கோயிலாகும்; இந்தத் தலத்தில் கண் நோய்கள், தீராத பிரச்சனைகள், அம்மை போடுதல் போன்ற பிரச்சினைகளில் இருந்து நீங்க பக்தர்கள் கௌமாரியம்மன் கோயிலில் வந்து வழிபடுவார்கள். கௌமாரியம்மன் சப்த கன்னிகளில் ஒருவராக உருவம் எடுத்துள்ளார் என்றும் இவர் கன்னி தெய்வமாகவும் கும்பிடப்படுகிறது.
45
பார்வை பெற்ற பாண்டிய மன்னன்:
மதுரையை தலைமையிடமாகக் கொண்டு ஆட்சி புரிந்து வந்தவன் வீரபாண்டிய மன்னன்.ஒருமுறை மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியான பெரியாறுஅணைப் பகுதிப் பக்கம் வேட்டைக்கு வந்தான். வேட்டை ஏதும் கிடைக்காத மன்னன் மயங்கி கிரங்கி விழுந்த போது திடீரென இரண்டு கண்களின் பார்வையும் செயலிழந்து விடுகின்றன.அவனது கனவில் இறைவன் தோன்றினார்.
மகனே உலகைக் காக்கும் உன் அன்னை உமாதேவி அம்சம் பொருந்திய மாரியம்மன், நான் எழுந்தருளியிருக்கும் ஸ்தலத்தின் அருகே அமர்ந்து தவமிருக்கிறாள். அவளை வணங்கினால் அவளது அருள்பார்வை உன்மீது படும். அவளுடன் சேர்ந்து நானும் உனக்கு பார்வை தருகிறேன்" என்று கூறி மறைந்தார்.
கண்ணீஸ்வரனது அருள் வாக்குப்படியே அம்மனை மன்னனும் வேண்டினான். பார்வையும் கிடைக்கப்பெற்றான். அதன் பிறகு அந்த கன்னிமார் தெய்வமான கௌமாரியம்மன் கோயில் கட்டி வழிபட்டு வந்தார் மன்னனுக்கு பார்வை கிடைத்ததால் மன்னன் கலரில் கவுமாரியம்மனுக்கு வீரபாண்டி மன்னனால் உருவாக்கப்பட்டதால் இந்த கோயிலுக்கு வீரபாண்டி என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது.
55
Theni Veerapandi Gowmariamman Temple
கோவிலின் சிறப்புகள்: கன்னிமார் தெய்வங்களுள் ஒருவரான கௌமாரியம்மன் ஒரு கன்னி தெய்வம் என்பதால் பக்தர்கள் அம்மனுக்கு பட்டி எடுத்து வரும் பழக்கம் இங்கு உண்டு. ஒவ்வொரு சித்திரத் திருவிழாவிலும் எட்டு நாட்கள் திருவிழாக்கள் நடைபெறுமாம் வெகு சிறப்பாக இந்த திருவிழா நடப்பதாக கூறப்படுகிறது. உளுந்து வரும் வேண்டுபவர்களுக்கு இந்த கோயில் மிகச் சிறப்பு. குழந்தை பெறுவதற்காக தொட்டிலை கட்டுவது இங்கு பாரம்பரியத்தில் ஒன்றாக இருந்து வருகிறது. அம்மை நோய் தீருவதற்கும் அங்கு கொடுக்கப்படும் தீர்த்தம் மிகவும் சக்தி வாய்ந்ததாக கூறப்படுகிறது. கண் பிரச்சனைகள் கண் பார்வை குறைவு உடையவர்கள் கண் பார்வை இல்லாதவர்கள் அனைவரும் இந்த கோயிலுக்கு சென்று வந்தால் கண் பார்வை கிடைக்கும் என்று கூறப்படுகிறது. கௌமாரியம்மன் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு பட்டுடத்தி மக்களுக்கு அருள் தருவதாக இங்கு கூறப்படுகிறது.