
அமாவாசைகளில் மிக முக்கியமான அமாவாசைகளில் ஒன்றாக இருக்கும் தை அமாவாசைக்கு பல்வேறு சிறப்புகள் உள்ளது. முன்னோர்கள் வழிபாட்டிற்கு மிகவும் ஏற்ற தை அமாவாசை, சிவ வழிபாட்டிற்கும் ஏற்றதாகும்.தை அமாவாசை என்பது முன்னோர்களை வழிபடுவதற்கு முக்கிய நாளாகும். மகாளய அமாவாசையில் நமக்கு ஆசி வழங்குவதற்காக பித்ரு லோகத்தில் இருந்து, பூமிக்கு வரும் முன்னோர்கள், தை அமாவாசை அன்று மீண்டும் பித்ருலோகத்திற்கு செல்வதாக சொல்லப்படுகிறது. அமாவாசை தினம் என்பது நிலா மறைந்திருக்கும். தை அமாவாசை, ஆடி அமாவாசை மற்றும் புரட்டாசி அமாவாசை மிகவும் சிறப்புடையது.
தை மாதத்தில் சூரிய பகவான் மகர ராசியில் பிரவேசிக்கின்றார். ஜோதிட ரீதியாக சூரியன் பிதுர்காரகள் என்றும், சந்திரன் மாதுர்காரகன் என்றும் அழைக்கப்படுகிறார்கள். அமாவாசை என்பது மாதுர்காரகனும், பிதுர்காரகனும் ஒன்றாக இருக்கும் காலம் ஆகும். பிதுர்கார்களான சூரியன் மகர ராசியில் பிரவேசிக்கும் மாதமான தை மாதத்தில் வரும் அமாவாசை தினம் மிகுந்த முக்கியத்துவத்தைப் பெறுகின்றது, மேலும், ஆடி மாதம் வரும் அமாவாசையன்று மூதாதையர்களை வரவேற்கும் நாம், தை அமாவாசையன்று அவர்களுக்கு விடைகொடுத்து அனுப்பி வைக்கிறோம். பெரும்பாலும், சனிக்கிழமைகளில் வரும் அமாவாசை தினம் மிகவும் சிறப்பு வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.
முன்னோர்களின் ஆசி பெறுதல்: தனது பெற்றோரையும், குலதெய்வத்தையும், முன்னோர்களையும் வணங்க வேண்டும், மற்ற தெய்வங்களை வணங்கி எவ்விதப் பலனுமில்லை. அப்படிப்பட்ட சிறப்பு வாய்ந்த நமது முன்னோர்களை ஆடி, புரட்டாசி, தை மாத அமாவாசை தினங்களில் தர்ப்பணம் கொடுத்து வழிபடுவது மிகுந்த நற்பலனைத் தருவதாகும். மேலும், அமாவாசை தினத்தன்று எறும்பு, பசு, காகம், நாய், பூனை மற்றும் அந்தணர்களுக்கு உணவளித்து உபசரித்து அவர்களின் பசியைப் போக்கினால், கடவுளின் ஆசியோடு, முன்னோர்களின் ஆசியும் பூரணமாக நமக்குக் கிடைக்கும். வீடுகளில் நம் முன்னோர்களின் போட்டோக்களை வைத்து அவர்களுக்கு பிடித்த உணவுகளை படையல் செய்து பிறகு காக்கைக்கு மற்ற உங்களுக்கு படைத்துவிட்டு நம் விரதத்தை கடைப்பிடித்து வந்தால் நாம் முன்னோர்களால் ஆசிர்வதிக்கப்படுவோம் என்று கூறப்படுகிறது.
அமாவாசையன்று உலகை இயக்கும் சூரியனும் சந்திரனும் ஒன்று சேர்வதால் ஒரு காந்த சக்தி ஏற்படுகிறது. சூரியனும் சந்திரனும் ஒன்று சேர்வதால் சந்திரன் மறைந்து விடும். அதாவது நிலா மேகத்துக்குள் மறைந்து கருப்பாக இருக்கும். அமாவாசை மூன்றாம் நாளே பிறை நிலவாக தெரியும். பெரும்பாலும் அம்மாவாசை யில் பிறந்த குழந்தைகள் மிகவும் சுட்டித்தலமாகவும் கூர்மையான அறிவுடனும் இருப்பார்கள் என்று கூறப்படுகிறது. அமாவாசை அன்று நிறைய விபத்துகளும் நடைபெறுவதாக கூறப்படுகிறது.
சூரியனும், சந்திரனும் ஒரே ராசியில் இணைவதுஅமாவாசை திதியாகும். அமாவாசை தோறும் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பவர்களின் குடும்பம் அமைதி பெற்று, மென்மேலும் சிறந்து விளங்கும் என்று கூறுகிறபடுகிறது. முன்னோர்கள் இறந்த நேதி தெரியாதவர்கள் ஆடி அமாவாசை, தை அமாவாசை, மகாளய அமாவாசை தினங்களில் திதி, தர்ப்பணம் கொடுப்பது உகந்தது. மூதாதையர்கள் உயிருடன் வாழ்ந்தபோது, அவர்களை சரிவர கவனிக்காததால், அவர்கள் அடையும் துன்பங்கள் யாவும், பாவத்தின் வடிவில் சுவனிக்கத் தவறியவர்களை சேர்வதாக கூறப்படுகிறது. பாவங்களில் பெரிய பாவம் பித்ருக்களின் கர்மாவை நிறைவேற்றாமல் இருப்பதுதான். மறைந்துபோன நம்மை பெற்ற தாய், தந்தை, தாத்தா, பாட்டிகள் தான் 'பித்ரு'க்கள் என்று அழைக்கப்படுகின்றனர்.
தை அமாவாசை தினத்தில் முன்னோர்களை நினைத்து தர்ப்பணம் கொடுக்க வேண்டும். அதன்பின் வீட்டிற்கு வந்து, முன்னோர்களின் படத்தை வடக்கு அல்லது கிழக்கு திசையில் வைத்து அதற்கு சந்தனம், குங்குமம் இட்டு, துளசி மாலை சூட்ட வேண்டும். படத்திற்கு முன்பாக முன்னோர்கள் பயன்படுத்திய பொருட்கள், அவர்களுக்குப் பிடித்த உணவுகளை படைத்து, குத்துவிளக்கேற்றி வைக்க வேண்டும். தை அமாவாசைக்கு முன்தினம் கோதுமை தவிடு, அகத்திக்கீரை ஆகியவற்றை ஊறவைத்து, அதை அமாவாசை அன்று பசுவிற்கு தானமாக வழங்க வேண்டும்.
முன்னோர்களுக்கு தர்ப்பணம் அளித்து, வீட்டில் வழிபாடு செய்து முடிக்கும் வரை வீட்டில் தெய்வ சம்பந்தமான பூஜைகளை ஒத்தி வைப்பது நல்லது. தர்ப்பணம் செய்து முடிந்த பின்னர் தினசரி செய்ய வேண்டிய பூஜைகளைச் செய்யலாம். அமாவாசை தினங்களில் மாமிசம் சாப்பிடக்கூடாது. தர்ப்பணம் செய்யும் போது கறுப்பு எள்ளை, மற்றவர்களிடம் இருந்து கடன் வாங்கக்கூடாது. நீரில் இருந்து கொண்டு கரையில் தர்ப்பணம் செய்யக்கூடாது. அதைப்போல் கரையில் இருந்து கொண்டு நீரிலும் தர்ப்பணம் செய்யக்கூடாது. கிழக்கு இசை பார்த்தபடி அமர்ந்துதான் தர்ப்பணம் செய்ய வேண்டும். அன்றைய தினம் வீட்டின் வாசலின் கோலாமிடுதல் கூடாது.