Sabarimala Makara Jyothi 2026 : மகர சங்கராந்தி அன்று பொன்னம்பல மேட்டில் தோன்றும் மகர ஜோதிக்கும் ஐயப்பனுக்கும் உள்ள தொடர்பு என்ன? கோடிக்கணக்கான பக்தர்கள் தரிசிக்கும் இந்த ஜோதியின் சிறப்புகள் பற்றி இங்கே காணலாம்
மகரஜோதி என்பது சபரிமலை ஐயப்பன் கோயிலில் மகர சங்கராந்தி அன்று பொன்னம்பலமேடு மலையில் தோன்றும் தெய்வீக ஜோதி தான் மகரஜோதிஇது ஐயப்பனின் அருள் மற்றும் தரிசனத்தின் அடையாளமாகக் கருதப்படுகிறது, மேலும் இது பந்தள அரண்மனையிலிருந்து வரும் திருவாபரணப் பெட்டிகள் சபரிமலைக்கு வரும் அதே நேரத்தில், காந்தமலையில் ரிஷிகளால் ஏற்றப்படும் ஜோதியாகவும், வானில் தெரியும் மகர நட்சத்திரமாகவும் கருதப்படுகின்றது.
24
மகரஜோதியின் வரலாறு:
சிவனுக்கும் மோகினி ஐயப்பன் விஷ்ணுவின் அவதாரம் மூலம் பிறந்தார். உலக நலனுக்காக தவம் இருப்பதாகவும், மகர சங்கராந்தி நாளில் ஒருமுறை கண்களைத் திறந்து அருள் புரிவதாகவும் உறுதியளித்தார். அப்போது, பொன்னம்பலமேட்டில் ஒரு நட்சத்திரமாக தோன்றுவதாகவும், திருவாபரணங்கள் அணிந்து காட்சியளிப்பதாகவும் கூறினார்.
34
திருவாபரணப் பெட்டி:
பந்தள அரண்மனையின் ராஜா ஐயப்பனை வளர்த்து வந்தார். அவர் நான் ராஜாவாக இருக்க எனக்கு மனம் இல்லை நான் மலை மேல் சென்று தவம் புரிய போறதாக கூறிவிட்டு சபரிமலையில் சென்று தவம் புரிவதாக அமர்ந்து விட்டார். பிறகு வளர்த்த பாசத்தால் பந்தல அரண்மனை ராஜா ஐயப்பனை வருடத்திற்கு ஒருமுறை பார்ப்பாராம் பார்ப்போம் பொது அரண்மனையில் இருந்து தங்க ஆபரணங்களை எடுத்து வந்து ஐயப்பனுக்கு அணிவித்து வழிபட்டு செல்வார் .
இதனை காலம் காலமாக கடைப்பிடித்து வருகின்றனர் கேரளா மக்கள். ஆகையால் பந்தல அரண்மனையில் இருந்து வரும் வைரம் பதித்த கிரீடம், தங்க நகைகள் அடங்கிய திருவாபரணப் பெட்டிகள், மகரஜோதி நாளில் சபரிமலைக்கு கொண்டு வரப்படுகின்றன. இவை ஐயப்பனுக்கு அணிவிக்கப்பட்டு, ஜோதி தரிசனத்தின் போது மகர ஜோதிக்கு இணையாகக் கருதப்படுகிறது. இவருக்கு ஆபரணங்கள் இருந்து தீபம் காட்டும் போது பொன்னம்பலம் மேட்டில் மகர ஜோதி தெரியும் என்றும் மூன்று முறை ஜோதி விட்டு விட்டு எரியும் என்றும் கூறப்படுகிறது.
44
மகரஜோதியை காண வரும் பக்தர்கள்:
சபரிமலை ஐயப்பனை பக்தர்கள் எந்த அளவிற்கு காண்பதற்கு தவம் இருக்கிறார்களோ அதே போல் மகரஜோதியும் காண்பதற்கு பக்தர்கள் கோடி கணக்கில் வருகின்றார்கள். ஏனென்றால் மகரஜோதி அன்று அந்த ஐயப்பனின் நேரில் காட்சியளிப்பது போல் இருக்கும் என்றும் கூறப்படுகிறது. நம் கஷ்டங்களையும் துன்பங்களையும் ஐயப்பனிடம் சொல்லி முறையிட்டால் தங்களது கஷ்டத்தை தீர்த்து வைப்பான் என்று ஒவ்வொரு பக்தர்களும் மகரஜோதியை காண்பதற்கு தவமிருந்து மலையேறுகின்றனர். ஜோதி ஏற்றும் பொழுது சுவாமியே சரணம் ஐயப்பா என்று கோஷம் முழங்கும்படி பக்தர்களின் உணர்ச்சியை வெளிப்படுத்தி அந்த ஜோதியை கையெடுத்து கும்பிட்டு தம் மனமார்ந்த கஷ்டங்களையும் நஷ்டங்களையும் கண் முன் நிற்கும் ஐயப்பனிடம் வேண்டிக்கொள்கின்றனர்.